இப்போது த்ரில்லர் வகை படங்கள் தமிழில் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. விதார்த் நடிப்பில், ஷாஜி சலீம் இயக்கத் தில், ‘லாந்தர்’ என்ற திரில்லர் படம் வெளியாகி உள்ளது.

கோவை மாநகரில் உதவி காவல் ஆணையராக இருக்கும் அரவிந்த் (விதார்த்) மிக நேர்மையான அதிகாரி. கோவை மாநகரில் ஒரு நாள் இரவில் கருப்பு ரெயின் கோட் போட்ட ஒரு சைக்கோ மனிதன் ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி கண்ணில் படுவோரை எல்லாம் அடித்து கொலை செய்து வருகிறான். இவனைப் பிடிக்கும் முயற்சியில் சில காவல் அதிகாரிகளும் படுகாயம் அடைகிறார்கள். ஒருவனை சந்தேகப்பட்டு விரட்டி செல்கிறது காவல் துறை. விரட்டிச் செல்லும்போது அந்த நபர் காவல் துறையினரின் வாகனம் மோதி இறந்து விடுகிறார். ஆனால், இவர் கொலைகாரன் இல்லை என்று தெரிய வருகிறது. பட்டுக்கோட்டையில் கொலைகாரனுக்கு ஒரு லீட் கிடைக்கிறது. இந்த லீடை வைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது காவல் துறை. அந்த கொலையாளியை பிடிக்க காவல் துறையால் முடிந்ததா என்பதுதான் மீதி கதை.

படம் தொடங்கியதும் கள்ளக்குறிச்சி சம்பவத்தை நினைவுபடுத்துற மாதிரி டூப்ளிகேட் சரக்கை பிடிக்கிறார் விதார்த். ஆனா அதுக்கப்புறம். கதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக நகர்கிறது திரைக்கதை. அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு படம் பார்க்கும்போது ஏற்படுகிறது.  இடைவேளைக்கு பின் உட்கார்ந்து பார்த்தால் இரண்டாவது பாதி ஆரம்பித்த உடனேயே கொலைகாரன் யார் என்று சொல்லிவிடுவதால் படத்தில் சுவாரசியம் குறைந்து விடுகிறது. சரி பரவாயில்லை, இதன் பிறகாவது ஏதாவது ட்விஸ்ட் இருக்குமா என்று பார்த்தால் அதுவும் பெரிதாக இல்லை. பிளாஷ் பேக் காட்சிகள் பல படங்களில் பார்த்த விஷயங்களை நினைவு படுத்துகிறது.

படத்தை ஓரளவு ரசிக்க வைப்பதற்கான காரணங்களாக இருப்பது ஞானசௌந்தரின் ஒளிப்பதிவும், பிரவீனின் இசையும்தான். இரண்டும் மிக சிறப்பாக இருக்கிறது. விதார்த் போலீஸ் அதிகாரியாகவும், ஒரு அன்பான கணவனாகவும் நன்றாக நடித்துள்ளார். கணவனாக ஓகே. ஆனா போலீஸ் ஆபிசருக்குண்டான மிடுக்கு,கம்பீரம்,ஒரு கெத்து மிஸ்ஸிங். சாதாரண போலீஸ்காரர் மாதிரியாக வந்து போறார். சஹானா, ஸ்வேதா என இரண்டு ஹீரோயின்கள் படத்தில் இருந்தாலும் சிறப்பான நடிப்பை தந்திருப்பது மஞ்சுவாக நடித்திருக்கும் சஹானாதான். காதல், மன அழுத்தம், கோபம் என பல உணர்வுகளை சிறப்பாகத் தந்துள்ளார்.

விதார்த் படம் என்றால் வித்தியாசமான கதை இருக்கும், படம் மிக சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் படம் பார்க்க வந்தவர்களை ஏமாற்றி விட்டது இந்த, ‘லாந்தர்’ என்றே சொல்லலாம். திரில்லர் படத்திற்குத் தேவையான டீடைல் மற்றும் ட்ரீட்மென்ட் இப்படத்தில் குறைவாகவே உள்ளது. திரைக்கதை சரியாக இருந்திருந்தால் இந்த ‘லாந்தர்’ நன்றாக இருந்திருக்கும்.ஒரு திரில்லர் கதையை திரில்லிங்காக கொண்டு போகாமல் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் இயக்குனர்?

Related posts:

'கடலில் கட்டுமரமாய்' விவசாயிகளுக்கான திரைப்படம் !

நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து “கிங்டம்” திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்!

“சந்திரமுகி 2” படத்திலிருந்து, கங்கனா ரனாவத்தின் ‘சந்திரமுகி’ கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ (REMATCH) பூஜையுடன் தொடக்கம்!

மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது!

இந்தியாவில் ஏத்தர் லிமிட்டெட் எடிஷன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !

ஒண்டிமுனியும் நல்லபாடனும் --விமர்சனம் |

'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்கான  டிக்கெட் புக்கிங்கில் புக் மை ஷோ செயலியில் 1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய...