அதிமுக பொதுச்செயலாளராகும் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ்.,க்கு கல்தாவா?
அதிமுக ஒற்றைத் தலைமை யாருங்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்குது.
அதிமுக பொதுச்செயலர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி ! மீண்டும் முடங்கிய ஓபிஎஸ்?
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்ங்கிற கோரிக்கை எழுந்திருக்கிற நிலையில், அதற்கான போட்டியில், எடப்பாடி பழனிசாமி தான் முன்னணியில் இருக்கிறதா தகவல் வெளியாகி இருக்குது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இரட்டைத் தலைமை உருவாச்சு. இரண்டு அணிகளாக பிளவுபட்ட அதிமுகவை, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒண்ணா இணைச்சாங்க. அதனாலத்தான் இரட்டைத் தலைமை உருவாச்சு.
அதிமுக ஒருங்கிணைப்பாளரா, ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக, எடப்பாடி பழனிசாமியும் நியமனம் செய்யும் வகையில், கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதிமுக தொடங்கியதில் இருந்தே ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்கி வந்த ரத்தத்தின் ரத்தங்கள், இரட்டைத் தலைமை உருவானதால், எந்தப் பக்கம் போறதுன்னுத் தெரியாம முழி பிதுங்கி நின்னாங்க..இன்னமும் அந்த நிலமை மாறலை.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்தே, அதிமுகவுக்கு, ஒற்றைத் தலைமை வேண்டும்ங்கிற குரல் கட்சிக்குள் எதிரொலிக்கத் தொடங்கியாச்சு. ஒரு பக்கம், அதிமுகவை கைப்பற்ற சசிகலா காய் நகர்த்தி வரும் நிலையில், ஒற்றைத் தலைமை வேண்டும்ங்கிற கோரிக்கை, அதிமுக இரட்டைத் தலைமைக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்திடுச்சி.
இதுக்கிடையே, வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்ன்னு, அதிமுக தலைமை அறிவிச்சது. இது தொடர்பாக விவாதிக்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுச்சி.
காலை 11 மணி அளவில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம், மாலை 3 மணி வரை நடந்தது. இந்தக் கூட்டத்தில், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் பலபேரும், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான் வேணும்னு கோரிக்கை வைச்சாங்க.இந்தத் தகவலை, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் உறுதிப்படுத்தி இருந்தாரு.
இந்த நிலையில், அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்லப்படுது. இன்னைக்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கே பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவுக்கரம் நீட்டியதாகச் சொல்லப்படுது.அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விரும்பினாலும், எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இட வசதி இல்லைங்கிற ஒரு காரணம் சொல்லப்பட்டாலும், சசிகலா ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து குழப்பம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கலாம்னு சந்தேகப்படும் பழனிசாமி தரப்பு எதிர்ப்பதாகக் சொல்லப்படுது. ஆனால், இதுதவிர இன்னொரு முக்கியமான காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுது.அதென்ன இன்னொரு காரணம்ன்னா செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600-க்கும் மேற்பட்டோர், 2,500 சிறப்பு அழைப்பாளர்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர இடம் வேணும். எனவே, சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படலைன்னு சொன்னாலும், அனைவரும் வரும்போது தனக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்னு வேண்டுமென்றே சிறப்பு அழைப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி தவிர்த்திருப்பதாக சொல்லப்படுது. கட்சியின் மரபுப்படி சிறப்பு அழைப்பாளர்கள் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு அழைக்கப்படுவது வழக்கம். ஆனால், தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது என அஞ்சி, செயற்கையாக பெரும்பான்மை பெறுவதற்காக சிறப்பு அழைப்பாளர்களை தவிர்க்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக ஓ.பி.எஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார்ன்னு சொல்லப்படுது. இதனால், பொதுக்குழுவில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் நீதிமன்றம் மூலம் சிக்கல் வரலாம்ங்கிறதால எடப்பாடி பழனிசாமி தரப்பு ஷாக் ஆகியிருக்குது. பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகுதுங்கிறதப் பத்தி அதிமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் சூழ்நிலைல, ஓ.பன்னீர்செல்வம் போட்டுள்ள திட்டத்தால் பொதுக்குழு கூட்டம் நடக்குமா? நடந்தாலும், நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் நடக்குமா? எடப்பாடி பழனிசாமி நினைத்ததைச் செய்ய முடியுமாங்கிற பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்து வருது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக ஆட்சியை இழந்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்குங்கிறதுல, ஓபிஎஸ்ஸூக்கும்- இபிஎஸ்ஸூக்கும் இடையே கடுமையான போட்டி இருந்துச்சு. முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த ஓபிஎஸ், அதுவும் பிரதமர் மோடி கேட்டுக்கிட்டதாலத் தான் விட்டுக் கொடுத்தேன்னு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தாரு.ஆனா யாரும் எதிர்பாராத வகையில் , எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டாருங்கிற தகவல் பரவிய நிலையில், பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவுடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றி சிக்ஸர் அடிச்சாரு எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக தன்னை முன்னிறுத்த எடப்பாடி பழனிசாமி எடுக்கிற முயற்சிகள் எல்லாமே அவருக்கு கை கொடுக்கும்ன்னு அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிச்சிருக்காங்க.. அதிமுக பொதுச் செயலாளர்ங்கிற பதவியை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவாராங் கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இதனிடையே ஒரு சீக்ரெட் டீல் ஒன்றினை, எடப்பாடி டீம் ஓபிஎஸ் தரப்பிடம் பேசி வருவதாக செய்திகள் கசிந்தன.. அதாவது, “இந்த முறை எடப்பாடிக்கே சீட்டை விட்டுத்தந்துவிடுங்கள்.. இப்போதைய சூழலில், கட்சி நிர்வாகிகள் அவர் பக்கம்தான் நிறைய உள்ளனர்.. சட்டசபை தேர்தலில் நிறைய எம்எல்ஏக்களை பெற்று தந்துள்ளது தென்மண்டலங்கள்தான்.. கொங்குவையும் தாண்டி, தென்மண்டலங்களிலும் எடப்பாடிக்கான ஆதரவு உள்ளது.. 80 சதவீதத்துக்கும் மேல் மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் உள்ளனர்.. 4 வருட ஆட்சியில் பெரிதாக சர்ச்சையில் சிக்காமல், நல்ல பெயரை பெற்றுள்ளார்.. பிளஸ் பாயிண்ட் இப்படிப்பட்ட பிளஸ் பாயிண்ட்டுகள் உள்ளவர் கையில் கட்சி தலைமையை தந்தால்தான், அது எடுபடும்.. திமுக போன்ற கட்சிகளையும் சமாளிக்க முடியும்.. ஒருவேளை, யாருக்கு ஆதரவு என்ற வாக்கெடுப்பை, கையில் எடுத்துவிட்டால், உங்களுக்குதான் ஓட்டுக்குள் குறைவாக விழும்.. இதனால், இருக்கும் மதிப்பும் குறைய வாய்ப்புண்டு.. அந்த அளவுக்கு போகாமல், எடப்பாடியையே தலைவராக இருக்க வழிவிடுங்கள்.. உங்கள் மகனுக்கு டெல்லியில் சீட் விவகாரம் உட்பட அனைத்தையும் கட்சி பார்த்து கொள்ளும்” என்று பேசினார்களாம்.. ஆனால், ஓபிஎஸ் அதற்கு கறாராக மறுத்துவிட்டாராம். எடப்பாடி பழனிசாமி இப்படிப்பட்ட சூழலில், ஒரு தனியார் டிவி சேனலில் ஓபிஎஸ் ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அதில், நெறியாளர் கேட்ட கேள்வி இதுதான்: “ஒற்றை தலைமை வேண்டும் என்றுதானே அவங்க சொல்றாங்க.. ஆனால், அவங்க யார் பெயரையும், பழனிசாமியா? பன்னீர்செல்வமா? அல்லது வேற யாராவதா? என்று குறிப்பிட்டு எதுவுமே சொல்லியே” என்று கேட்டார்.. அதற்கு ஓபிஎஸ்.. “இப்போதைக்கு இது தேவையில்லாத கருத்து.. 2 மாதத்துக்கு முன்னாடிதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.. தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற்று கழக அமைப்பு ரீதியான தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.. அப்படி இருக்கும்போது, இந்த பேச்சு இப்போது தேவையா? என்பதே என் கேள்வி” என்றார். உடனே நெறியாளர், “இரட்டை தலைமை நல்லாதான் போய்ட்டு இருக்குன்னு சொல்றீங்க.,,. அப்படின்னா இரட்டை தலைமையில் இதுநாள்வரை, எந்த பிரச்சனையும் உங்களுக்குள் இருந்ததே இல்லையா? உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, ஒற்றை தலைமை என்ற பேச்சு வந்தவுடனேயே, பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தான் நிற்கிறார்கள், உங்களுக்கு குறைவான ஆதரவு மட்டுமே இருக்கிறது என்று ஒரு பேச்சு இருக்கு.. இப்போ நீங்களே சொல்றீங்க, ஒன்றரை கோடி தொண்டர்கள்தான் அதை முடிவு செய்யணும்னு சொல்றீங்க.. அப்படி இருக்கும்போது, தேர்தலை நடத்துங்களேன்.. யார் யாருக்கு விருப்பமோ, இந்த தேர்தலில் நிற்கட்டும்.. ஒன்றரை கோடி தொண்டர்களே முடிவு செய்யட்டுமே? அப்படி ஒரு போட்டிக்கு நீங்க தயாரா இருக்கீங்களா? அப்படி தேர்தல் முறைதானே ஜனநாயகம்? என்று கேட்டார்.. இந்த கேள்வியை ஓபிஎஸ் எதிர்பார்க்கவேயில்லை.. ஒரு நிமிடம் திணறிவிட்டார்.. அமைதியாக இருந்தார்.. பிறகு சிரித்து சுதாரித்துக் கொண்டே, “இப்படி யூகமான கேள்விக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.. பொதுவாகவே கட்சிக்குள் போட்டி இருக்க கூடாது.. தேர்தல் நடைபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் நடத்தி, கசப்புணர்வை கட்சிக்குள் கொண்டுவர கூடாது.. யாராக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளக்கூடிய, ஏகமனதாக இருக்ககூடிய தலைவரை கொண்டு வரவேண்டும் என்பதே என் கருத்து.. ” என்றார். ஓபிஎஸ்ஸின் இந்த கருத்துக்கள் விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.. அதாவது தொண்டர்கள்தான் முக்கியம் என்று ஓபிஎஸ் சொல்வது முக்கியம் என்றால், எதற்காக தேர்தலுக்கு சம்மதிக்க தயங்குகிறார்? உண்மையிலேயே அவருக்கு ஆதரவுகள் கட்சிக்குள் குறைவாக உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.. தொண்டர்கள் தேர்தல் என்றாலும் ஓபிஎஸ் ஒப்புக் கொள்ளவில்லை, கட்சிக்குள் நிர்வாகிகளே ஓட்டுப்போட்டு தேர்வு செய்யட்டும் என்றாலும் ஓபிஎஸ் ஒப்புக் கொள்ளவில்லை.. எதற்குமே வழிவிடாமல் இருக்கிறார் என்றால், இதில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்ற முணுமுணுப்புகள் எழுந்துள்ளன. அதிமுகவின் இரட்டைத் தலைமைகளான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஜெயலலிதா மறைவு தொடங்கி பனிப்போர் இருந்து வருவது உண்மைதான். ஆனால், தொண்டர்களின் விருப்பம் காரணமாகவும், கட்சியையும், சின்னத்தையும் காப்பாற்றுவதற்காகவும் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், ஆட்சியில் துணை முதல்வர் பதவியையும் ஓ.பி.எஸ்ஸுக்கு வழங்கினார் ஈபிஎஸ். வேட்பாளர் தேர்வில் இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது கட்சி விவகாரங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும் வாடிக்கைதான். வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பு விவகாரத்தில் இது கொஞ்சம் உச்சமடைவதும் சகஜம். அப்படித்தான், சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வின்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு வலுத்தது. என்றைக்கும் இடைஞ்சல்தான் ஒருகட்டத்தில், டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, அவரையே வேட்பாளர் யார் என்று சொல்லச் சொல்லுங்கள், பேசி ஆலோசிப்பதற்கு எல்லாம் ஒன்றுமில்லை, எனக்கு வேறு வேலை இருக்கிறது எனச் சொல்லிவிட்டார். அப்போதே, தனக்கு எவ்வளவுதான் கட்சியில் ஆதரவு இருந்தாலும் ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளராக இருப்பது தனக்கு என்றைக்குமே குடைச்சல் தான் என்பதை தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், தான் கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தை தனது ஆதரவாளர்களிடம் எடுத்துக் சொல்லி,குரல் எழுப்பச் சொன்னதாகச் சொல்லப்படுது. அதற்குப் பிறகு ‘ஒற்றைத் தலைமை’ விவாதம் புயல் போல கிளம்பி கடந்த சில நாட்களாக அதிமுகவே பரபரப்பில் இருப்பதைப் பார்த்து வருகிறோம். இன்னொரு காரணமும் இருக்குது. எடப்பாடி பழனிசாமி திடீரென இந்த முடிவுக்கு வந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு என்று கிசுகிசுக்கிறார்கள் இலைக்கட்சியினர். கொடநாடு கொலை – கொள்ளை வழக்கு, தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள், அதிமுகவை கைப்பற்ற சசிகலா எடுத்து வரும் முயற்சி ஆகியவையே எடப்பாடி பழனிசாமியின் அவசரத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுது. கொடநாடு வழக்கு கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் இன்னும் விலகாமல் இருந்து வருது. கொடநாடு வழக்கில் தனக்கு பின்னடைவு ஏற்பட்டால், அதைப் பயன்படுத்தி கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் ஓ.பி.எஸ் எடுத்துக்கொள்வார்னு பயந்து தான், அதற்கு முன்பாக அனைத்து அதிகாரங்களையும் தனது கைக்குக் கொண்டு வருவதற்காக இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கிளப்பி இருக்கலாம் என்கிறார்கள். இது உண்மையா என்பது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெளிச்சம்.இதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிகளை அனுப்பி ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறாராம். தம்பிதுரை, செங்கோட்டையன், ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸிடம் சமாதானம் பேசியுள்ளனர். அப்போது கட்சியில் உள்ள முக்கிய பதவியான அவைத் தலைவர் பதவியை கொடுப்பதுடன், மகன் ரவீந்திரநாத்திற்கு கடைசி வரை சீட் கொடுக்கிறோம். எனவே ஒற்றைத் தலைமையை விட்டுக் கொடுத்துவிடுங்கள், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆதரவு உங்களை காட்டிலும் ஓபிஎஸ்ஸுக்கே இருக்கிறது. அவருடன் (இபிஎஸ்) போட்டியிட்டாலும் உங்களால் வெல்ல முடியாது என்றனராம். இதனால் கோபமடைந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் ஆதரவு அதிகம். கையெழுத்து பெரும்பாலான நிர்வாகிகளும் அவர் பக்கம்தான் இருக்கிறார்கள். பிறகு ஏன் என்னை வந்து சமாதானப்படுத்துகிறீர்கள், உங்களால் ஆனதை பாருங்கள். எதுவாக இருந்தாலும் எந்த தீர்மானம் நிறைவேற்றினால் கடைசியில் கையெழுத்தை பெற என்னிடம்தான் வந்தாக வேண்டும் என கூறி அனுப்பினாராம். எனவே இரட்டை தலைமையில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.ஒருவேளை, ஓபிஎஸ்ஸின் வழிக்கு எடப்பாடி பழனிசாமி, இணங்கி சென்றால் இப்போதுபோலவே, பாஜக – திமுக ஆதரவு மனப்பான்மையில் ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகள் இனியும் தொடரக்கூடும் என்கிறார்கள்.. அல்லது ஓபிஎஸ்ஸை, புறக்கணித்தால், இலையை முடக்கி நிச்சயம் கட்சிக்கே செக் வைப்பார்.. இந்த பிரச்சனைக்கு 2 தீர்வு இருப்பதாக சொல்கிறார்கள்.. ஒன்று புது போஸ்டிங் உருவாக்கி, இரு தலைவர்களும் கட்சியை நடத்துவது, அல்லது எது வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்ற துணிச்சலுடன் எடப்பாடி களமிறங்குவது.. இதில் எது நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!
இது ஒரு புறம் இருக்க, எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்தில் செய்த அதே தவறை இந்த முறை ஓ.பன்னீர்செல்வம் செய்ய மாட்டாருன்னும் அவரது ஆதரவாளர்கள் சொல்லிக்கிட்டு வர்றாங்க.. அதிமுக ஒற்றைத் தலைமை யார் என்ற கேள்விக்கு, வரும் 23 ஆம் தேதி பதில் தெரிஞ்சிடும். பொறுத்திருந்து பார்ப்போம்… யார் அந்த ஆளுமைன்னு..!