சாலா விமர்சனம்!

சாலா படத்தை எஸ்.டி.மணிபால் எழுதி இயக்கியுள்ளார். இவர், தொடரி, கும்கி 2 மற்றும் ஹாத்தி மேரி சாதி (மும்மொழித் திட்டம்) போன்ற படங்களில் பிரபு சாலமனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். இத்திரைப்படத்தில் அறிமுகமான தீரன் கதாநாயகனாக சாலமன் அக்கா சாலாவாக நடித்துள்ளார், மேலும் குணா என்ற பெரியவரின் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். அறிமுக நடிகையான ரேஷ்மா, 25 வயது சமூக ஆர்வலராகவும், மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கும் பள்ளி ஆசிரியையாகவும் புனிதாவாக கதாநாயகியாக நடிக்கிறார். அவரது நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது.

வில்லனாக சார்லஸ் வினோத் மற்றும் ஸ்ரீநாத், அருள் தாஸ் மற்றும் சம்பத் ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.ரவீந்திரநாத் குரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புவன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார், வைர பாலன் கலை இயக்குநராக உள்ளார்.
படத்தை டி.ஜி. பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் விஸ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்து, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடுகிறார்.இரண்டு ரவுடி கூட்டத்துக்கு இடையே நடக்கும் மோதல் கதைகள் ஏற்கனவே ஆயிரக் கணக்கில் வந்திருக்கின்றன ஆனால் அதில் ஒரு கதையாக இதுவும் சென்றுவிடாமல் சற்று வித்தியாசமாக கையாண்டிருக் கிறார் இயக்குனர் மணிப்பால். இந்த படம் இவரது முதல் படம் என்பதையே நம்ப முடியல.அந்த அளவுக்கு மிரட்டியிருக்காரு.

கொலை செய்வது தவறு என்பதை படத்தில் கொலை செய்து காட்டித் தான் அதற்கான நியாயம் நீதிமன்றம் மூலம். கற்பிக்கப்படுகிறது. அதே பார்முலாவில் தான் குடிப்பது தவறு என்பதை படத்தின் 99 சதவீத காட்சிகளில் குடி குடி என்று குடிகார காட்சியை அமைத்துவிட்டு கிளைமாக்கில் அதன் பாதிப்பு என்ன என்பதை விளக்கி இருக்கிறார்கள். ஆனால் அதை உறுதிபட சென்டிமென்ட்டாக பதிய வைத்திருப்பது பாராட்டைப் பெறுகிறது

சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தை தயாரித்த தீரன் இப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆஜானபாகு தோற்றம் கட்டுமஸ்தான உடற்கட்டு , ஆக்சன், டான்ஸ் என்று அதிரடி காட்டி இருக்கிறார்.

தனது டாஸ்மாக் கடையை மூடுவேன் என்று சபதம் செய்யும் டீச்சர் ரேஷ்மா மீது காதல் கொண்டாலும் அந்த காதலை வெளிப்படுத்த போதிய முக பாவத்தை தீரன் தர முடியாமல் திணறி இருக்கிறார். ரொமான்ஸ் வரல பாஸ்.ஆக்ஷன் கை கொடுக்கும் அளவுக்கு காதல் கை கொடுக்கவில்லை.

அருள்தாஸ், சார்லஸ் வினோத் இருவரும் ரவுடி கூட்டத்
தலைவர்களாக நடித்திருக்கின்றனர். இரண்டு ரவுடி கூட்டமும் நீயா நானா என்று மோதிக் கொள்வதும், மதுபான பாரை ஏலம் எடுக்க சார்லஸ் ஒரு தந்திரம் செய்தால் அவரை மிஞ்சும் வகையில் தீரன் இன்னொரு ஆப்பு வைத்து சார்லசை திணறடிப்பதும் அட்டகாசமா இருக்குது.காமெடியன் இல்லாத குறையை ஸ்ரீநாத் தீர்த்து வைத்திருக்கிறார்.போலீஸ் அதிகாரி சம்பத் ராம், ரவுடிக்கு விசுவாசமாக இருப்பதும் பின்னர் அந்த ரவுடியையே சட்டையைப் பிடித்து இழுத்துச் செல்வது என்று அசல் போலீசாக மாறியிருக்கிறார்.டிஜி விஷ்வபிரசாத் தயாரித்திருக்கிறார்.சொல்ல வந்த கருத்தை கமர்சியலுடன் சென்டிமென்ட்டையும் குழைத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் எஸ் டி மணிபால்.இசையும் ஒளிப்பதிவும் ஓகே ரகம்.சாலா – மக்களுக்காகவே எடுக்கப்பட்ட ஆக்ஷன் படம்

Related posts:

'காந்தி - மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்' - மகாத்மா காந்திக்கு சர்வதேச இசை அஞ்சலி!

விஜய் ஆண்டனி-இயக்குநர் சசி: மீண்டும் இணையும் 'பிச்சைக்காரன்' வெற்றிக் கூட்டணி!

‘புஷ்பா 2’ படத்தில் இருந்து 'தி கப்புள் சாங்' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' பத்திரிகையாளர் சந்திப்பு !!

*டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் 'பாரதவர்ஷா'!*

மைத்ரி மூவி மேக்கர்ஸின் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது!

திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ ஆர்முலிகா சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஸ்ரீ பவன் கல்யாண் சுவாமி தரிசனம்!