2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இப்படத்தில் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா, தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பிரேம்ஜி நடிப்பில் அவர் இயக்கியுள்ள சத்திய சோதனை திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகிவுள்ளது.
சங்குப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்த நபரை அவர் கை, கழுத்தில் பல சவரன் நகைகளோடு அவரை ஒரு காட்டில் வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர் கொலைகாரர்கள். அப்போது அந்த வழியே வந்த பிரேம்ஜி, அந்தப் பிணத்தின் மீது இருந்த அவரது வாட்ச், செல்போன் மற்றும் அரை பவுன் நகையை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த டூ வீலரில்கிளம்புகிறார். வரும் வழியில் ஒரு வயதான பாட்டியை டூவீலரில் ஏற்றிக் கொணைடு சங்குப்பட்டி காவல் நிலையத்தில் வந்து எடுத்த பொருட்களை ஒப்படைக்கிறார்.ஆனால் பிரதீப் சொல்வதை நம்பாத போலீசார் அவரை கஸ்டடியில் எடுக்கிறார்கள்.அவரை போலீஸ்காரர்கள் பிடித்து வைத்துக் கொண்டு மற்ற நகைகள் எங்கே என அவரை விசாரிக்கின்றனர்.அந்த பாடியில கிடந்ததைக் கொண்டு வந்து கொடுத்திட்டேன்.என்று சொனைனாலும் போலீஸ் நம்ப மறுக்கிறது.
இதற்கிடையே கொலை செய்த நான்கு பேரும் போலீசில் சரணடைகின்றனர். அப்பொழுது அவர்கள் வாக்குமூலத்தின் படி பிணத்தின் மீது பல சவரன் நகைகள் இருந்தது தெரிய வருகிறது. போலீசின் கவனம் முழுவதும் பிரேம்ஜி பக்கம் திரும்புகிறது.போலீசார் பிரேம்ஜியை அடிக்கிறார்கள்.அடி தாங்க முடியாத போலீசாரின் வாக்கி டாக்கியுடன் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடுகிறார் பிரதீப்(.பிரேம்ஜி)அதன் பிறகு நடப்பவற்றை பயங்கர காமெடியாக காட்டியிருக்கிறார்கள். மேலும் கொலைக்கு காரணமான நபர் யார் என்பதும் தெரிய வருகிறது.
தன் முதல் படத்தில் இதேபோல் ஒரு விபத்து மரணத்தைச் சுற்றி ஒரு கதையை உருவாக்கி அதைத் திறம்படக் கூறி கவனம் பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா, இப்படத்தில் ஒரு கொலை, அதைச் சுற்றி நடக்கும் நகைத் தேடல் சம்பவத்தை மிக ஜனரஞ்சனமாகவும், அதேசமயம் அதை ரசிக்கும் படியும் கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று, கைதட்டலும் பெற்று இருக்கிறார். ஒரு சின்னக் கதையை வைத்துக்கொண்டு ஒரு சிறிய கிராமத்தில் ஒரு ஐந்து ஆறு நடிகர்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் காட்சிகளை அமைத்து மிகவும் யதார்த்தமாகவும், எளிமையாகவும் காட்சிகளை நகர்த்தி, அதை ஜனரஞ்சகமாகவும் உருவாக்கி, சிறப்பான திரைக்கதை அமைத்திருப்பது இப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
சத்திய சோதனை படம் மூலம் நம்மை எல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. பிரதீப் தான் ஹீரோ என காட்டியிருந்தாலும், போலீஸ் கான்ஸ்டபிள் குபேரன்(சித்தன் மோகன்) அனைவரையும் கவர்கிறார்.சித்தன் மோகன் வசனம் பேசும் விதம் தியேட்டரில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெறுகிறது. சமூக வலைதளத்தில் தொடர்ந்து விளாசப்படும் பிரபல மூத்த பாடலாசிரியரை கலாய்த்திருக்கிறார் குபேரன்.
அப்பாவி மற்றும் நேர்மையானவராக வரும் பிரேம்ஜி அமரனின் கதாபாத்திரம் வாழ்க்கை பற்றி எதுவும் தெரியாதவராக காண்பிக்கப்பட்டிருக்கிறது. இது படத்திற்கு பிளஸ்ஸாகவும், மைனஸாகவும் அமைந்துவிடுகிறது.பிரேம்ஜி அமரன், சித்தன் மோகனை தவிர வேறு யாருக்கும் நடிக்க வாய்ப்பு இல்லை. ஹீரோயின் பெயருக்குத் தான் இருக்கிறார். அவர் இல்லாவிட்டாலும் படத்தில் பாதிப்பு இருந்திருக்காது.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லட்சுமி பாட்டி வரும் காட்சிகள் எல்லாம் தன் நடிப்பால் தெறிக்க விட்டிருக்கிறார். குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகளில் டெம்போ வேனில் கூலிங்கிளாஸ் மாட்டிக்கொண்டு பிரேம்ஜிக்கு ஒரு ஃப்ரிட்ஜை கல்யாணப் பரிசாகக் கொடுத்து விட்டு டாட்டா காட்டிவிட்டுச் செல்லும் போது இவரது யதார்த்த நடிப்பு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவரும் திரையரங்குகளில் கைத்தட்டல் பெறுகிறார்.தீபன் சக்கரவர்த்தி இசையில் ஐயப்ப சாமி பாடல் கவனம் பெற்று இருக்கிறது. அந்தப் பாடலை எழுதிய வேல்முருகன் மிகச் சிறப்பாக எழுதி அவரும் கவனம் பெற்றுள்ளார். ஆர்வி சரண் ஒளிப்பதிவில் போலீஸ் நிலைய சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் அயற்சி ஏற்படாமல் பார்த்துக்கொண்டு தேவையில்லாத டூயட் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என கமர்சியல் அம்சங்கள் எதையும் சேர்க்காமல் எதார்த்த சினிமாவை மிக எளிமையாகக் கொடுத்து ரசிக்க வைத்து படத்தை கரை சேர்த்துள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.
படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் அயற்சி ஏற்படாமல் பார்த்துக்கொண்டு தேவையில்லாத டூயட் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என கமர்சியல் அம்சங்கள் எதையும் சேர்க்காமல் யதார்த்த சினிமாவை மிக எளிமையாகக் கொடுத்து ரசிக்க வைத்து படத்தை கரை சேர்த்துள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இந்த மாதிரியான சின்ன பட்ஜெட் படங்கள் சிறப்பாக எடுக்கப்படுவது, தமிழ் சினிமாவிற்கு ஒரு வரப் பிரசாதமாக அமைகிறது.சத்திய சோதனை படம் நம்மை முழுவதுமாக இல்லாமல் ஆங்காங்கே நம்மை கவர்கிறது.