‘ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!*!

ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது.

’ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது.

படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை உள்ளது” என்றார்.

இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ படத்தில் கஸ்தூரி ராஜா சார் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதை பற்றிய புரிதலும் எங்கள் பயணத்திற்கு தெளிவும் நம்பிக்கையும் அளித்தது. மத வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தில் மூத்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையை அவரது கதாபாத்திரம் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும். ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் கொண்டதாகவும் அவரது இருப்பு இருக்கும். திரைத்துறையிலும் வயதிலும் அவர் மூத்தவராக இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் எங்கள் அனைவருடனும் மிக எளிமையாக பழகினார்” என்றார்.

இந்தத் திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. தரமான மற்றும் கருத்துள்ள படங்களை ஆதரித்து வரும் இந்த நிறுவனம், திறமையான விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தின் மூலம் நல்ல திரைப்படங்களை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வலுவான தளமாக திகழ்கிறது.

கலை நேர்மை மற்றும் வணிக நுணுக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக ’ஹபீபி’ திரைப்படம் இருக்கும். இன்றைய மாறிவரும் சினிமா உலகில் படைப்பாற்றல், அனுபவமிக்க வழிகாட்டுதல் மற்றும் வலுவான விநியோக ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் படம் உணர்த்தும். நீண்ட நாட்களுக்கு ரசிகர்கள் மனதில் இந்தப் படம் நீங்கா இடம் பிடிக்கும். ‘ஹபீபி’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல. ஆர்வம், ஒற்றுமை மற்றும் வலுவான கதை சொல்லலுடன் உருவான மிகச்சிறந்த அனுபவம்.

Related posts:

செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் பேனரில் மாரியப்பன் முத்தையா தயாரிப்பில் "பட்டுக்கோட்டை" ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் ப...

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன்சென்னை, இராயப்பேட்டை, பி.வி.ஆர் சத்யம் திரையரங்கில் தமிழ்நாடு அரசின் ஆ...

நடிகர் ரங்கராஜ் நடிக்கும் 'கட்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா1

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' பத்திரிகையாளர் சந்திப்பு. !

Samsung TV Plus Announces the Launch of Four New FAST Channels From Viacom18 Exclusively on Samsung Smart TVs !

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்' !

நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது!