வலிப்பு வருபவர்கள் நிறைய பேர் இறந்து போக என்ன காரணம் தெரியுமா?

வலிப்பு வியாதி என்பது பல வருடங்களாக உலகம் முழுவதும் இருந்து வருகிறது. இதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.சிலருக்கு இருப்பதை பார்த்து இருப்போம். இருந்தாலும் இதைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இது ஒரு வகையான நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி ஆகும். இதை பற்றின ஆய்வுகளும் மிகவும் குறைவாகவே நடந்து உள்ளது. மிகவும் சிலருக்கு இந்த வியாதி வருவதினால் இதைப் பற்றி பலரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த வியாதி வரும் சிலர் இந்த நோயினால் அவதிப்பட்டு ஒரு சில சமயம் உயிர்இழக்க நேரிடுகிறது என்று சில ஆய்வின் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம்மில் பலரும் வலிப்பு வியாதியை கேள்விப்பட்டிருந்தாலும் சிலருக்கு இதைப் பற்றி தெரியாது. இது ஒரு வகையான நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மூலம் வருகிறது. ஒரு சில நரம்புகள் சில சமயம் உறைந்துபோய் பாதித்துவிடுகிறது. இதனால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துமே மிகவும் துல்லியமாக சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியவையாக உள்ளது. சில சமயம் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த இது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. இப்பொழுது நடந்த ஒரு ஆய்வில் இந்த வகையான வியாதியில் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களைக் காட்டிலும் உயிரிழப்பதற்கான ஆபத்து இவர்களுக்கு ஆறு மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

ஐரோப்பியன் அகாடமி ஆஃப் நியூராலஜி என்கிற நிறுவனத்தில் இந்த தகவல் பிரசுரிக்கப்பட்டது. அதாவது, மருத்துவ முறை மிகவும் சிறந்து விளங்கும் இந்த காலகட்டத்தில் கூட பலவிதமான நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிப்பது பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. அதை குணப்படுத்துவது மிகவும் கடுமையான காரியமாகவே இருக்கிறது. குறிப்பாக இந்த வலிப்பு வியாதிக்கு, பெரிய அளவில் குணப்படுத்தக்கூடிய சிகிச்சை முறைகள் இன்னும் சரி வரை இல்லை. சில சிகிச்சைகள் இருந்தாலும் பலருக்கும் அது உபயோகமாக இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது. 2009 இல் ஒரு லட்சத்தில் 6.8 பேர் மட்டுமே இழந்திருந்த சூழ்நிலையில் இப்பொழுது 2015இல் கணக்குப் பார்க்கும் பொழுது ஒரு லட்சத்தில் 9.1 என்கிற சதவீதத்தில் இறப்பு விகிதம் இருக்கிறது என்பது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த நோய் உள்ள பலருக்கும் இதன் அறிகுறிகள் வேறுபட்டு இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அறிகுறிகள் இருக்கும். இதில் மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் இறந்தவர்களில் 78% நபர்கள் 55 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்கிறது தான் மிகவும் கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.

இளைஞர்களிடம் இருக்கும் இந்த வலிப்பு வியாதியை கண்டுபிடிப்பதற்கு இந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழுவை அமைத்து பலரிடமும் பல வகையான தகவல்களை பதிவிறக்கி கொண்டனர். முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள பலவகையான மருத்துவமனைகள் மருத்துவ பணியாளர்கள் மூலம் இந்த தகவல்கள் பெறப்பட்டன. 2009ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை இந்த நோய் உள்ளவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோயினால் இறந்தவர்கள் என அனைத்து தகவல்களும் பெறப்பட்டன. இதில் 2009 முதல் 2014 வரை 2149 நபர்கள் வலிப்பு வியாதியினால் உயிர் இழந்துள்ளார்கள் என்பது அந்த தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதில் 516 நபர்கள் நரம்பு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் தங்களை சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளனர். 1726 நபர்கள் வலிப்பு வியாதி சிகிச்சை தரக்கூடிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். உயிர் இழப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே இவர்கள் அனைவருமே சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இருந்தாலும் இவர்கள் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என்று அனைவரும் கூறுகிறார்கள். இதில் இறந்தவர்களில் 78% பேர் இளைஞர்களாக இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று ஆய்வில் ஈடுபட்டவர் கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த தகவல்கள் மூலம் பலவகையான உண்மைகள் தெரியவந்துள்ளது. இந்த தகவல் மூலம் இனிமேல் அதிகபட்சமாக ஏற்பட இருக்கும் உயிரிழப்புகளை தடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறியிருக்கிறார்கள். முக்கியமாக அதிகபட்ச இளைஞர்கள் உயிரிழக்கிறார்கள் என்பதை இப்பொழுதே வெளியே வந்துள்ளது. இனிமேல் இவர்களுக்கு நல்ல சிகிச்சை முறை அளிக்க அனைவரும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். பெறபட்ட அனைத்து தகவல்களும் இப்பொழுது சிகிச்சை பெற்று இருக்கும் நாயகர்களையும் சென்று பார்த்து அவர்களுக்கு தேவையான வழிமுறைகளையும் கூறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அவர்கள் செய்த தவறை இவர்களும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று பல முயற்சிகளும் எடுத்து வந்துள்ளோம் என்று கூறுகிறார்கள்.

இந்த நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி என்பது இதுவரை ஐந்து கோடி பேரை தாக்கியுள்ளது. உலகம் முழுவதும் அறியப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளில் இது மிகவும் பொதுவான வியாதியாக கருதப்படுகிறது. இப்பொழுது இந்த வியாதியின் இறப்பு விகிதம் என்பது அதிகரித்து உள்ளது என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒரு லட்சம் நபர்களில் கிட்டத்தட்ட ஒன்பது பேர் இறக்கிறார்கள் என்பது வருத்தம் அளிக்க கூடியதாக இருக்கிறது. இதை குணப்படுத்துவதற்கு உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தங்கள் கண்டுபிடிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.