சொர்க்கவாசல் – விமர்சனம்..!

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல சிறைச்சாலை படங்களை பார்த்திருக்கிறோம். விருமாண்டி, விசாரணை, வடசென்னை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை சிறைக்குள் சிறை பிடித்து திகிலூட்டியிருந்தது. இந்த ஆண்டு பொங்கலுக்கு அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 படமும் சிறைச்சாலை படம் தான். அந்த வரிசையில் ஆண்டு இறுதியில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிறைச்சாலை படமாக ரொம்ப ராவாக சொர்க்கவாசல் படம் வெளியாகி இருக்கிறது. 1999ம் ஆண்டு சென்னை மத்தியச் சிறையில் நடைபெற்ற கலவரத்தில் துணை ஜெயிலரை எரித்தே கொன்று விட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 9 சிறை கைதிகள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற விசாரணை தான் இந்த படத்தின் கதை. துணை ஜெயிலரை எரித்துக் கொன்றது யார்? அங்கே நடைபெற்ற கலவரத்துக்கு யார் முக்கிய காரணம் என்பதை செம சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட்டுடன் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் Swipe Right Studios; Think Studios இணைந்து தயாரித்துள்ள சொர்க்கவாசல் படம் வெளிவந்துள்ளது.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் ஆர்.ஜே.பாலாஜி
நடித்துள்ளார். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

மெட்ராஸ் மத்திய சிறையில் கைதியாக இருக்கும் செல்வராகவன், சிறைக்குள் இருந்து கொண்டே ஒட்டுமொத்த சென்னையையும் ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கிறார். கட்டபஞ்சயத்து, போதை மருந்து என பலவிதமான குற்றங்களையும் செய்து வருகிறார்.

செல்வராகவனின் சாம்ராஜ்யத்தின் கதை ஒரு பக்கம் நகர, மற்றொரு புறம் ஆர்.ஜே. பாலாஜியின் கதை துவங்குகிறது. கையேந்தி பவன் வைத்து நடத்தி வரும் ஆர்.ஜே. பாலாஜி, புதிதாக ஹோட்டல் திறக்க வேண்டும், தான் காதலிக்கும் பெண்ணை கரம் பிடிக்க வேண்டும், அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற கனவுகளுடன் இருக்கிறார்.

இந்த சமயத்தில் திடீரென போலீசாரால் கைது செய்யப்பட்ட பாலாஜி, செல்வராகவன் இருக்கும் சென்னை சிறைக்கு கொண்டு வரப்படுகிறார். தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் ஆர்.ஜே. பாலாஜி ஏன் கைது செய்யப்பட்டார். இதற்கும் செல்வராகவனுக்கு என்ன சம்பந்தம்? இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. மெட்ராஸ் மத்திய சிறையில் 1999ல் நடந்த கலவரத்தை மையமாக வைத்து தான் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத்.

எடுத்துக்கொண்ட கதைக்களம், அதை விறுவிறுப்பான ஆக்ஷன் நிறைந்த திரைக்கதையில் கொண்டு வந்த விதம் என படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். எந்த இடத்திலும் தொய்வு இல்லை. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது.
இதுவரை நகைச்சுவை நாயகனாக மட்டுமே நடித்து நம்மை பொழுதுபோக செய்த ஆர்.ஜே. பாலாஜி, முதல் முறையாக தனது மறுபக்க நடிப்பையும் இப்படத்தில் வெளிக்காட்டியுள்ளார். சிறையில் அவர் படும் கஷ்டங்கள், சொல்லமுடியாத துன்புறுத்தல்கள், பயம், கோபம் என அனைத்து இடங்களிலும் அவர் நடித்த விதம் அருமையாக இருக்கிறது.

சிறையில் இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் நடக்கிறதா என வடசென்னை படத்தை பார்த்து பலருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும். அதே போல் சொர்க்கவாசல் படத்திலும் பல ஆச்சரியங்களை வைத்துள்ளார் இயக்குனர் சித்தார்த்.
சிறைக்கு வெளியில் தான் அரசியல் இருக்கிறது என்றால், சிறைக்கு உள்ளே கூட அரசியல் நடக்கிறது என்பதையும் எடுத்து காட்டியுள்ளார் இயக்குநர்.

திடீரென கைது செய்யப்பட்ட பாலாஜி, சிறைக்குள் வரும் பொழுது எப்படி இருந்தார், இந்த சிறை அவரை எப்படி மாற்றியது, இதனால் அவர் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்னென்ன, இறுதியில் அவருடைய எண்ணம் மாறிய விதம் என அந்த கதாபாத்திரத்திரம் ரசிக்கும்படியாக இருந்தது.

ஆனால், இப்படம் திரில்லர் ஆடியன்ஸை தவிர, அனைவருக்கும் கனெக்ட் ஆகுமா என்பது தெரியவில்லை. அதுவே இப்படத்தின் மைனஸாக அமைந்துள்ளது

Related posts:

இடியட்“ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!
தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை!
ரூ.84 கோடியில், 240 புதிய பஸ்கள் ! முதல்வர் துவக்கி வைத்தார்.!
பெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்...
தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது !
எளிதில் தீப்பற்றாத லித்தியம் பேட்டரி ! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!
சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர் 'ராஞ்சா'!
கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதி 1