28
Mar
மருத்துவ காப்பீடுகளை வழங்கும் ரெலிகேர் நிறுவனம் சூப்பர் மெடிகிளைம் என்ற பெயரில் புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் அபாயகரமான நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு காப்பீடு தரும் வகையில் இந்த மருத்துவ காப்பீட்டுத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் அஷுதோஷ் சக்தி ஷ்ரோத்ரியா தெரிவித்தார். இந்த காப்பீட்டு திட்டத்தில் கேன்சர் மெடிகிளைம், ஹார்ட் மெடிகிளைம், கிரிடிகல் மெடிகிளைம், ஆபரேஷன் மெடிகிளைம் என நான்கு வகையான காப்பீட்டு வசதிகள் உள்ளன. கேன்சர் மெடிகிளைம் திட்டத்தில் ஆரம்ப நிலை புற்றுநோய் முதல் மிக முற்றிய நிலை வரையிலான சிகிச்சைக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. ஹார்ட் மெடிகிளைம் திட்டத்தில் 17 வகையான ஆபத்தான அறுவை சிகிச்சைகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. குறிப்பாக ஹார்ட் அட்டாக், பைபாஸ் சர்ஜரி உள்ளிட்டவற்றுக்கு இந்த காப்பீடு தீர்வாக அமையும். கிரிடிகல் மெடிகிளைம் காப்பீட்டு திட்டமானது புற்றுநோய், ஹார்ட் அட்டாக், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பக்கவாதம் உள்ளிட்டவற்றுக்கு…
