தமிழகத்தைச் சேர்ந்த 34 பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல் ?   

தமிழகத்தைச் சேர்ந்த 34 பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல்.

தமிழகத்தில் பொறியியல், கலைக் கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை முறை ஆன்லைன் மூலம்  நடைபெற்று வருகிறது.

பொறியியல் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. விண்ணப்பப் பதிவிற்கான கடைசி நாள் ஆகஸ்டு 16 ஆகும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒற்றைச் சாளரமுறையில் இணைய வழி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக  பெறப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில், சிறந்த கல்லூரிகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்பதை இங்கே காண்போம்:

தரவரிசைப் பட்டியல்:

உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல்:

இந்தியாவில் செயல்படும் உயர் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல், கற்றல், ஆதாரங்கள், ஆராய்ச்சி, தொழில்முறைப் பயிற்சி, பட்ட முடிவுகள் போன்ற அனைத்து முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் உருவாக்கப்படுகிறது.

இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில், 294 பல்கலைக்கழகங்கள், 1071 பொறியியல் கல்வி நிறுவனங்கள், 630 மேலாண்மை கல்வி நிறுவனங்கள், 334 மருந்துவத் துறை நிறுவனங்கள், 97 சட்டக்கல்வி நிறுவனங்கள், 118 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், 48 கட்டடக்கலை கல்வி நிறுவனங்கள், 1659 பொதுப் பட்டப்படிப்புக் கல்லூரிகள் என மொத்தம் 3771 நிறுவனங்கள்  பங்கேற்றன.

பல்கலைக்கழகங்களில் முதல்  100 இடம் பிடித்த நிறுவனங்களை, தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்; (தமிழகத்தைச் சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன)

பொறியியல் கல்வியில் முதல்  200 இடம் பித்த நிறுவனங்களை, தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்; தமிழகத்தைச் சேர்ந்த 34 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன  )

கல்லூரி பிரிவில் முதல்  100 இடம் பிடித்த நிறுவனங்களை, தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்; (தமிழகத்தைச் சேர்ந்த 32 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன  )

மருந்துத் துறையில் முதல் 75  இடம் பிடித்த நிறுவனங்களை, தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். (தமிழகத்தைச் சேர்ந்த 9 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்ச்சி விகிதப் பட்டியல்:

கடந்த ஆண்டு, ஏப்ரல்/மே, நவம்பா்/டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட செமஸ்டா் தோ்வு முடிவுகள் அடிப்படையில், கல்லூரிகளின் தேர்ச்சி விகிதப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

தன்னாட்சி பெறாத இணைப்புக் கல்லுரிகள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலைக்கழக வளாகங்கள் என தனித்தனியாக அண்ணா பல்கலைக்கழகம் பட்டியலிட்டது.

ACADEMIC PERFORMANCE OF AFFILIATED COLLEGES

2019 நவம்பா்/டிசம்பர் செமஸ்டர் தேர்வுகளில் ,443 தன்னாட்சி பெறாத இணைப்புக் கல்லுரிகளில் , 2 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகதங்களைப் பெற்றுள்ளன. 11 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை .

Member Secretary,National Board of Accreditation,
NBCC Place, East Tower, 4th floor
Bhisham Pitamah Marg
Pragati Vihar,
New Delhi 110003, INDIA

For General Query
Tel: +91-11-4015 9583
Tel: +91-11-2436 0653
Tel: +91-11-4015 9587
Tel: +91-11-4015 9589
E-mail: [email protected]
E-mail: [email protected]
(Monday to Friday-9:00 am to 5:30pm)

For Technical Query
Tel: +91-79-2326 8289
Tel: +91-79-2326 8247
E-mail: [email protected]
(Monday to Friday-9:30 am to 6:00pm)
https://www.nirfindia.org/2020/UniversityRanking.html

https;//www.nirfindia.org/2020/EngineeringRanking.html

https://www.nirfindia.org/2020/CollegeRanking.html

https://www.nirfindia.org/2020/PharmacyRanking.html