கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்!

கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘காட்டாளன்’ வனத்தில் நடக்கும் கடத்தல் சம்பவங்களை விறுவிறுப்புடன் விவரிக்கிறது

2024-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மார்கோ’ திரைப்படத்தை தொடர்ந்து கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷெரீப் முகம்மது தயாரித்துள்ள படமான ‘காட்டாளன்’ உலகமெங்கும் மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் லெனின் தமிழகமெங்கும் மே 28ம் தேதி வெளியிடுகிறார்.

பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ பெயருக்கேற்றார் போல் காட்டில் நடக்கும் பரபரப்பு கடத்தல் சம்பவங்களை திரையில் காட்டுகிறது. “பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக சென்று ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும், அடுத்தது என்ன என்று பார்வையாளர்களை ஒவ்வொரு நிமிடமும் பரவசத்தில் ஆழ்த்தும்,” என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

‘காட்டாளன்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், கபீர் சிங், சுனில், சித்திக், பர்த் திவாரி, ராஜ் திரன்தாசு, ஹரிஷங்கர் நாராயணன், ஆன்சன் பால் மற்றும் சந்தீப் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், பெப்ஸி மற்றும் எகசெட் ஆகிய இரண்டு யானைகள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன. உரிய அனுமதி பெற்று, விலங்குகளை துன்புறுத்தாமல் நிஜ யானைகள் இப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

‘கேஜிஎப்’ திரைப்படத்தை தனது இசையால் அதிர வைத்த ரவி பஸ்ரூர் ‘காட்டாளன்’ படத்திற்கு இசையமைக்க, ரேனா திவே ஒளிப்பதிவு மேற்கொள்ள. ஷமீர் முகம்மது படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் நேரடியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது.

“ஒரு பான் இந்தியா படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள ‘காட்டாளன்’ திரைப்படம் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் கவரும்,” என படக்குழுவினர் மேலும் கூறினர்.

Related posts:

ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது !

சென்னையில் RUC ஸ்போர்ட்ஸ் ஃபிலில் பெஸ்டிவலை F1 சாம்பியன் நரேன் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்!

*தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட 'வருணன்- காட் ஆஃப் வாட்டர்'' திரைப்படத்தின் முன்னோட்டம்!

மூட்டு தேய்மானம் # ஸ்டெம்செல் சிகிச்சை # டாஷ் மருத்துவமனை # சாதனை #

ஜெஃப் பிரிட்ஜின் ரிட்டர்னான 'டிரான்: ஏரஸ்' படத்தின் புதிய போஸ்டர் மற்றும் டிரெய்லரை டிஸ்னி வெளியிட்டுள்ளது!

*”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!*

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

‘பிளாக்மெயில்’ படத்தின் முன்னோட்டம் நிகழ்வு!