‘ஆர்எக்ஸ் 100’ நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டாவின் புதிய திரைப்படம் ‘கம்பேக்’!

‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா தனது புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ’கம்பேக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அவர் தனது திரைப்பயணத்தில் ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தயாராகியுள்ளார். கார்த்திகேயா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கார்த்திகேயா கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் இப்படத்தை உருவாக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிப்பதுடன், இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அவரது மனைவி லோஹிதா ரெட்டி இப்படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். குடும்பத்தினர் இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படம் 2027ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் நடிகர் கார்த்திகேயா பாக்ஸராக நடித்துள்ளார் என்பதை கிளிம்ப்ஸ் காட்டுகிறது. மூன்று ஆண்டுகளாக அந்த குத்துச்சண்டை வீரர் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் குரலோடு கதை தொடங்குகிறது. அந்த இடைவெளிக்குப் பிறகு கதாநாயகன் மீண்டும் களத்திற்கு திரும்பும்போது, பலரும் அவரை கிட்டத்தட்ட மறந்தே விட்டனர். மூன்று ஆண்டுகள் நீண்ட அமைதிக்குப் பிறகு மீண்டும் திரும்புவதால் அவரால் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கேள்விகளும் எழுகின்றன. அந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதை கிளிம்ப்ஸ் வெளிப்படுத்தவில்லை. ஆனால், களத்தில் ஹீரோவின் கம்பேக் சவால் நிறைந்த பயணமாகவே அமைகிறது. கே.ஆர். குமார் மன்னேவின் தயாரிப்பு வடிவமைப்பு குத்துச்சண்டை உலகத்தை நம்பகமான முறையில் பார்வையாளர்களுக்கு காட்ட இருக்கிறத்க்.

கடின உழைப்பு, தனிப்பட்ட போராட்டம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் குத்துச்சண்டை திரைப்படமாக ’கம்பேக்’ உருவாகிறது. பயிற்சிக் காட்சிகள் நிஜத்தன்மையுடனும் கடினமானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் களத்திற்கு திரும்புவதற்கான மனரீதியான மற்றும் உடல்ரீதியான போராட்டங்களும் கதையில் முக்கிய இடம் பெறும். குத்துச்சண்டை வீரரை கண்முன்னே கொண்டுவர கார்த்திகேயா கடின உழைப்பை கொடுத்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது இந்தப் படத்தில் இயக்குநர் பொறுப்பையும் கார்த்திகேயா ஏற்றிருக்கிறார்.

இப்படத்தின் கிரியேட்டிவ் குழுவில் விஜய் புல்கானின் இசையமைப்பாளராகவும், கல்யாண் சூர்யபிரகாஷ் படத்தொகுப்பாளராகவும், ஷில்பா தங்குதுரு ஆடை வடிவமைப்பாளராகவும், சூர்யா அக்கெல்லா கிரியேட்டிவ் இயக்குநராகவும் இடம்பெற்றுள்ளனர். ஜெகதீஷ் சீகட்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார் மற்றும் சுதீர் தெலப்ரோலு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

கதாநாயகனாக நடிப்பதில் இருந்து கார்த்திகேயாவிற்கு ஏற்பட்டிருந்த இடைவெளியை ‘கம்பேக்’ முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அவரது பிறந்தநாளில் இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் தனிப்பட்ட முக்கியத்துவத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இப்படம், கார்த்திகேயாவின் திரைப்பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

Related posts:

வசூல்ராஜா வான சுந்தர் சி யின் "மதகஜராஜா"! பட அதிபர் கே.ஆர் அறிக்கை!!

வெற்றிமாறன் சாருடன் ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்கிறார்ஜூனியர் என்.டி.ஆர்.!

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான 'ஃபயர்' இசை வெளியீடு!

*நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந...

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு ?

வாழை' படத்தில் எனது நடிப்பிற்கு வழங்கிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் ஜே எஸ் கே

இந்தியாவில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை!