ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகிறது.!

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட்,  எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்‌ஷன் டிராமா திரைப்படம், பாரம்பரிய சூழலோடு எதிர்பார்ப்புகளை தூண்டும் படமாக அமையவிருக்கிறது.

“செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இப்படத்தையும் எழுதி இயக்குகிறார். கடந்த படத்தைவிட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வார். இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார், இதனால் படம் தெற்கிந்தியாவில் பரந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கதா நாயகியாக மஹிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.சத்யராஜ், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் தங்களது திறமையான நடிப்பின் மூலம் உணர்வுப்பூர்வான இந்த கதைக்கு பலமளிக்க போகின்றனர்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி படத்தை பற்றி கூறியதாவது:

“ எனது கனவைப் புரிந்து கொண்டு, என் கதையை கேட்பதற்கு, இந்த வாய்ப்பை அளித்த எல்ரெட் சார் மற்றும் வெற்றிமாறன் சாருக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். சூரி சார் ன் காமெடியன் to கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. சூரி சாரின் விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது — அதை சூரி சார் போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.
வெற்றிமாறன்சார், படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இருக்கின்றது எனக்கு ஒரு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையும், எஸ்.ஆர். கதிர் அவர்களின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்‌ஷன் படமாக உருவாகிக்கொண்டு வருகிறது.”

படத்தின் முக்கிய தொழில்நுட்பக் குழு:

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர் ISC

கலை இயக்கம்: டி.ஆர்.கே. கிரண்

எடிட்டிங்: பிரதீப் ஈ. ராகவ்

ஆக்‌ஷன்: பீட்டர் ஹைன்

சத்த ஒலி வடிவமைப்பு: பிரதாப்

VFX: ஆர். ஹரிஹரசுதன்

மற்ற குழுவினர்:

இணை தயாரிப்பு: வி. மணிகண்டன்

உடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்

நடன அமைப்பாளர்: ஆசர்

கூடுதல் எழுத்து: ஆர். மோகனவசந்தன், திரள் சங்கர்

மேக்கப்: என். சக்திவேல்

உடைதாரர்: நாகு

DI: கிளெமெண்ட்

பப்ளிசிட்டி ஸ்டில்ஸ்: கபிலன்

ஸ்டில் புகைப்படம்: ஜி. ஆனந்த் குமார்

விளம்பர வடிவமைப்பு: எஸ்தடிக்ஸ் குஞ்சம்மா

தயாரிப்பு நிர்வாகி: எஸ்.பி. சொக்கலிங்கம்

நிர்வாக தயாரிப்பாளர்: ஜி. மாகேஷ்

பி.ஆர்.ஓ: ரேகா

Related posts:

'hi நான்னா' திரைப்படத்தின் இரண்டாம் பாடல் 'காஜு பொம்மா' அக்டோபர் 6 வெளியீடு !

கேளிக்கை வரியை குறைத்துள்ள தமிழக அரசுக்கு நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் நன்றி!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'இங்க நான் தான் கிங்கு' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’அருள்வான்’-- திரைப்பட விமர்சனம்!

"என் கரியரில் சிறந்த கதாபாத்திரத்தை ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் மில்டன் சார் கொடுத்துள்ளார்”- நடிகை மேகா ஆகாஷ்!

நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று 'திரெளபதி2' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

’பரமசிவன் பாத்திமா’ திரைப்பட விமர்சனம்!