வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… ரயில்வேயில் கிளார்க், தட்டச்சர் பணி: காலியிடங்கள் 1688!

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1688 கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து…

RRB NTPC Recruitment for 1688 Posts

ரயில்வேயில் கிளார்க், தட்டச்சர் பணி – இந்தியன் ரயில்வே

Updated On :

இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1688 கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரங்களை பார்ப்போம்…

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 7/2026

பணி: Commercial – Ticket Clerk

காலியிடங்கள்: 700

தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

சம்பளம்: மாதம் ரூ.21,700

பணி: Accounts Clerk – Typist

காலியிடங்கள்: 200

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிப்பதுடன் கணினியில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் +2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

பணி: Junior Clerk – Typist

காலியிடங்கள்: 600

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிப்பதுடன் கணினியில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் மற்றும் பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் +2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

பணி: Trains Clerk

காலியிடங்கள்: 188

தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

சம்பளம்: மாதம் ரூ.19,900

வயதுவரம்பு: 1.1.2027 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

மண்டல வாரியான காலிப்பணியிட விவரங்கள்:

அகமதாபாத்- 26, அஜ்மீர் 1 124, பெங்களூரு – 45, போபால் – 59, புவனேஸ்வர் – 40, பிலாஸ்பூர் – 20, சண்டிகர் – 78, சென்னை – 168, கோரக்பூர் – 72, குவஹாத்தி – 49, ஜம்மு-ஸ்ரீநகர் – 51, கொல்கத்தா – 329, மால்டா – 23, மும்பை – 140, முசாஃபர்பூர் – 7, பாட்னா – 43, பிரயாக்ராஜ் – 149, ராஞ்சி – 75, செகந்திராபாத் – 72, சிலிகுரி – 43, திருவனந்தபுரம் – 75

தேர்வு செய்யப்படும் முறை: ஆண்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், தட்டச்சு திறன், கணினியில் பணிபுரியும் திறன், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் பொது அறிவு, கணிதம், பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு போன்ற பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். பிளஸ் 2 தரத்தில் கேள்விகள் இருக்கும்.

ஆன்லைன் எழுத்துத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். இரண்டு கட்ட தேர்வுகளுக்கான பாடத்திட் டம், மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள், இடம் பற்றிய விவரங்கள் இ-நுழைவுச் சீட்டுமூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.தேர்வுக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.500. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ,250. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.rrb.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.11.2026 விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related posts:

எம் ஜி இசட் எஸ் எலக்ட்ரிக் எஸ் யூ வி காரை களமிறக்கியுள்ளது. !

நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது!

"'தணல்' படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி "- நடிகை லாவண்யா திரிபாதி!

டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை !

கேரளா பல திறமையான நடிகர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்து வருகிறது...அந்த வரிசையில் நடிகை சம்ரிதி தாரா!

பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில், ஸ்டைலிஷ் ஹீரோ கிச்சா சுதீப் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் !

திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்