இலங்கையிலிருந்து தமிழகம் வர்றவங்க எல்லோரும் இன்றளவும் முக்கால்வாசி பேர் அகதி முகாமில் தான் அடைக்கப்பட்டு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் இருக்கும் சூழலில் அப்படியான இலங்கையிலிருந்த தமிழ்வாசியை வைத்து ஒரு குரூரமான அதுவும் பாரதிராஜாவையும் நடிக்க வைத்து இப்படி ஒரு கரூரமான ஒரு பக்கா சிகப்பு படத்தை கொடுத்து அசத்த முயன்றிருக்கும் இயக்குநருக்கு முதலில் ஒரு சபாஷ் சொல்லித்தான் ஆக வேண்டும்.தரமணி படத்தில் மிரட்டிய நடிகர் வசந்த் ரவி இந்த படத்திலும் வேற லெவலில் மிரட்டி உள்ளார். வசந்த் ரவி 8 அடி பாய்ந்தால் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிப்பில் 16 அடி பாய்ந்துள்ளார். கேங்ஸ்டர் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது என்பதால் கதை எதுவே இல்லாமல் பழிவாங்குவதற்குண்டான சரியான காரணம் இல்லாமல் காட்சிகளை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டது போல இருக்கும் ராக்கி ரசிக்க வைக்கிறதான்னு கேட்டா நிச்சயமா இல்லைன்னு தான் சொல்லணும்.
கையில் சுத்தியல்.. முகத்தில் வழியும் ரத்தம்.. பதறவிட்ட நயன்தாரா.. ராக்கி ப்ரோமோ வீடியோ! 2 ஆண்டுகள் வெயிட்டிங் வெறித்தனமான கொலை நடுங்கும் சண்டை காட்சிகள் நிறைந்த ராக்கி டிரைலர் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த படம் எப்போ ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ஒருவழியாக பிரச்சனை எல்லாம் முடிந்து திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. அதே பழிவாங்கும் கதை சென்னையில் லோக்கல் டானாக இருக்கும் மணிமாறனிடம் (பாரதிராஜா) அடியாளாக சேர்கிறார் இலங்கையில் இருந்து தஞ்சம் பிழைக்க வந்த ராக்கியின் தந்தை. அப்பாவுக்கு பிறகு மகன் ராக்கியும் (வசந்த் ரவி) மணிமாறனுக்கு அடியாளாக வேலை பார்க்கிறார். மணிமாறனின் மகனை ராக்கி ஒரு காரணத்திற்காக கிண்டல் செய்ய அதனால் ஏற்படும் ஈகோ பிரச்சினையால் ராக்கியின் அம்மாவான ரோகிணியை மணிமாறனின் மகன் கொலை செய்கிறான். 16 ஆண்டு சிறை தண்டைக்கு பிறகும் அம்மாவை கொன்றவனை ராக்கி கொலை செய்து விட்டு சிறைக்கு செல்ல 16 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து வெளியே வரும் ராக்கியை கொல்லத் துடிக்கும் மணிமாறனையும் அவனது அடியாட்களையும் ராக்கி எப்படி பழிவாங்குகிறார் என்பதை கிளைமேக்ஸ் ட்விஸ்ட் உடன் சொல்லி இருக்கும் படம் தான் ராக்கி.
படத்தின் பிளஸ் ஹாலிவுட் படங்களில் காணப்படும் அதீத வயலென்ஸ் காட்சிகள் ராக்கி படத்தில் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. அதற்கு தகுந்தவாறு வசந்த் ரவி மற்றும் பாரதிராஜாவின் நடிப்பு மிரட்டுகிறது. இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் இசை மற்றும் ஒளிப்பதிவாளர் ஷ்ரியாஸ் கிருஷ்ணாவின் பதைபதைக்க வைக்கும் ஷாட்கள் பயமுறுத்துகின்றன. கடைசி அந்த கிளைமேக்ஸ் காட்சியை யாருமே எதிர்பார்க்கவில்லை அந்த காட்சிக்கு தியேட்டரில் பயங்கர வரவேற்பைஅள்ளுகிறது. படத்தின் மைனஸ் சுத்தியல் கொண்டு மண்டையை உடைப்பது, குடலை உருவி மாலையாக போடுவது, ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை காட்சிகள் என அதீத வயலென்ஸ் காட்சிகள் படத்தின் பிளஸ் ஆக பார்க்கப்படும் அதே நேரத்தில் அதுவே மைனஸ் ஆகவும் மாறிவிடுகிறது. மேலும், சில லெங்த்தான காட்சிகள் பார்வையாளர்களை படுத்து தூங்க வைத்து விடுகிறது. மொத்தத்தில் இந்த ரத்தக்களறியான ராக்கியை இளைஞர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் குடும்பங்கள் தவிர்த்து விடுவார்கள்!