ரூ .100 கோடி மதிப்பிலான லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலைக்கு சென்னையில், அரசு அடிக்கல் நாட்ட உள்ளது என்று, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் டிவி சேனல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் ஹர்ஷ்வர்தன் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) சார்பில், சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை அமைய உள்ளது. இதை துவக்கி வைக்க, அடுத்த சில வாரங்களில் சென்னை செல்ல உள்ளேன்.
மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட 1,289 அரசு ஆதரவு நிறுவனங்களில் சி.எஸ்.ஐ.ஆர் 15 வது இடத்தில் உள்ளது. வாகனத் துறையின் பங்களிப்புகளை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். இந்திய விஞ்ஞானிகள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வைத்துக் கொண்டு உள்ளனர்.வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் ஆட்சிகாலத்தில்,அறிவியல் தொழில்நுட்பத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மோடி என்பது இயக்கமாக உருவெடுத்து வலுவாகிவிட்டது. பிரதமரின் கனவை நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம். இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி மிகுந்த தூரம் பயணிக்க உள்ளது. இவ்வாறு ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.