அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ! ஸ்டாலின் மனமாற்றம் ?

அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ! ஸ்டாலின் மனமாற்றம் ?துபாய் சென்று வந்த கையோடு அமைச்சரவையில் முதல் மாற்றத்தை அரங்கேற்றியிருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் மீது எந்த புகார் வந்தாலும் அது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்னு முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நேரத்திலேயே எச்சரிக்கை பண்ணியிருந்தாரு. இந்த விஷயத்தில் கலைஞர் கருணாநிதி போல் விட்டுபிடிப்பவர் அல்ல ஸ்டாலின், ஜெயலலிதா போல் உடனடியாக மாற்றம் தான்னு திமுகவினரே கசொல்லிட்டு வந்தாங்க. இந்நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற பத்து மாதங்களில் அமைச்சரவையில் முதல் மாற்றம் நடந்திருக்குது.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் எஸ்.எஸ்.சிவசங்கரை போக்குவரத்து துறை அமைச்சராகவும், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் மாற்றி உத்தரவு போட்டிருக்காரு முதல்வர் ஸ்டாலின்.ராஜ கண்ணப்பனை குறிவைத்து தான் இந்த மாற்றம் அரங்கேறியிருக்கிறது என்பது அரசியல் வட்டாரம் அறிந்த செய்தி தான். உண்மையில் பத்து மாதம் என்பதே அதிகம் தான். ராஜ கண்ணப்பன் விஷயத்தில் கடந்த சில மாதங்களாகவே முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருந்ததாக சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில உள்ளவங்க.இது ஒருபுறம் இருக்க, போக்குவரத்துறையினரின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும் மாணவர்களும் சந்தித்த பிரச்சினையும் முதல்வரின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளதாம். திங்கட்கிழமையன்று அகில இந்திய அளவில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தப் போராட்டத்திற்கு முதல்நாளில் தொமுசவை அழைத்து பேசாதது, பேருந்துகளை சரிவர இயக்க நடவடிக்கை எடுக்காதது என்ற காரணத்திற்காகவே அவரை போக்குவரத்துறைக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக நியமித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் போக்கும் வரத்துமாய் இருந்த ராஜகண்ணப்பன் 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் திமுகவில் ஐக்கியமானார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதுகளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அவரை அமைச்சராக்கினார் ஸ்டாலின்.
திமுக அரசின் மீது எந்த புகாரும், விமர்சனங்களும் வந்துடக்கூடாதுங்கிறதுல ஆரம்பத்திலேருந்தே கவனமாக இருந்தார் ஸ்டாலின்.இந்தநிலையில் தீபாவளிக்கு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்குவதற்காக ஆவின் நிறுவனத்தை தவிர்த்து வேறொரு தனியார் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய டெண்டர் வழங்க திட்டமிட்டதாகவும், இதற்காக பெற இருந்த கமிஷன் குறித்தும் தகவல் வெளியானது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியே குடுத்தாரு. முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆவின் நிறுவனத்துக்கு அந்த டெண்டர் வழங்கப்பட்டது. அப்போதே ராஜகண்ணப்பன் மீது ஒரு கண் வைத்துவிட்டார் ஸ்டாலின்.அதைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை ராஜகண்ணப்பனை சுற்றி வந்தது. விசிக தலைவர் திருமாவளவனை அழைத்து பேசிய அமைச்சர், தான் ஒரு பெரிய சோபாவில் அமர்ந்து கொண்டு, அருகில் இன்னொரு ஷோபா இருந்தபோதும் பிளாஸ்டிக் சேரில் திருமாவளவனை உட்கார வைத்துவிட்டார் என்றொரு சர்ச்சை கிளம்பியது.அது மட்டுமல்லாமல் போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் தோறும் டார்கெட் நிர்ணயித்து பணத்தை கறப்பதாகவும் புகார் ஒன்று மேலிடத்துக்கு சென்றது. இதன் தொடர்ச்சியாக எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டு 35 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தமிழக அரசின் அலுவலகம் ஒன்றில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி பணத்தை கைப்பற்றியது அரசுக்கு தலை குனிவை ஏற்படுத்தியது. இதனால் உடனே அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.நம்ம சேனல்ல அமைச்சர் ராஜகண்ணப்பன் டிஸ்மிஸ் செய்யப்படுவாருன்னு செய்தி போட்டிருந்தோம்.

அதுக்குப்பின்னாடி பட்ஜெட் கூட்டத் தொடர், துபாய் பயணம் எல்லாத்தையும் முடித்த ஸ்டாலினுக்கு வந்த உடனே இன்னொரு தகவலும் சொல்லப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக எழுந்த புகார் தான் ஸ்டாலினை உடனடியாக இலாகா மாற்ற முடிவை எடுக்க வைத்துள்ளது என்கிறார்கள்.லஞ்ச, முறைகேடு புகார்கள், அரசு அதிகாரியை ஜாதி பெயரை சொல்லி திட்டியது என, ஸ்டாலின் பார்வையில் ஏறிக் கொண்டே போன ராஜகண்ணப்பன் மீதான கோபம் தான் இன்று அவரது போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி பறிபோனதற்கு காரணம் என்பதை உடன்பிறப்புகளே ஒப்புக்கொள்வார்கள்.ஆனால், அவர் இதுநாள்வரை வகித்து வந்த முக்கிய பொறுப்பான போக்குவரத்து துறை அமைச்சர் பதவிக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை ஸ்டாலின் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன என்பதுதான் தமிழக அரசியலில் இன்றைய ஹாட் டாப்பிக்.

பொறியியல் பட்டதாரியான சிவசங்கருக்கு எழுத்தாளர் என்ற முகமும் உண்டு. முகநூல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள இவரது பதிவுகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டிருக்குது. அந்த அளவுக்கு ஆளுமைமிக்கவரான அவருக்கு பிற்பட்டோர் நலத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது நல்ல சாய்ஸ்தான்னாலும், இதைவிட கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு அவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமென்ற அவரது ஆதரவாளர்களின் கோரிக்கை ஸ்டாலின் காதுக்கு எட்டவே அதற்கான சந்தர்ப்பத்தை முதல்வர் பார்த்து கொண்டிருந்ததாக தெரியுது.
உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற திமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசி, கட்சித் தலைமையின் கூடுதல் கவனத்தை பெற்றார் சிவசங்கர். உதயநிதி அமைச்சராவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷின் பேச்சை வழிமொழிந்த சிவசங்கர், ஸ்டாலினை தாண்டி உதயநிதியின் குட்புக்கிலும் இடம் புடிச்சிருக்காரு.

எல்லாத்துக்கும் மேலா, திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் இருக்கும்ன்னு அப்போது உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறுவாருன்னும் அறிவாலயத்தில் சில மாதங்களாகவே தகவல்கள் வலம் வந்துகிட்டிருக்குது.

ஆனால், திமுக அரசில் தற்போது அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை அடிப்படையில், யாராவதொரு அமைச்சரை வெளியேற்றினால்தான், அந்த இடத்துக்கு உதயநிதியைக் கொண்டு வர முடியும் என்ற நிலைதான் இருக்குது. உதயநிதியை கூடியவிரைவில் அமைச்சர் ஆக்கியே தீரணும்ங்கிறதுல துர்கா ஸ்டாலின் உறுதியா இருக்கும் நிலையில், உதயநிதிக்காக யாரை பலிகடா ஆக்குறதுங்கிற தர்மசங்கடத்தில் ஸ்டாலின் இருந்து வருகிறாராம்.

இத்தகைய சூழலில்தான், லஞ்ச, முறைகேடு புகார்கள் காரணமாக ராஜகண்ணப்பனை போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவித்துவிட்டு அந்த இடத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரை கொண்டு வந்துள்ளார் ஸ்டாலின். பதிலுக்கு இதுநாள்வரை அவர் வகித்துவந்த பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் பொறுப்பை ராஜகண்ணப்பனுக்கு கொடுத்துள்ளார் முதல்வர்.
ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவின் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து வந்த சீனியரான ராஜ கண்ணப்பன், போக்குவரத்துத் துறை அமைச்சர் என்ற கெத்தான பதவியில் இருந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக தாம் மாற்றப்பட்டதை விரும்பமாட்டார். அவரது ஆதரவாளர்களும் இதனை ரசிக்கமாட்டார்கள். இதன் காரணமாக அவர் திமுகவில் இருந்து வெளியேறி மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் ஐக்கியமாகவும் வாய்ப்புள்ளது.

அப்படியொரு முடிவை ராஜ கண்ணப்பன் எடுத்தால், தற்போதைய தமிழக அமைச்சரவையில் இருந்து யாரையும் வெளியேற்றாமல், உதயநிதியை எளிதாக அமைச்சரவைக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பதுதான் ஸ்டாலின் கணக்கு என்கின்றனர் விவரமறிந்த உடன்பிறப்புகள்.
இலாகா மாற்றமும் தற்காலிக நடவடிக்கை தானாம், மே மாதம் அமைச்சரவை மாற்றம் இருக்கும் அதில் ராஜ கண்ணப்பன் பெயர் இடம்பெறாது என அடித்து சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.அமைச்சர் ராஜகண்ணப்ன் அமைச்சராக தொடர்வாரா இல்ல டிஸ்மிஸ் பண்ணப்படு வாராங்கிறத பொறுத்திருந்து தான் பாக்கணும்.