சரியான வாய்ப்பு.. டிரம்பை வைத்து மோடி நகர்த்தும் காய்கள்.. ஹவுடி மோடிக்கு பின் அதிரடி திட்டம்!

டெக்ஸாஸ்: அமெரிக்காவில் நடக்க உள்ள ஹவுடி மோடி விழா பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக பெரிய பலனை ஏற்படுத்தி கொடுக்க போகிறது என்று கூறுகிறார்கள். பலரும் எதிர்பார்க்கும் ஹவுடி மோடி விழா இன்று நடக்கிறது. அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் ஹவுடி மோடி விழா இன்று மாலை நடக்க உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் சேர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டெக்ஸாஸ் இந்தியா போரம் என்ற அமைப்பு மூலம் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோடி முதலில் இந்த விழாவில் மோடி மட்டுமே கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசியில் இதில் டிரம்பையும் கலந்து கொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் தரப்பு கொஞ்சமும் யோசிக்காமல் உடனே ஒப்புக்கொண்டது.