மாமனாரை ‘மன்னன்’ ஆக்கிய பலே மருமகன்! MK Stalin-ஐ CM ஆக்கிய One Man Army

பத்தாண்டு கால திமுகவின் அதிகார கனவை நனவாக்கிய பெருமையை ஒருவர் உரிமை கொண்டாட முடியும்னா அது சபரீசன் தான்.

தேர்தலுக்கு முன்பு வரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன், இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன். இது மட்டும் அவருக்கான அடையாளம் அல்ல. ஸ்டாலின் முழுமையாக அவரை நம்பியது தான் சபரீசனுக்கான அடையாளம்.   முதல்வரின் ஒரே மகள் செந்தாமரையை காதல் திருமணம் புரிந்த சபரீசன், அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த நெல்லை மைந்தன். மனைவி செந்தாமரைக்கு இம்மியளவு கூட அரசியல் ஆசை கிடையாது. அவர், தான் சென்னையில் நடத்தும் பள்ளி வேலைகளில் மட்டுமே பிஸியாக இருப்பவர். ஆனால், சபரீசன் ஒரு ‘ஆல்ரவுண்டர்’. பிஸினஸ், அரசியல், சினிமா என்று எந்தத் துறையாக இருந்தாலும் அதில் தனது ஆளுமையை செலுத்தும் அளவுக்கு திறமைசாலி.

2016 தேர்தலில் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பாலிடிக்ஸ் ஆக்டிவ்னஸ், அவரது உடல் நலம் காரணமாக குறையக் குறைய, மெல்ல மெல்ல அரசியலில் சபரீசன் என்ட்ரி ஆகிறார். குறிப்பாக, 2016 சட்டமன்ற தேர்தலுக்கு சுனிலை தேர்தல் பிரசார உத்தி வகுக்க முக்கிய காரணமாக இருந்தவர் சபரீசன். ஆனால், திமுக அதில் தோல்வி அடைந்தாலும், கிட்டத்தட்ட அதிமுகவுக்கு இணையான வாக்கு சதவிகிதத்தைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்தது. அடுத்த தலைமுறைக்கான தலைவராக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் என்றாலும், டெக்னிக்கலாக அவ்வளவு ஸ்டிராங் கிடையாது. சினிமாவே தனது ‘Profession’ , அரசியல் ‘Passion’ மனநிலையில் இருப்பவர். இதை அவரே ஒரு பேட்டியிலும் சொல்லியிருக்கிறார். கட்சியின் ‘தி மோஸ்ட் சீனியர்’ தலைவர்கள் அரசியல் ரீதியாக ஆலோசகர்களாக இருந்தாலும், ஸ்டாலினுக்கு என்று பெர்சனலாக ஒரு நம்பிக்கைமிக்க, அதேசமயம் திறமையான நபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் சபரீசன். அவரது முக்கிய அஜெண்டாவாக இருந்தது, தேர்தலில் வெற்றிப் பெறுவதை விட ஒரு புதிய தலைமுறைக்கான தலைவராக, அடையாளமாக ஸ்டாலின் இருக்க வேண்டும் என்பது தான். வெறுப்பு அரசியல் சபரீசனின் பெரும் பலம் அவரது ‘Communication’ மற்றும் ‘Contacts’. தேசியத் தலைவர்கள் தொடங்கி உள்ளூர் தலைவர்கள் வரை, இவரது கால் லிஸ்டில் இல்லாத நபர்கள் எவரும் இருக்க முடியாது. குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடமும் நட்பு பாராட்டுவது இவரது ஸ்டைல். வெறுப்பு அரசியல்,  என்று எதுவுமில்லாமல் அனைத்து லீடர்களிடமும் ஏதோ ஒரு வகையில் நட்புடன் இருந்து வருகிறார். அவர்களுக்கு பிடித்த நபராகவும் இருக்கிறார்.

2021 தேர்தலுக்காக பிரஷாந்த் கிஷோரை மாமனாருக்கு அறிமுகம் செய்தது முதல், ‘ஸ்டாலின் தான் வர்றாரு, விடியல் தர போறாரு’ என்பதை நண்டு சிண்டெல்லாம் பாடும் அளவுக்கு ‘ரீச்’ செய்தது வரை, திமுகவின் ‘பெரும்பான்மை’ வெற்றியில், இவரது பங்கு பெரும்பான்மை வகிக்கிறது. எல்லாவற்றையும் விட, உதயநிதி, கனிமொழி ஆகியோருக்கு எந்த வகையிலும் அரசியல் போட்டியாக இருக்கப் போவதில்லை என்பது போன்ற இவரது அரசியல் மூவ்மென்ட்ஸ், குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த பயத்தையும், கவலையையும் கொடுக்காததால், இன்றைய நிலவரப்படி, திமுகவின் ‘ஒன் மேன் ஆர்மி’-யாக வலம் வருகிறார் சபரீசன்.முதலமைச்சர் நாற்காலியில் ஸ்டாலின் அமர்ந்திருக்க பின்புறம் சபரீசன் நிற்கிற மாதிரியான ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாச்சு.அந்த புகைப்படத்தில் நிற்கிற சபரீசனைப் பார்க்கும்போது மாமனாரை இந்த பதவியில உக்கார வைச்சதே நாந்தான்னு சொல்லாம சொல்றாரா ?

Related posts:

அமித்ஷா நெருக்கடி எதிரொலி- முதல் பட்டியலில் நிலக்கோட்டையைத் தக்கவைத்த எடப்பாடி
அதிமுக காங்கிரஸ் கூட்டணி? அதிர்ச்சியில் பாஜக ?
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை... எடப்பாடி சசிகலா இணைவார்களா ?
அண்ணாமலையால் விலகிச் செல்லும் அதிமுக!
அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய பதவிகளை அனுபவித்த ஓபிஎஸ், இன்று சொந்த கட்சியிலும்,தொகுதியிலும் அந்நியப்பட்டு நிற்கிறார். !
மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி ? தேர்தல் நடக்குமா ?
உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்?
சசிகலா தனிக்கட்சி ! அதிர்ச்சியில் திமுகவும் அதிமுகவும் ?