‘டென் ஹவர்ஸ்’ –விமர்சனம்.!

தமிழில் ‘வெற்றிவேல் சக்திவேல்’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சிபி சத்யராஜ்,  அறிமுக இயக்குனர் இளையராஜா கலியப்பெருமாள் இயக்கத்தில், சிபி ராஜ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம்  ‘டென் ஹவர்ஸ்’,

ஆம்னி பஸ் ஒன்றில் ஒரு பெண்ணை சித்திரவதை செய்வதாக போலீசாருக்கு போன் வருகிறது . சுறுசுறுப்பான – சபரி மலைக்கு மாலை  போட்டு இருக்கிற இன்ஸ்பெக்டர் (சிபிராஜ்) நடவடிக்கை எடுக்க கிளம்புகிறார் .

போனில் சொன்ன பேருந்து நம்பரை வைத்து பஸ்ஸைப் பிடித்தால் அங்கே இறந்து கிடப்பது ஓர் இளைஞன் .இது தவிர  ஒரு  இளம்பெண்ணைக் காணவில்லை என்று ஒரு புகார் வந்திருக்க அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது..சித்திரவதை செய்யப்பட்ட பெண் எங்கே ? செத்துப் போன நபர் யார்? காரணம் என்ன? கதை என்ன?  என்பதே படம்.பத்து மணி நேரத்தில் நடக்கும் படம் என்பதால் அந்தப் பெயர் . மற்ற பயணிகள் உறங்கும் நேரத்தில் நடக்கும் இந்த கொலையை செய்தவர் நிச்சயமாக அந்த பேருந்தில் தான் இருக்கவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் காவல் அதிகாரி சிபி சத்யராஜ் விசாரணையை தொடங்குகிறார்.

டுவின் ஸ்டுடியோஸ் லதா பாலு மற்றும் துரை கனி வினோத் தயாரிப்பில் சிபிராஜ் , கஜராஜ், திலீபன், ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடிப்பில் இளையராஜா கலியபெருமாள் என்பவர் இயக்கி இருக்கும்  படம்.பத்து மணி நேரத்தில் நடக்கும் படம் என்பதால் அந்தப் பெயர் . ஒரு சூழலில்,  இருபது முப்பது பேரை நிற்க வைத்து,  குற்றவாளி இவரா?  இல்லை அவரா?  இல்லை அந்த நபரா ? இல்லை இந்த ஆளா ? என்று தாவிக் கொண்டு இருப்பதாலேயே  அது சுவாரஸ்யமாகி விடாது. சந்தேகம் விழுவது எப்போது,  எப்படி ?  சந்தேகம் நீங்குவது எதனால் என்பதில் இண்டரஸ்ட் இருந்தால்தான் அந்த நடைமுறை தாங்கும் .

அதன் அடிப்படையில் ஒரு கதையைச்  சொல்லி இருக்கிறார் இயக்குனர் . ஆனால் ஒரு  தியேட்டரிக்கல் படத்துக்கு அது மட்டுமே போதும் என்று நம்பி இருப்பதுதான் பிரச்சனை .  அதுவும் படத்தில் பத்துப் பதினைந்து நிமிடம் மட்டுமே அது வருவது அதை விடப் பெரிய மைனஸ் .

சுறுசுறுப்பான இன்ஸ்பெக்டராக உற்சாகமாக நடித்திருக்கிறார் சிபிராஜ் . 10 மணிநேர பேருந்து பயணத்தைத் தொடங்கும் பயணிகளுக்கு நடுவே கொலையாளி இருக்கிறாரா? கொலை நடப்பதற்கான காரணம் என்ன? கொலையாளி யார்? காவல் நிலையத்தில் மேலும் ஒரு கொலைத் தாக்குதல் நடந்ததற்கும் இதற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா? இப்படி பல சுவாரசியமான கேள்விகளை கிளறி எழுப்பும் வகையில் ’10 Hours’ படம்  அமைந்துள்ளது.

ஆம்னி பஸ்களில் ஒரே  பதிவு எண்ணில் பல பஸ்களை ஓட்டி அதன் பின்னால் பல தவறுகள் ஊழல்கள் குற்றங்கள் நடந்ததும் அது பின்னர் அரசால் கட்டுப்படுத்தப்பட்டதும், உண்மையில்  நடந்த விஷயம் .(ஆனால் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கு)

துப்பு துலக்கும் விசயத்தில் தடயங்களை வைத்து ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் சுவாரஸ்யம் காட்டினார்கள் . இந்த வகையில் கடைசியில் ஏதோ பின்னிப் பெடல் எடுக்கப் போகிறார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை.

விசாரணைக் காட்சிகளை பரபரப்பு என்ற பெயரில்  இப்படி தாவித் தாவி ஓட விடாமல் நிதானமாக அழுத்தமாகக் கொடுத்து இருந்தால் கூட,  திரைக்கதை இப்படி மேம்போக்காகப் போகாமல் இருந்திருக்கும் .

 ஒரு  தியேட்டரிக்கல் படத்துக்கு அது மட்டுமே போதும் என்று நம்பி இருப்பதுதான் பிரச்சனை .  அதுவும் படத்தில் பத்துப் பதினைந்து நிமிடம் மட்டுமே அது வருவது அதை விடப் பெரிய மைனஸ் . சுறுசுறுப்பான இன்ஸ்பெக்டரான உற்சாகமாக நடித்திருக்கிறார் சிபிராஜ் . சிறப்பு

அது என்னவோ தெரியவில்லை , மலையாளப் படங்களில் எல்லாம் தமிழக ஐயப்ப பக்தர்களை  பொறுக்கிகள் , கஞ்சா விற்பவர்கள், பெண்களை வைத்துப் பிழைப்பவர்கள் என்று,  அவர்கள் செய்வதை நம்மேல் சொல்லி படங்களை எடுக்கிறார்கள் ,இனிமேலாச்சும் பழனிக்கோ திருச்செந்தூருக்கோ மாலை போட்டு விடுங்கப்பா.

கே எஸ் சுந்தர மூர்த்தியின் அட்டகாசமான பின்னணி இசையும் ஜெய் கார்த்திக்கின் சூழலை உணர்த்தும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். அருண் சங்கர்துரையின் கலை இயக்கமும் கவனிக்க வைக்கிறது . இருக்கற மாவை வைத்து இட்லி சுட்டுக் கொடுத்து இருக்கிறார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்.

ஒரு சூழலில்,  இருபது முப்பது பேரை நிற்க வைத்து,  குற்றவாளி இவரா?  இல்லை அவரா?  இல்லை அந்த நபரா ? இல்லை இந்த ஆளா ? என்று தாவிக் கொண்டு இருப்பதாலேயே  அது சுவாரஸ்யமாகி விடாது. சந்தேகம் விழுவதுஎப்போது,  எப்படி ?  சந்தேகம் நீங்குவது எதனால் என்பதில் இண்டரஸ்ட் இருந்தால்தான் அந்த நடைமுறை தாங்கும் . இங்கே அது இல்லை .

டென் ஹவர்ஸ்’  மர்மத் திரில்லர் படமான இது, தலைப்பில் குறிப்பிடுவது போல 10 மணி நேரத்திற்குள் நடக்கும் கதையாக இருக்கிறது. கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை முறையே ஜெய் கார்த்திக் மற்றும் லாரன்ஸ் கிஷோர் கையாளுகின்றனர். தமிழ் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படம், இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியுள்ளார்.

 

Related posts:

“எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”...‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

*சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'*!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் 'நீளிரா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு!

இடியட்“ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Director Seenu Ramasamy Makes a Special Appeal to Tamil Nadu Chief Minister Joseph Vijay!

பாரதத்திலிருந்து உலகை நோக்கிய பயணத்தை தொடங்கிய நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’!

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

டெஸ்லாவுக்கு போட்டியாக சீன மின்சார கார்கள்!