சசி., ஆதரவு ஓ.பி.எஸ். மீது ஒழுங்கு நடவடிக்கை?பதவி பறிப்பா? டிஸ்மிஸ்ஸா? எடப்பாடி கோஷ்டி அவசர ஆலோசனை!

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பற்ற வைத்த நெருப்பு அக்கட்சியில் மீண்டும் ஒரு புதிய பிளவுக்கு அச்சாரம்போட்டுள்ளது. இதனால் முதல் கட்டமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் இரட்டை தலைமைகளான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்து செயல்படுவது நீண்டகாலத்துக்கு சாத்தியமே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். தற்போது சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற குரலை ஓ.பி.எஸ். மறைமுகமான முன்வைக்க அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாக கருத்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.
“மோதல் ஓயாது?” “ஓபிஎஸ்-ன் தம்பி, டிடிவி தினகரன் வீட்டு திருமண வரவேற்பில் பங்கேற்றும் இருக்கிறார். தற்போதைய நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் கோஷ்டிகள் இடையேயான மோதல…”

ஓபிஎஸ்-ன் தம்பி, டிடிவி தினகரன் வீட்டு திருமண வரவேற்பில் பங்கேற்றும் இருக்கிறார். தற்போதைய நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் கோஷ்டிகள் இடையேயான மோதல் ஓய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றே கூறப்படுகிறது. ஓபிஎஸ் அனியில் வலது கரமாக இருந்த கேபி முனுசாமி இப்போது இபிஎஸ் அணிக்கு தாவிவிட்டார்.

ஓபிஎஸ்-க்கு வார்னிங்” “ஓபிஎஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு கேபி முனுசாமியைத்தான் இபிஎஸ் பயன்படுத்தியும் வருகிறார். தற்போது சசிகலா விவகாரத்திலும்
ஓபிஎஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு கேபி முனுசாமியைத்தான் இபிஎஸ் பயன்படுத்தியும் வருகிறார். தற்போது சசிகலா விவகாரத்திலும் ஓபிஎஸ்ஸிடம் பேசியது கேபி முனுசாமிதான் என கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸிடம் பேசிய கேபி முனுசாமி, ஒரு முடிவு எடுத்துவிட்டோம்.. அதற்கு பின்னரும் அதையே ஏன் பேசிகிட்டே இருக்கீங்க… எடப்பாடி தரப்பு கோபமாக இருக்கிறது. உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டார்கள் போல என கூறியிருக்கிறார்.ஓபிஎஸ் தரப்போ, தங்கள் பக்கம் உள்ள நியாயங்களைச் சொல்லி ஆதங்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் தென்மாவட்ட அதிமுக ஓபிஎஸ் பக்கமும் வடக்கு மற்றும் கொங்கு மாவட்ட அதிமுக இபிஎஸ் பக்கமுமாக பிரிந்து நிற்கின்றன. ஓபிஎஸ்-க்கு கடிவாளம் போடுவதுதான் சரியாக இருக்கும் என இபிஎஸ் தரப்பில் சில சீனியர் தலைவர்கள் குமுறுகிறார்களாம்.அப்படியானால் என்ன மாதிரியாக ஓபிஎஸ்-க்கு எதிராக நடவடிக்கை எடுப்பது? அப்படி எடுப்பது சட்டப்படி என்ன மாதிரியான சிக்கலைத் தரும்? இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் தொண்டர்கள் ஆதரவு எப்படி இருக்கும்? என பல கோணங்களில் தீவிரமான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாம் இபிஎஸ் தரப்பு.

சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்க்க, பா.ஜ., மேலிடத்திற்கு துளியும் விருப்பமில்லை என தெரிய வந்துள்ளது.இது பற்றி, பா.ஜ., டில்லி வட்டாரம் கூறுகையில், ‘அவர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர். தொண்டர்களின் செல்வாக்கை இழந்தவர். அவரது குடும்பத்தினர் வழக்குகளில் சிக்கி தவிக்கின்றனர். சசிகலாவுக்கு பன்னீர்செல்வம் ஆதரவு அளிப்பது நல்லதல்ல’ என்றும் எச்சரித்திருக்கிறது.

இல்லையென்றால், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க்கள், பழனிசாமி பின்னால் இருப்பதால், இரட்டை இலை சின்னம் அவருக்கு போய் விடும்; அ.தி.மு.க.,வுக்கு ஒற்றை தலைமை உருவாக்கப்பட்டு விடும் என்றும், பா.ஜ., தரப்பில் பன்னீருக்கு வேப்பிலை அடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, #சசிகலா விவகாரத்தில் உஷாராக செயல்படும்படி பன்னீர்செல்வத்திடம், அவர் மீது அக்கறை உள்ள பா.ஜ., தமிழக தலைவர் ஒருவர் கூறியிருப்பதாகவும் தெரிகிறது. இதனால் எந்த நிமிடத்திலும் அதிமுகவில் பூகம்பம் வெடிக்கும் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

Related posts:

மீண்டும் மூன்றாவது அணி அமைக்கிறாரா வைகோ?

யார் ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் நான் ஜெயிக்கப் போவது உறுதி! அண்ணாமலை சவால் !

உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்?

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் வெற்றி பெற முடியாமல் போவதற்கு என்ன காரணம்.

தமிழ்நாட்டுக்குள் விரைவில் வலது காலடி எடுத்து வைக்கும் லாட்டரி.....!

வன்னிய சமூகத்துக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தி.மு.க ஆர்வம் காட்டவில்லை ?

திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தினகரனுடன் கைக்கோர்க்கும் எடப்பாடி!

பணிவுக்குப் பெயர் பெற்றவர், எரிமலையாக வெடிப்பாரா? மே 2 வரை பொறுத்திருக்க வேண்டும்….