OPS ஐ நீக்க முடியுமா முடியாதான்னு ஆளாளுக்கு கேள்வி கேட்டுட்டிருந்தாங்க. நீக்க முடியும்னு காட்டிட்டாருல்ல எடப்பாடி.இந்த நேரத்தில் பழைய சம்பவத்தை கொஞ்சம் பின்னோக்கிப் பாக்கலாம்.
‘நான் தான்’ அதிமுகன்னு ஜானகியும், ஜெயலலிதாவும் பிரிந்து நடத்திய யுத்தத்தில் இரட்டை இலை சின்னம் 1988 இறுதியில் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் ஜானகிக்கு இரட்டைப் புறாவும், ஜெயலலிதாவுக்கு சேவலும் சின்னமாக கிடைச்சு, இரண்டு அணிகளும் தேர்தல்ல போட்டியிட்டாங்க.
ஜானகி Vs ஜெயலலிதான்னு இருந்தாலும், அது RMV Vs ஜெயலலிதாங்கிற யுத்தமாகத் தான் பார்க்கப்பட்டது. அந்த தேர்தலில் 27 MLA க்களை பெற்று 22.37% வாக்குகளைப் பெற்றிருந்தார் ஜெயலலிதா. ஜானகி அணி 9.19% வாக்குகளையும் 2 தொகுதிகள்லயும் ஜெயிச்சிருந்தாங்க.
ஆக, அதிமுகவின் 31% வாக்குகள் இரண்டாக பிரிந்ததாலத் தான் திமுக ஆட்சிக்கு வந்தது இது எல்லோருக்கும் தெரியும்.. ஒரு கட்டத்தில் ஜானகி, தான் பெற்ற 9.19% வாக்குகளுக்கான அணியை அப்படியே ஜெ.விடம் ஒப்படைத்தார். ஜெயலலிதா RM வீரப்பன் இணைப்புக்கு பிறகே இரட்டை இலை சின்னம் திரும்ப கிடைச்சது. இந்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.
இதே நிலை மீண்டும் 2017ல் வந்தது. சசிகலாவையும், டிடிவியையும், அவரால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராகவும் ஓபிஎஸ் கிளர்ந்தெழுந்தார். மீண்டும் அதிமுக சின்னம் முடங்கியது.
தான் முதல்வராக வேண்டும் என்று காலியான R.K.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை வந்தது. டிடிவி அணி தொப்பியும், ஓபிஎஸ் அணி மின்விளக்கையும் பெற்று தேர்தலில் போட்டியிட்டது.
இன்னைக்கு இபிஎஸ்ஸோடு இருக்கிற எல்லாரும் அன்னைக்கு டிடிவியோடு இருந்தாங்க. முதல்வர் இபிஎஸ் கூட டிடிவிக்குத்தான் பிரச்சாரம் செய்தாரு. ஆனால் யாருடைய பலமும் நிரூபிக்கப்படாமல் அந்தத் தேர்தல், இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பின்னாடி இபிஎஸ் Vs டிடிவி அணி உருவானது; ஓபிஎஸ் – இபிஎஸ் இரண்டு பேரும் இணைஞ்சாங்க.
ஓபிஎஸ் – இபிஎஸ் இணைஞ்சவுடனே , டிடிவி தன் ஆதரவு எம்எல்ஏக்களை பிரிச்சிக்கிட்டு வெளியேறினாரு. அதனால் அவங்க நீக்கப்பட்டாங்க. மீண்டும் வந்த RK நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் – இபிஎஸ் இணைஞ்சதால இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட்டது, குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு, இரட்டை இலை – உதயசூரியன் இரண்டையும் எதிர்த்து ஜெயிச்சாரு டிடிவி.தினகரன்.
பின்னாடி 2019ல், நீக்கப்பட்ட MLA க்களுக்கு இடைத்தேர்தல் கொண்டு வரப்பட்டு, அதில் ஜெயிச்சு அதிமுக ஆட்சியை தக்க வைச்சதைத் தான் நாம் பார்த்தோம்.இதில் ஜெ Vs ஜாவுக்கும்,ஓபிஎஸ் Vs இபிஎஸ்க்கும் உள்ள நுணுக்கமான வேறுபாடு இங்கேதான் இருக்குது.இரட்டை இலை சின்னம் முடங்கி வேறு சுயேட்சை சின்னங்களில்,ஒரு பொதுத்தேர்தலில் இருவரும் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிச்சாங்க ஜெயலலிதாவும் – ஜானகியும்.
அதில் செல்வி.ஜெயலலிதாவால்தான் கட்சியை நடத்த முடியும்னு ஜானகி அணி ஜெயலலிதா அணியோடு இணைந்து இரட்டை இலையை பெற்றது.ஆனால் ஒரு தேர்தலில் இபிஎஸ் – ஓபிஎஸ் இரு அணிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முன்பே,சசிகலா – டிடிவி தலைமைமை ஏற்க விரும்பவில்லைங்கிற பொதுப்புள்ளியில் இணைஞ்சது.ஓபிஎஸ் – இபிஎஸ் இணைஞ்சதுக்கு அப்புறம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலையை வழங்கியது தேர்தல் ஆணையம்.
ஆக, தன் பலத்தை நிரூபித்து, தன் தலைமை ஏற்றுக் கொண்டவர்களுடன் ஜெயலலிதா, இரட்டை இலையை பெற்றதும், ஓபிஎஸ் பலத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்கி இபிஎஸ் அணி, இரட்டை இலையை மீட்டதும் ஒரே நிகழ்ச்சி கிடையாது.2017ல் மீண்ட இரட்டை இலை சின்னத்திற்கு இபிஎஸ் மட்டும் உரிமை கோர முடியாது. யாருடைய பலமும் நிரூபிக்கும் முன்னே இரட்டை இலையை ஓபிஎஸ் உதவியுடன் மீட்டு, ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொண்டாகிவிட்டது.
நாடாளுமன்றம், இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி, சட்டமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி என எல்லா தேர்தலுக்கும், இருவரும் கையெழுத்திட்டே இரட்டை இலையை கொடுத்தாங்க. அதற்கு வந்த வாக்குகளுக்கு எல்லாம், இருவரும் உரிமை கோரும் விதமே அதிகாரம்இருக்குது.
அதிமுகவின் சட்டவிதிகளின் படி பொதுச் செயலாளரை பொதுக்குழுவோ, நிர்வாகிகளோ சேர்க்க – நீக்கவெல்லாம் முடியாது. திமுகவில் கருணாநிதி அப்படித்தான் தன்னை எளிமையா நீக்கிட்டாரென யோசித்து, சிறப்பான சட்டங்களை வகுத்து வைச்சிருக்காரு எம்ஜிஆர்.பொதுச் செயலாளரையோ அல்லது அதற்கு நிகராக மாற்றப்பட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியையோ பொதுக்குழுவால் நீக்கவோ, நியமிக்கவோ முடியாது. அப்படி நியமிக்கப்பட்ட பொது செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டிடிவி நீக்கம், செல்லுபடியானது.
ஆனால், ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, சட்டவிதிகளின்படி தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். அதை பொதுக்குழு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு விதி என்றாலும், பொதுக்குழுவே செல்லுமா – செல்லாதா என்கிற கேள்விகள் எழுந்த பிறகு, அவைத்தலைவர் நியமனம் செல்லுமாங்கிற குழப்பமும் வந்த பிறகு, தேர்தல் ஆணையத்தில் கொடுத்த ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் நிற்கும்.
ஒருவேளை ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் காலாவதி ஆனது செல்லும் என்றால் கூட ,அவைத்தலைவர் நியமனம் கேள்விக்குள்ளாகும். அதிமுக சட்ட விதிகளின் படி, பொதுச் செயலாளர் – துணை பொதுச் செயலாளர், அடுத்தது பொருளாளர்; அதற்கடுத்து தலைமை நிலைய செயலாளர் என்பது தான் அதிகார நிலை.
ஆகவே, பொதுச் செயலாளர் பதவிக்கு நிகரான ஒருங்கிணைப்பாளர் / இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆனால் கூட, ஓபிஎஸ்க்கு அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்ட பொருளாளர் பதவியை யாராலும் நீக்க முடியாது. இபிஎஸ் தலைமை நிலையச் செயலாளராக இருந்தாலும், பொருளாளர் பதவிக்கு பாதி அதிகாரம் போய்விடும்.
அதை, தற்காலிக பொதுசெயலாளர் சசிகலாவாலேயே நீக்க முடியவில்லை அப்போது.திமுக – அதிமுகவில் மிக முக்கியமான அதிகார பதவி பொருளாளர் பதவி தான்.அதுவும் அதிமுக சட்டவிதிகளின்படி, தலைமைப் பதவியான பொதுச் செயலாளர் / துணை.பொ.செ அல்லது ஒருங்கிணைப்பாளர் / இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலி என்றால், அது வரை நிர்வாகம், பொருளாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளருக்கு மாறும்..
அப்படிப் பார்த்தாலும்,அதிமுக கட்சி 50/50 ஓபிஎஸ் – இபிஎஸ்க்குத்தான்.ஓபிஎஸ்ஸை யாராலும் நீக்க முடியாது..நீக்கி அறிவித்தாலும் செல்லாது.அவர் கையெழுதில்லாமல் கடந்த ஜூலை 9 ந்தேதி நடந்த உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கொடுக்க முடியாம போய்டுச்சி. அதிமுகவினர் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிடும் சூழல் வந்தது.அதனால தேர்தல அதிமுக புறக்கணிச்சது.
முதல்வர் வேட்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி போல இதை விட்டுக்கொடுக்க மாட்டார் ஓபிஎஸ். காரணம், இரட்டை இலை சின்னம்தான் வாக்குகளை பெற்றது, அந்த சின்னத்திற்கு தன்னுடைய கையெழுத்து வேண்டும்; அதை, தான் விட்டுக் கொடுக்காத வரை, யாராலும் பறிக்க முடியாது என்பதை புரிந்திருக்கிறார்..இறுதியாக இந்த பிரச்சனை ஒரு நிலையைத்தான் அடையும். அது, முறையாக பொதுச் செயலாளருக்கு தேர்தல் வைப்பது. அல்லது ஒருங்கிணைப்பாளருக்கு தேர்தல் வைத்து தேர்ந்தெடுப்பது.
அப்படி நகர்ந்தால் பலர் அந்த தலைமை பதவிக்கு போட்டி போடலாம். அதில் ஒன்றிய, நகர, மாவட்ட, மாநகர என எல்லா கிளைகளிலும் பெட்டியை வைத்து, மினி தேர்தலையே ஆணையம் நடத்தும். இதில் ஓபிஎஸ் – இபிஎஸ் மட்டுமல்ல செங்கோட்டையன் கூட போட்டியிடலாம். இப்படி ஒரு நிலை வருவதற்கு முன்பே ஓபிஎஸ்ஸை நீக்கிடலாம்னு நினைத்தால், அது கானல் நீராகவே போகும்… பார்ப்போம்.
ஓபிஎஸ் என்ன கணக்கு போடுறாருன்னா எடப்பாடி பழனிசாமிகிட்ட எக்காரணங்கொண்டும் கட்சி போய்டக்கூடாதுங்கிறதுல ஓபிஎஸ் தீவிரமாக இருந்து வர்ற நிலையில், இது சம்பந்தமான தகவல்கள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி விட்டிருக்குது. ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருது.. இது தொடர்பா எடப்பாடி டீம் ஒரு பக்கமும், ஓபிஎஸ் டீம் மறுபக்கமும் தனித்தனியாக விவாதிச்சுகிட்டிருக்காங்க. மாத்தி மாத்தி நிர்வாகிகளை நீக்கிட்டு வர்றாங்க.இரட்டை தலைமை மட்டுமே இருக்கணும்ங்கிற ஓபிஎஸ்ஸின் பேச்சு, அவ்வளவாக கட்சிக்குள் எடுபடாத நிலைமைதான் இருக்குது. இதுக்கிடையே ஒரு சீக்ரெட் டீல் ஒண்ணை, எடப்பாடி டீம் ஓபிஎஸ் தரப்பிடம் பேசி வருவதாக செய்திகள் கசிஞ்சு வருது அது என்னன்னா.. அதாவது, “இந்த முறை எடப்பாடிக்கே சீட்டை விட்டுக்கொடுத்திடுங்க. இப்போதைய சூழலில், கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானவர்கள் அவர் பக்கம்தான் நிறைய இருக்காங்க.. சட்டசபை தேர்தலில் நிறைய எம்எல்ஏக்களை பெற்று தந்தது தென்மண்டலங்கள்தான்.. கொங்குவையும் தாண்டி, தென்மண்டலங்களிலும் எடப்பாடிக்கான ஆதரவு பலமா இருக்குது.. 80 சதவீதத்துக்கும் மேல் மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் தான் இருக்காங்க.. 4 வருட ஆட்சியில் பெரிசா சர்ச்சையில் சிக்காமல், நல்ல பெயரை வாங்கியிருக்காரு. இப்படிப்பட்ட பிளஸ் பாயிண்ட்டுகள் உள்ளவர் கையில் கட்சி தலைமையை தந்தால்தான், அது எடுபடும்.. திமுக போன்ற கட்சிகளையும் சமாளிக்க முடியும்.. ஒருவேளை, யாருக்கு ஆதரவுங்கிற வாக்கெடுப்பை, கையில் எடுத்தால், உங்களுக்குதான் ஓட்டுக்குள் குறைவாக விழும்.. இதனால், இருக்கும் மதிப்பும் குறைய வாய்ப்புண்டு.. அந்த அளவுக்கு போகாமல், எடப்பாடியையே தலைவராக இருக்க வழிவிடுங்கள்.. உங்கள் மகனுக்கு டெல்லியில் சீட் விவகாரம் உட்பட அனைத்தையும் கட்சி பார்த்து கொள்ளும்” என்று பேசினார்களாம்.. ஆனால், ஓபிஎஸ் அதற்கு கறாராக மறுத்துவிட்டாராம்.இந்த விஷயத்துல ஓபிஎஸ் தப்பு பண்ணிட்டாருன்னு தான் சொல்லணும். எப்படீன்னா ஓபிஎஸ்ஸூக்கு நிர்வாகிகள் ஆதரவும் கிடையாது.மாவட்டச்செயலாளர்கள் ஆதரவும் அட்லீஸ்ட் எம்எல்ஏக்கள் ஆதரவும் இருக்கான்னா அதுவும் கிடையாது.எந்த நம்பிக்கைல அவர் இருக்காருண்ணே தெரியல. அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா தொடங்கி இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆலோசனையைக் கேட்டு ஆட்சி பண்ணுனாங்க. மோடிக்கு அமித்ஷா இருக்கிறதுனாலத்தான் பல்வேறு மாநிலங்கள்ல பாஜக ஆட்சியைக் கொண்டு வர முடியுது. இப்படிப்பட்ட சூழலில், ஒரு தனியார் டிவி சேனலில் ஓபிஎஸ் ஸ்பெஷல் பேட்டி கொடுத்திருந்தாரு.. அதில், நெறியாளர் கேட்ட கேள்வி இதுதான்: “ஒற்றை தலைமை வேணும்னு தானே அவங்க சொல்றாங்க.. ஆனால், அவங்க யார் பெயரையும், பழனிசாமியா? பன்னீர்செல்வமா? அல்லது வேற யாராவதா? ன்னு குறிப்பிட்டு எதுவுமே சொல்லலியேன்னு கேட்டார்.. அதற்கு ஓபிஎஸ்.. “இப்போதைக்கு இது தேவையில்லாத கருத்து.. 2 மாதத்துக்கு முன்னாடிதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டுச்சு.. தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்று கழக அமைப்பு ரீதியான தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டிருக்குது.. அப்படி இருக்கும்போது, இந்த பேச்சு இப்போது தேவையா? என்பதே என் கேள்வி” என்றார். உடனே நெறியாளர், “இரட்டை தலைமை நல்லாதான் போய்ட்டு இருக்குன்னு சொல்றீங்க.,,. அப்படின்னா இரட்டை தலைமையில் இதுநாள்வரை, எந்த பிரச்சனையும் உங்களுக்குள் இருந்ததே இல்லையா? உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, ஒற்றை தலைமை என்ற பேச்சு வந்தவுடனேயே, பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தான் நிற்கிறார்கள், உங்களுக்கு குறைவான ஆதரவு மட்டுமே இருக்கிறதுங்கிற ஒரு பேச்சு இருக்கு.. இப்போ நீங்களே சொல்றீங்க, ஒன்றரை கோடி தொண்டர்கள்தான் அதை முடிவு செய்யணும்னு சொல்றீங்க.. அப்படி இருக்கும்போது, தேர்தலை நடத்துங்களேன்.. யார் யாருக்கு விருப்பமோ, இந்த தேர்தலில் நிற்கட்டும்.. ஒன்றரை கோடி தொண்டர்களே முடிவு செய்யட்டுமே? அப்படி ஒரு போட்டிக்கு நீங்க தயாரா இருக்கீங்களா? அப்படி தேர்தல் முறைதானே ஜனநாயகம்?ன்னு கேட்டார்.. இந்த கேள்வியை ஓபிஎஸ் எதிர்பார்க்கவேயில்லை.. ஒரு நிமிடம் திணறிட்டாரு.. அமைதியா இருந்தார்.. பிறகு சிரித்து சுதாரிச்சுகிட்டே, “இப்படி யூகமான கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.. பொதுவாகவே கட்சிக்குள் போட்டி இருக்க கூடாது.. தேர்தல் நடைபெறணும்ங்கிற கட்டாயத்தில் நடத்தி, கசப்புணர்வை கட்சிக்குள் கொண்டுவர கூடாது.. யாராக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளக்கூடிய, ஏகமனதாக இருக்ககூடிய தலைவரை கொண்டு வரவேண்டும் என்பதே என் கருத்துன்னு சொன்னாரு. ஓபிஎஸ்ஸின் இந்த கருத்துக்கள் விவாதங்களை கிளப்பி வருது.. அதாவது தொண்டர்கள்தான் முக்கியம்ன்னு ஓபிஎஸ் சொல்றது உண்மைன்னா எதுக்காக தேர்தலுக்கு சம்மதிக்க தயங்குகிறார்? உண்மையிலேயே அவருக்கு ஆதரவுகள் கட்சிக்குள் குறைவாக இருக்குதா?ங்கிற கேள்வி வருது இல்லையா ? . தேர்தல்ன்னாலும் ஓபிஎஸ் ஒப்புக் கொள்ளலை, கட்சிக்குள் நிர்வாகிகளே ஓட்டுப்போட்டு தேர்வு செய்யட்டும்னாலும் ஓபிஎஸ் ஒப்புக் கொள்ள மாட்டேங்கிறார். எதுக்குமே வழிவிடாமல் இருக்கிறாருன்னா, இதில் வேறு ஏதோ விஷயம் இருக்குதுங்கிற முணுமுணுப்புகள் வர ஆரம்பிக்குதா இல்லையா ?
இந்த குழப்பமான சூழல்ல மோடிகிட்ட பஞ்சாயத்துக்கு போகலாம்ன்னு தூது விட்டாரு. ஆனா
பிரதமர் மோடி ஜெர்மன் பயணம், குடியரசுத் தலைவர் வேட்புமனு தாக்கல், மகாராஷ்டிர அரசியல் சூழல்ங்கிற காரணங்களால் பா.ஜ.க மேல்மட்டத்தினரை சந்தித்து, தன் நிலையை எடுத்து வைக்கும் வாய்ப்பு ஓ.பி.எஸ்-ஸுக்குக் குறைவாகவே இருந்ததாகச் சொல்றாங்க டெல்லி வட்டாரத்தில்.
நிலைமை இவ்வாறு இருக்க, “இன்றைய சூழலில் அ.தி.மு.க உள்விவகாரங்களில் பா.ஜ.க தலையிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. யாருக்கும் ஆதரவாகச் செயல்படாமல் நடுநிலையா இருக்கத்தான் முயற்சி பண்ணுவாங்க அ.தி.மு.க அழிந்துவிடக் கூடாது. அதை எப்படியாவது காப்பாத்தணும்கிற எண்ணமெல்லாம் பா.ஜ.க-வுக்கு இருக்கவேண்டியது இல்லைன்னாலும், சுயநலம் கலந்த பார்வையில்தான் அ.தி.முக-வை அணுகுவாங்க. அப்படிப் பார்க்கும்போது ஓ.பி.எஸ்-ஸை பா.ஜ.க கைவிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏன்னா, எடப்பாடி தங்களைக் கழற்றிவிடாமல் இருப்பதற்கு ஓ.பி.எஸ்-ஸை பா.ஜ.க பயன்படுத்தும்.இதுக்கிடை ஆடிட்டர் குருமூர்த்தி டெல்லியில அமித்ஷாவைச் சந்திச்சு எடப்பாடி எந்த மாதிரி டேஞ்சரான ஆளுங்கிறதப் புட்டு புட்டு வைச்சிட்டு வந்திட்டாரு. இன்றைய சூழலில் எடப்பாடி தனக்குச் சாதகமான நிலையிலிருந்து போர் புரியுறாரு.. அந்த வகையில் அதிகாரத்தில் தனக்கு இருக்கும் பலத்தை 100 சதவிகிதமாக மாத்துறதுக்கு முயற்சி பண்றாரு.. ஓ.பி.எஸ் தனக்கிருக்கும் பலத்தை விட்டுவிடக் கூடாதுன்னு போராடுறாருன்னு சொல்றாங்க அரசியல் பார்வையாளர்கள், “முதன்மை நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி, ஓ.பி.எஸ் இருவருக்கும்தான் சின்னம் என்று சொல்வதற்கான வாய்ப்புகளும் டெல்லியில் பிரகாசமாக இருக்குதுங்கிறாங்க”
இதே மாதிரி சூழ்நிலை
1991ல் ஜெயலலிதாவுக்கும் திருநாவுக்கரசருக்கும் கருத்து வேறுபாடு வந்தப்போ 26 எம்.எல்.ஏ-க்களில் 8 எம்.எல்.ஏக்கள் திருநாவுக்கரசர் பக்கம் இருந்தாங்க. 18 பேர் ஜெயலலிதா ஆதரவாளர்களாக இருந்தாங்க. 14 எம்.பி-க்களில் 7 எம்.பிக்கள் திருநாவுக்கரசர் பக்கமும், 7 எம்.பிக்கள் ஜெயலலிதா பக்கமும் இருந்தாங்க. திருநாவுக்கரசர் தரப்பு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போனப்போ மிகப்பெரும் ரத்தக்களறி ஏற்பட்டுச்சு. சட்டமன்றத்தில் அ.தி.மு.க ஜெயலலிதா அணி, அ.தி.மு.க திருநாவுக்கரசர் அணின்னே சபநாயகர் இரு தரப்புக்கும் வாய்ப்பளிச்சாரு. அதுக்கப்புறம் இருவரும் தேர்தல் ஆணையத்ததுகிட்ட முறையிட்டாங்க. பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயலலிதா பக்கம் இருந்ததால் இரட்டை இலை சின்னம் ஜெயலலிதாவுக்கே கிடைச்சது. அதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை நிலைநிறுத்திக் கிட்டாரு ஜெயலலிதா. பின்னர் அண்ணா புரட்சித்தலைவர் தமிழக முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கியில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். இதையடுத்து மீண்டும் அதிமுகவில் ஜெயலலிதாவால் சேர்க்கப்பட்ட திருநாவுக்கரசர் மீண்டும் நீக்கப்பட்டார். பின்னர் எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி கடந்த 2004ஆம் ஆண்டு அந்த கட்சியை பாஜகவுடன் இணைத்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலத் தலைவர் ஆனார். இப்போ காங்கிரஸ் சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதி எம்.பியாக இருக்காரு. தேர்தல் ஆணையத்தில் இப்போதும் அதே போன்றதொரு சூழலே ஏற்படும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றாங்க. எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடமே அதிகமான எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் அவருக்கே கட்சியின் அதிகாரமும், இரட்டை இலை சின்னமும் கிடைக்கும்னு சொல்லப்படுது. அப்படி நடந்தால் திருநாவுக்கரசர் போல ஓபிஎஸ்ஸும் தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மோடி ஆதரவு யாருக்குங்கிறதப் பொறுத்து அதிமுக நிலமை மாறும்
