ஹபீபி–திரைவிமர்சனம்!

மீரா கதிரவன் இயக்கத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஹபீபி. நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்தருக்கிறார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார் . ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

1980 களில் திருநெல்வேலி மாவட்ட கிராமப் பின்னணியில் விசைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழாவாதாரத்தளம் கொண்ட :ஒரு முஸ்லீம் குடும்பததின் வாழ்க்கை, அவர்களின் உறவுகள், கனவுகள், போராட்டங்கள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்.

கஸ்தூரிராஜா தனது மனைவி தம்பி, மகன் என குடும்பத்தோடு விசைத்தறி தொழிலை செய்து குடும்பம் நடத்தி வருகிறார்கள். இவர் ஊரில் உள்ள அனைவருமே இந்த தொழிலை செய்து வருகின்றனர். இந்த தொழிலின் வருமானம் போதாமல் பல பேர் பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்கின்றனர். கஸ்தூரிராஜா தம்பியும் கல்யாணம் ஆனபிறகு வெளிநாடு செல்கிறார். மகன் ஈசா மாளவிகா மனோஜ்மீது காதல் கொள்கிறார். மாளவிகா மனோஜும் காதல் செய்கிறார். இவர்கள் நேரில் சந்திக்கும்போது பிரச்சினை ஏற்படுகிறது. இதன் பிறகு ஈசா மாளவிகா மனோஜ் காதல் நிறைவேறியதா? இல்லையா? கஸ்தூரிராஜாவின் குடும்பம் என்னவாயிற்று? என்பதை வாழ்க்கையின் எதார்த்தததை கவிதையாக எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருப்பதே படத்தின் மீதிக்கதை.

குடும்பத் தலைவனாக நடித்த இயக்குனர் கஸ்தூரிராஜா நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல
வேண்டும்..மகனாக நடித்த ஈசா கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். ஈசா காதலியாக மாளவிகா மனோஜும் சிறப்பாக நடித்துள்ளார்.சித்தி கேரக்டரில் நடித்த அனஸ்வரா, தனுஸ்ரீ, அனூஸ்ரியா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள்குமார், ரேகாகுமணன், கஸ்மத்பானு, மாஸ்டர் தீரன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்துசிறப்பாக நடித்துள்ளனர்.

மகேஷ்முத்துசாமியின் ஒளிப்பதிவும், சாம் சி எஸ் இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.தமிழ் சினிமாவில் மீண்டும் ஒர் தரமான, நேர்மையான படைப்பு ஹபீபி. இஸ்லாமிய குடும்ப வாழ்க்கை முறை, அவர்களின் பாசம், தியாகம், காதலை இப்படி எந்த தமிழ் படமும் காண்பித்தது இல்லை. இந்த படத்தைப் பார்ப்பவர்கள் பல இடங்களில் கண் கலங்காமல் இருக்க முடியாது. எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்த முடிவைச் சொல்லாமல் படத்தை முடித்து விட்டாரே என்கிற வருத்தம் ரசிகர்களுக்கு உண்டு இருந்தாலும் ஒரு நல்ல படத்தைக் கொடுத்த இயக்குனர் மீரா கதிரவனுக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்

Related posts:

நமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் - உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!

சரத்குமார்‍‍-அமிதாஷ் நடிக்கும் 'பரம்பொருள்' டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !

நடிகர் சங்கம் தேர்தல் செல்லாது, மறு தேர்தலுக்கு உத்தரவு !

பெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்...

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68 !

“பண்டிகை காலங்களில் சிறிய படங்களை வெளியிட முன்னுரிமை !‘அடவி’ இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேச்சு !!

'ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!*!

நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா !