சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் தனது பயணவர்த்தக செயல்பாடுகளை சென்னையில் தொடங்கியுள்ளது.!

சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் (சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்-எஸ்.டி.பி) இந்த ஆண்டுக்கான தனது பயண வர்த்தகத்தை சென்னையில் தொடங்கியுள்ளது. “வளர்ந்து வரும் இணைப்புகள், ஒன்றிணைந்து இலக்கை அடைதல்” (Growing Connections, Achieving Together) என்ற கருப்பொருளின் அடிப்படையில், வர்த்தக செயல்பாட்டு விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்ச்சி (ரோட்ஷோ – road show) சென்னையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் (எஸ்.டி.பி.)மற்றும் அதன் சுற்றுலா கூட்டு பங்குதாரர்களின் தற்போதைய கூட்டு செயல்பாடுகளை ஆழமாக்குவதையும், உள்ளூரில் செயல்படும் பயண வர்த்தக நிறுவனங்களுடன் மேலும் நல்லிணக்கத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

சிங்கப்பூரை இந்திய பயணிகள் மிகவும் விரும்பித் தேர்வு செய்யும் சுற்றுலாத் தலமாக்குவதற்கான எஸ்.டி.பி.யின் முயற்சிகள் குறித்து பேசிய ஜி.பி.ஸ்ரீதர், சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் சிங்கப்பூர் சுற்றுலாச் சந்தையில் மூன்றாவது மிக முக்கிய நாடாக இந்தியா உள்ளது, மேலும் பயண வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள், ஊடக கூட்டாண்மை மற்றும் பல்வேறு சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் பயணிகளை வேகமாக ஈர்த்து வருகிறோம். 2020-ஆம் ஆண்டுக்கான எங்களது பயண வர்த்தக நடவடிக்கைகளை சென்னையில் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.ஒன்பது (9) தென்னிந்திய நகரங்களில் இருந்து (பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத், கொச்சி, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம்) சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன.இந்த 9 நகரங்களில் இருந்து சுமார் நான்கு மணிநேர விமான பயணத்தில் சிங்கப்பூரை அடையலாம். 2020-ம் ஆண்டில் நாங்கள் வழங்கும் கூடுதல் வர்த்தக ஆதரவின் வாயிலாக இந்த பிராந்தியத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான இந்திய பயணிகள் சிங்கப்பூருக்கு வருவார்கள் என்று நம்புகிறோம்.,இந்த முயற்சிகளின் மூலம், உணர்வு ரீதியிலான இணைப்பை மேலும் வலுப்படுத்தி பல இந்திய சுற்றுலாப்பயணிகளை சிங்கப்பூருக்கு ஈர்ப்போம்”என்றார்.

இந்த ரோட் ஷோவில் (விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்ச்சி) பங்கேற்ற செந்தோசா சென்டோசா
மேம்பாட்டுக் கழகத்தின் உதவி தலைமை செயல்பாட்டு அதிகாரி மற்றும் தலைமை நிதி அதிகாரி சின்சாக்ஹின்(Chin SakHin, Assistant Chief Executive & Chief Financial Officer, Sentosa Development Corporation) கூறுகையில் “சர்வதேச ஓய்வு பொழுது போக்கு மற்றும் சுற்றுலாத்துறையில் ஒரு முக்கிய செயல்பாட்டாளர் என்ற முறையில், உலகத்தரம் வாய்ந்த விடுமுறை கொண்டாட்ட சுற்றுலாத்தலமாக செண்டோசாவை தொடர்ந்து மேம்படுத்துவது எங்களுக்கு மிக முக்கியமானது. இதனால் உள்ளூர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என இருதரப்பினர் மனதிலுமே நாங்கள் இடம்பிடித்துள்ளோம். எங்கள் செயல்திட்டங்களில் நீண்டகால, நடுத்தரகால மற்றும் அண்மைக்கால வளர்ச்சித் திட்டங்கள் ஏராளமாக உள்ளன. பயணிகள் மற்றும் விருந்தினர்கள் ஒவ்வொரு முறையும் செண்டோசாவிற்கு வந்து திரும்பும் போது புதிய அம்சங்களைக் காண்பார்கள். செண்டோசாவிற்கு வரும் முக்கிய சுற்றுலாச் சந்தை நாடாக தொடர்ந்து இந்தியா இருந்து வருகிறது என்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். எந்தச் சூழலிலும் நாங்கள் எங்கள் பணிகளில் ஓயமாட்டோம். எங்கள் சர்வதேச ரசிகர் கூட்டத்துடன் எங்கள் ஈடுபாட்டை மேலும் ஆழமாக்குவோம். செண்டோசா, சிங்கப்பூர் சுற்றுலா அனுபவத்தின் ஒரு முக்கிய பகுதியாக தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்வோம்.”என்றார்.

சிங்கப்பூர் 2018-ம்ஆண்டில்இந்தியாவில்இருந்து 1.44 மில்லியன் (14 லட்சத்து 40 ஆயிரம்) பயணிகளை வரவேற்றுள்ளது, இது சிங்கப்பூர் சுற்றுலாசந்தையில் இந்த நாட்டுக்கு வந்துள்ள மூன்றாவது பெரிய வெளிநாட்டுப் பயணிகள் கொண்ட நாடாக இந்தியாவை ஆக்கியுள்ளது.அக்டோபர் 2019 இறுதியில், சிங்கப்பூருக்கு இந்தியாவில் இருந்து 1,190,000 பயணிகள் வந்துள்ளனர். சிங்கப்பூர் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய பயணிகள் வருவது தொடர்ச்சியாக இது 5-வது ஆண்டாகும், சிங்கப்பூர் வழங்கும் பல்வேறு சிறப்பான அனுபவங்கள் இந்திய சுற்றுலாப் பயணிகளை இங்கு வரத் தூண்டியுள்ளது.இந்திய சந்தையில் சிங்கப்பூர் பயணத்துறை வாரியத்துக்கு (எஸ்.டி.பி.) 2019 ஆம் ஆண்டு ஒரு மிகச் சிறந்த நிறைவான ஆண்டாகும்.எஸ்.டி.பிஅதன்வணிகக்குறியீட்டுஇலக்கான (brand destination) ஆர்வம் நிறைவேறும் என்ற கருப்பொருளை தீவிரமாக முன்னெடுத்து பல ஆக்கபூர்வமான நுகர்வோ ர்ஈடுபாட்டு முயற்சிகளை மேற்கொண்டது. டெல்லியில் சிங்கப்பூர் வீக்கெண்டர் 2.0, சோமலாந்தில் சிங்கப்பூர் அனுபவ மண்டலம் மற்றும் மும்பையில் நா அண்ட்மீ அறிமுகம் (சிங்கப்பூர் உணவு வகைகளை வழங்கும் ஒருசிறப்புஉணவகம்) போன்றவை அந்த சிறப்பு முன் முயற்சிகளாகும். நுகர்வோருடனான ஈடுபாடு மற்றும் செயல்பாடுகள் பல்வேறு நிகழ்ச்சி உள்ளடக்க ஒத்துழைப்புகளை உள்ளடக்கியதாகும்.