முதல்வரின் ஆலோசகராக அசோக்வர்தன் ஷெட்டி?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசகராக மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கோட்டை வட்டாரத்தில பரபரப்பாக பேசப்பட்டு வருது.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தலைமை செயலாளர், முதல்வரின் ஆலோசகர்கள் என ஒவ்வொரு பொறுப்பிலும் நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட்டாங்க. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் இந்த தொடக்கமே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.இருந்தபோதும் முதல்வர் தரப்பில் ஆலோசகர் பதவிக்கு என ஒரு தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு மாஜி அதிகாரிக்குதான். அவர்தான் தமிழகம் நன்கு அறிந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி.திமுகவின் 2006-2011 ஆட்சி காலத்தில் துணை முதல்வராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தாரு தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போ உள்ளாட்சித்துறை செயலாளராக இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டிதான். மு.க.ஸ்டாலினுக்கு அரசு நிர்வாகம் குறித்த முழுமையான ஆலோசகராகவும் அசோக்வர்தன் ஷெட்டி செயல்பட்டார்.யார் இந்த அசோக் வரதன் ஷெட்டி.

1973 S.S.L.C முடிக்கிறாரு. அவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் B.L. படிச்சு முடிச்சிட்டு 1983 இல் IAS இல் சேர்ந்த முதல் ஆண்டிற்குப் பிறகு அவர் பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனத்தில் இருந்து விலகினார், ஆனால் 2002 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் MBA முடிச்சாரு. மாணவராக ஷெட்டி மாவட்ட மற்றும் மாநில அளவிலான வினாடி வினா மற்றும் விவாத போட்டிகளில் 30 க்கும் மேற்பட்ட பரிசுகளை ஜெயிச்சிருக்காரு, மேலும் 1979 இல் UNI-YMCA ஆல் ‘சிறந்த வினாடி வினா போட்டியாளர் விருது’ வழங்கப்பட்டது. முசௌரி (1983-85) லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் (ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு) பயிற்சியின் போது விளையாட்டு மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் (13 பரிசுகள்) அதிக எண்ணிக்கையிலான பரிசுகளை வென்றார்.

1985 இல் ஓசூரில் சப் கலெக்டராகத் தொடங்கி, .ஷெட்டி 1989 மற்றும் 1991 க்கு இடையில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உட்பட பல முக்கிய பதவிகள்ல இருந்திருக்கிறாரு. (1857 க்குப் பிறகு முதல் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அந்த வயதில் இளைய பதிவாளர் 31); சென்னை வடக்கு துணை ஆணையர் (வணிக வரிகள்), (1991-93); மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் (1993-94); ஊரக வளர்ச்சி இயக்குனர் (1996-98); மேலாண்மை இயக்குனர், TASMAC (1998-99); செயலாளர், முதல்வர் செயலகம் (1999-2001); மேலாண்மை இயக்குனர், SAGOSERVE, சேலம் (2003-06); முதன்மை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (2006-10); முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் (2010-11), மற்றவர்கள். IAS இலிருந்து தன்னார்வ ஓய்வு பெற்ற பிறகு, அவர் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார், சென்னை, மத்திய கப்பல் அமைச்சகத்தின் கீழ் மத்திய பல்கலைக்கழகம், 2014 மற்றும் 2017 க்கு இடையில் பணியில் இருந்திருக்கிறாரு.

2011 சட்டசபை தேர்தலில் அதிமுக வென்று ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், மு.க.ஸ்டாலினை சிறைக்குள் தள்ள முடிவு செய்தார். அப்போ மு.க.ஸ்டாலினின் ஆலோசகராக இருந்த அசோக்வர்தன் ஷெட்டியிடம் அவருக்கு எதிராக ஊழல் புகார் கொடுக்குமாறு கேட்டிருக்காரு ஜெயலலிதா. ஆனால், இதனை அசோக்வர்தன் ஷெட்டி திட்டவட்டமாக ஏற்க முடியாதுன்னு சொல்லிட்டாரு

தன்னோட பேச்சை கேட்காத ஒரு அதிகாரி தமது அரசாங்கத்தில் இருப்பதா? வழக்கம் போல முதல்வராக இருந்த ஜெயலலிதா டார்ச்சர் ஆயுதங்களை கையில் எடுத்தார். விருப்ப ஓய்வில் அரசு பணியிலிருந்து விலகணேம்னு அசோக்வர்தன் ஷெட்டிக்கு நாலா திசையிலும் ஜெயலலிதா தரப்பு டார்ச்சர் கொடுத்தது.1983 தொகுதி தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ், ஓய்வு பெற ஐந்து ஆண்டுகள் இருந்தது. மாநிலத்தின் நகராட்சித் துறையின் தலைவராக முதன்மைச் செயலாளர், ஷெட்டி, ஒரு பொறியாளர் மட்டுமல்ல MBA,பட்டதாரியும் கூட
அரசாங்கத்தை விட்டு வெளியேற விரும்பினார். செப்டம்பர் 2011 இல், அவர் தன்னார்வ ஓய்வுக்கு அதாவது VRS க்கு விண்ணப்பித்தார் மற்றும் டிசம்பர் 9 க்குள் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார், ஆனால் ஜெயலலிதா தலைமையிலான அரசாங்கம் அவரை மறுவாழ்வு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்த பிறகு, அந்த அதிகாரிக்கு எதிராக விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு கதை ஒரு புதிய திருப்பத்தை எடுத்தது. மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மை செயலாளராக இருந்தபோது ஷெட்டி நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் ஷெட்டி மீண்டும் போராட முடிவு செய்தார். அவர் இடைநீக்கம் செய்யப்படவில்லை என்ற வாதத்துடன் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை (சிஏடி) அணுகினார், மேலும் 28 ஆண்டுகள் சேவை மற்றும் 50 வயது ஆகிய விருப்பங்களை தன்னார்வ ஓய்வுக்கு தகுதியுள்ளவராக பூர்த்தி செய்தார்.
இறுதியாக, CAT இன் மெட்ராஸ் பெஞ்ச் அவரது வாதத்தை ஏற்று, அவரது ராஜினாமாவை ஏற்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டது. மூன்று மாதங்களுக்குள் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு சிஏடி மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மறைந்த ஜெயலலிதா அரசு அவரை விடுவித்தது இதனால் வெறுத்துப் போன அசோக்வர்தன் ஷெட்டியும் ஒரு கட்டத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பிறகு பல்வேறு சம்பவங்கள் நடந்தன.

ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டும் வகையில் மத்திய அரசின் ஒரு நிறுவனத்தில் மிக மிக முக்கிய பொறுப்பிலும் அமர்ந்தார் அசோக்வர்தன் ஷெட்டி. இதெல்லாம் அப்போதைய பரபரப்பு சம்பவங்கள். அதன்பிறகு குடும்பத்தினருடன் கனடாவில் செட்டிலாகி விட்டார் ஷெட்டி. அதேசமயம், மு.க.ஸ்டாலின் தரப்புடனான தொடர்பு மட்டும் நீடித்தபடி இருந்தது. எதிர்க்கட்சியாக மு.க. ஸ்டாலின் செயல்பட்டபோதும் பல ஆலோசனைகளை ஸ்டாலின் தரப்புக்கு வழங்கினார் அசோக்வர்தன் ஷெட்டி.இந்த நிலையில், திமுக ஆட்சியை கைப்பற்றியிருக்கும் சூழலில், தமிழக அரசின் ஆலோசகராக ஷெட்டியை கொண்டு வர விரும்பினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இது தொடர்பாக அவரிடமும் பேசப்பட்டதாம். ஆனால், உடனே வேண்டாம்; கொஞ்ச நாள் பொறுங்கள் என்று சொல்லி தனது சிஷ்யர்களான சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லி அரசு நிர்வாகத்தில் அவர்களது ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள் என சொல்லியிருந்தார். அதன்படி, அந்த ஆலோசனைகள்கேட்டுகிட்டு வர்றாரு. இந்த ஆலோசனைகள் சிலசமயம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இந்த நிலையில், கடந்த வாரம் அசோக்வர்தன்ஷெட்டி சென்னைக்கு வந்திருக்காரு; முதல்வர் மு.க.ஸ்டாலின் – அசோக்வர்தன் ஷெட்டி இடையேயான சந்திப்பு கிழக்கு கடற்கரை சாலை பங்களாவில் நடந்ததுன்னு சொல்றாங்க.. அதனால், தமிழக அரசின் ஆலோசகராக விரைவில் அசோக்வர்தன் ஷெட்டி நியமிக்கப்படுவார்னு கோட்டையிலுள்ள உயரதிகாரிகள் தரப்பில் ரகசியமாக பேசிக்கிட்டிருக்காங்களாம்

Related posts:

உளவுத்துறை உடனடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்
அடுத்த பிரதமராக யோகியை முன்னிறுத்தும் ஆர் எஸ் எஸ் ? என்ன செய்யப் போகிறார் மோடி ?
தமிழக அமைச்சரவை மாற்றம்!எட்டு மந்திரிகளுக்கு ' கல்தா' ?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து விசாரனை !
முடியவே முடியாது என்றனர்.. ஒரே கையெழுத்தில் செய்துகாட்டிய முதல்வர் ஸ்டாலின்.. எப்படி சாத்தியமானது?
லாட்டரி தொழில் நடத்தி நிதி சேர்க்கும் எண்ணமே திமுக அரசிடம் இல்லை!- PTR பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டம்!
எப்பல்லாம் தேர்தல் வருதோ கருத்துக் கணிப்பு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது !
சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்றாரா ? இல்லை தோற்கடிக்கப் பட்டாரா ?