*ஸ்டைல், ஸ்வேக் மற்றும் கொண்டாட்டத்துடன் வெளியாகி இருக்கும் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது!*

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது.

திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இசை ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது.

உற்சாகத்துடன் துள்ளலாக உருவாக்கப்பட்டுள்ள சிக்மா ஸ்டைல் பாடல், அதன் வண்ணமயமான காட்சிகள், பின்னணி மற்றும் எண்டர்டெயினிங்கான நட்சத்திரங்களின் திரையிருப்பு காரணமாக ரசிகர்களை உடனடியாக ஈர்த்துள்ளது. சந்தீப் கிஷனின் மாஸான திரையிருப்பு, ஃபரியா அப்துல்லாவின் கிளாசிக்கல், வெஸ்டர்ன் ஃப்யூஷன் நடனம் இதனுடன் பாடலில் ஜேசன் சஞ்சயின் ஸ்டைலான திரையிருப்பு இவையனைத்தும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது ஜூலை 31 அன்று வெளியாகும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கவரும் இசை, ஸ்டைலிஷான உருவாக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களால் நிரம்பியுள்ள இந்த பாடல், இளைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட பல முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*நடிகர்கள்:* லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ’சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்க, அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related posts:

!மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!

*‘மின்னல் முரளி’, ‘லோகோ’ படங்கள் வரிசையில் பரபர ஃபேண்டஸி த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘சூப்பர் பி மேன்’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!*

"லவ்" திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணம் இனிதே நடைபெற்றது!

தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

*லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா*!

Samsung TV Plus Announces the Launch of Four New FAST Channels From Viacom18 Exclusively on Samsung Smart TVs !