சென்னையில் 3 நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை !

( CBT Therapeutic Supervision Masterclass ) பயிற்சியளிப்பவர் மருத்துவர் Dr . ANDREW BECK , UK , DclinFsych , President – Elect of the British Association of Cognitive and Behavioural Psychotherapists ( BABCP ) , Consultant Clinical Psychologist & BABCP accredited supervisor , UK . மன நலம் சார்ந்த உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கானும் வகையில் , மூன்று நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறை , 2020 பிப்ரவரி 06 , 07 & 08 ஆகிய தேதிகளில் , சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள “ வெல்கம் ஹோட்டலில் ” ( Member ITC ‘ s Hotel group ) நடைபெற உள்ளது . இங்கிலாந்தில் புகழ்பெற்ற உளவியல் மருத்துவர் மற்றும் BABCP தலைவருமான Dr . ANDREW BECK தலைமையில் நடைபெற உள்ள இந்த பயிற்சி பட்டறையில் உளவியல் துறையில் பயிற்சி பெற்ற பலவேறு மருத்துவ நிபுணர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொள்கின்றனர் . இந்த 3 நாள் உளவியல் மருத்துவ பயிற்சி பட்டறையில் , உளவியல் ஆலோசகர்கள் , உளவியல் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மன நலம் சார்ந்த துறை நிபுணர்கள் போன்றோர் பயிற்சி பெற உள்ளார்கள் .

Anxiety , depression , suicidal tendencies , Obsessive Compulsive Disorder ( OCD ) , Paranoid disorders , Panic attacks , Post Traumatic Stress Disorder ( PTSD ) , Sleep disorders , School Refusal / Phobia , Marital Disorders , work stress burnout , and Somatoform disorders போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு பயிற்சியாளரை உருவாக்கும் Cognitive Behaviour Therapy ( CBT ) Therapeutic Supervision Masterclass பயிற்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது . சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள Care Institute of Behavioural Sciences ( HELP CHILD அறக்கட்டளையின் ஒரு பிரிவு ) சார்பில் இப்பயிற்சி நடைபெறுகிறது . இந்த பயிற்சி பட்டறையில் பயின்ற மன நல வல்லுநர்கள் மேலே குறிப்பிட்ட மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த CBT சிகிச்சையளிப்பதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஏதுவாகும் .