[9:16 pm, 14/07/2024] SANKAR MUTHALVAN TV: “நாங்கள் இன்னும் சிறுவர்கள் கிடையாது, நாங்கள் முதிர்ச்சியடைந்தவர்கள்” என்று டீன் பருவத்தை அடைந்த 13 சிறுவர்கள் ஒரு சாகச பயணத்துக்குத் தயாராகிறார்கள். இதற்காகப் பள்ளியைக் கட்டடித்து வெளியேறும் அவர்களின் பேருந்து பயணம் ஒரு போராட்டத்தால் தடைபடுகிறது. அதையடுத்து நடைப்பயணமாகக் காட்டுவழியில் செல்ல, அவர்களில் ஒவ்வொருவராக அடுத்தடுத்து காணாமல் போகிறார்கள். காணாமல் போனவர்கள் எங்கே, மற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்திபன் ஸ்டைலில் சொல்கிறது இந்த `டீன்ஸ்’.

படத்தின் தொடக்கத்தில் விடலைப் பருவ, சிறுவர், சிறுமியர்களின் நீண்ட உரையாடலும், சாகசப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் சொல்லும் காரணங்களும் ஒட்டவில்லை. எலைட் தன்மையை பறைசாற்றும் தொடர் ஆங்கில வசனங்களும், அதையொட்டி நீளும் ஆங்கில பாடல்களும், மேலோட்டமான அவர்கள் வாழ்வியலும் பார்வைய…
[9:30 pm, 14/07/2024] SANKAR MUTHALVAN TV: “நாங்கள் இன்னும் சிறுவர்கள் கிடையாது, நாங்கள் முதிர்ச்சியடைந்தவர்கள்” என்று டீன் ஏஜ் பருவத்தை அடைந்த 13 சிறுவர்கள் ஒரு சாகச பயணத்துக்குத் தயாராகிறார்கள். இதற்காகப் பள்ளியைக் கட்டடித்து வெளியேறும் அவர்களின் பேருந்து பயணம் ஒரு போராட்டத்தால் தடைபடுகிறது. அதையடுத்து நடைப்பயணமாகக் காட்டுவழியில் செல்ல, அவர்களில் ஒவ்வொருவராக அடுத்தடுத்து காணாமல் போகிறார்கள். காணாமல் போனவர்கள் எங்கே, மற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்திபன் ஸ்டைலில் சொல்கிறது இந்த `டீன்ஸ்’. படம்.

படத்தின் தொடக்கத்தில் விடலைப் பருவ, சிறுவர், சிறுமியர்களின் நீண்ட உரையாடலும், சாகசப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் சொல்லும் காரணங்களும் நம் மனதில் பதியவில்லை. எலைட் தன்மையை பறைசாற்றும் தொடர் ஆங்கில வசனங்களும், அதையொட்டி நீளும் ஆங்கில பாடல்களும், மேலோட்டமான அவர்கள் வாழ்வியலும் பார்வையாளர்களை அந்நியப்படுத்துகிறது.

சிறுவர், சிறுமியர்களின் வயதுக்கு மீறிய பேச்சும், நடவடிக்கைகளும் ஓவர் டோஸ். குறிப்பாக, குழந்தைத் தனம் நீங்காத அவர்களுக்குள் காதலையும், சிறிய ரொமான்ஸையும், காதல் பாடலையும் வைத்திருப்பது பொருந்தவில்லை. மேலும், அவர்களை கள் குடிப்பவர்களாக காட்சிப்படுத்தியிருப்பது மோசமான சித்தரிப்பு. பார்த்திபனுக்கு இது தேவையா? காட்சிக்கு காட்சி ஒருவர் காணாமல் போவது, அதையறிந்து சுற்றியிருப்பவர்கள் அலறுவது, கத்துவது, அழுவது, மீண்டும் நடப்பது இடையில் காதல் என ஒரே மாதிரியான காட்சிகளால் தேங்கி நிற்கிறது திரைக்கதை. சீரியஸான காட்சியின்போது வரும் புரபோஸல் போன்றவை ரசிக்கும்படியாக இல்லை.

பார்த்திபன் கஷ்டப்பட்டு படித்தார் என்பதற்காக கோல்டன் டிஸ்க், எலக்ட்ரோ மெக்னடிக் வேவ், என எல்லாவற்றையும் பாடமாக எடுப்பது அவருக்கு வேணும்னா விருப்பமா இருக்கலாம்.ரசிகர்களுக்கு பிடிக்கணுமே? க்ளைமாக்ஸை ஒட்டி நகரும் காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. நடுவில் யோகிபாபுவை வேறு அழைத்துவந்து சிரிப்புக்காக சீரியஸ் முயற்சி எடுத்துள்ளார் பார்த்திபன். எந்த முயற்சியுமே பலனளிக்கவில்லை.

உடல் பருமன் கொண்ட சிறுவன் எப்போதும் உணவில் கவனம் செலுத்துவது போன்ற கதாபாத்திர காட்சிகள் பொறுப்பற்றதன்மையாக இருக்கிறது.. ‘லெமன் மாலை போட்டு எமன் மாதிரி வர’, ‘well’ என்ற வார்த்தையை வைத்து செய்யும் ஜாலங்கள் பார்த்திபன் டச் வசனங்கள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன.படத்தின் முதல் பாதி அடுத்து என்ன, இவர்களுக்கு என்ன ஆனது என்ற ஒரு பதட்டத்தை ஏற்படுத்தினாலும், பேயா, அமானுஷ்யமா என இரண்டாம் பாதியில் இதற்கான லாஜிக்கை பார்த்திபன் உடைக்கும் இடம் அட இப்படியும் யோசிக்கலாமோ என்று சொல்ல வைக்கின்றது.

படத்தின் மிகப் பெரிய சிக்கல் ஒரு சிறுவனைத் தவிர, மற்ற கதாபாத்திரங்கள் வித்தியாசப்படாமல் ஒரேமாதிரி இருப்பதால் ஒருவர் காணாமல் போவதோ, அவர்களின் அழுகுரலோ, பதற்றமோ எதுவும் நம் காதுகளுக்கு எட்டுவதில்லை.

எந்த கனெக்‌ஷனும் இல்லாததும், மறுபுறம் சிறுவர்களைத் தேடும் பெற்றோர்களின் போராட்டத்தை கடமைக்கு காட்சிப்படுத்தியிருப்பதும் மனசுக்குள் ஒட்ட வில்லை. ஆணவப் படுகொலை குறித்தும், சாதிய ஒடுக்குமுறையையும் தொட்டிருக்கிறார் இயக்குநர். கிராஃபிக்ஸ் காட்சிகள் சில இடங்களில் கச்சிதமாக இருக்கிறது.

சிறுவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால், பல இடங்களில் வயதுக்கு மீறிய ஓவர் ஆக்டிங் செய்வதைத் தவிர்க்க  முடியவில்லை. தவிர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும். பார்த்திபன் அழுத்தமான நடிப்பை பதிவு செய்கிறார். யோகிபாபு கதாபாத்திரம் வீணடிப்பு.

டி.இமான் இசையில் ‘யேசு’ என தொடங்கும் பாடலைத் தாண்டி மற்ற பாடல்கள் மனசில் ஒட்டவில்லை. பின்னணி இசை காட்சிகளின் போக்கிலிருந்து கூடியோ, குறைந்தோ இருப்பதை உணர முடிகிறது. காவேமிக் ஆரியின் வித்தியாசமான கோணங்கள் கவனிக்க வைக்கின்றன. மொத்தத்தில், திரைக்கும் பார்வையாளர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்பை ஏற்படுத்தவில்லை இந்த பரிசோதனை முயற்சி.சாரி பார்த்திபன் சார்.?

Related posts:

'கலர்ஸ் ஆஃப் கோலிவுட்', எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தே...
மூட்டு தேய்மானம் # ஸ்டெம்செல் சிகிச்சை # டாஷ் மருத்துவமனை # சாதனை #
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !
நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
‘ஷாட் பூட் த்ரீ’-விமர்சனம்.!
வாட்ஸ்அப் என்ற பெயர் எப்படி உருவானது தெரியுமா..!
பல் மருத்துவத்தில் ஆசியா அளவில் ராஜன் பல் மருத்துவமனை சாதனை !
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் மெசேஞ் அனுப்ப இனி டைப் செய்யத் தேவையில்லை ! சொன்னால் அதுவே டைப் செய்து கொள்ளும் !!