உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்?

உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு, நடிகர் விஜய் அனுமதி அளிச்சிருக்கிறதா தகவல் வெளியாகி இருக்குது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியில் நடிகர் விஜய், அரசியலில் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளதுனோட முன்னோட்டம்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டிங்கிறாங்க.

தமிழகத்தில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை, சென்னை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருக்காரு. அப்போ விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரவேசத்தை பத்தி விரிவாக விவாதிச்சிருக்காங்க.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புறவங்க சுயேச்சையாக போட்டியிடலாம்ன்னு நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் பச்சைக் கொடி காட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய்யோட அனுமதி இல்லாம அவர் சொல்றதுக்கு வாய்ப்பேயில்லை. அதனால் நம்பலாம். ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டு ஜெயிச்சிருக்காங்க. இது ஒன்னும் புதுசு கெடையாது.

ஏற்கனவே சில தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் போட்டியிட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும், இப்போ விஜய் புகைப்படம் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும் தேர்தல்ல பயன்படுத்திக்கொள்ள நடிகர் விஜய் அனுமதி அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்குது. இதுதான் இப்போ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுது.

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து குறுகிய காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானவர் விஜயகாந்த். திமுக அதிமுகவுக்கு மாற்று இவர்தான்னு அப்போ பரபரப்பாகப் பேசப்பட்டது.தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை அவர் உருவாக்குவதற்கு முன்பாக தனது ரசிகர் மன்றத்தின் சார்பாக அந்த மன்ற நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் நின்னாங்க.. இதன் மூலம் மக்கள் மனதில் மறைமுகமாக விஜயகாந்துக்கு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கிய பிறகு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார் விஜயகாந்த் என்பது வரலாறு.

நடிகர் விஜய் சமீபகாலமாக தனது திரைப்படங்களில் சமூக கருத்துக்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை பேசி வர்றாரு. நடிகர் விஜய் அரசியலுக்கு வர்றதுக்கு விரும்புறாருங்கிறது நீண்டகாலமாக தகவல்கள் வந்துகிட்டு தான் இருக்குது. இதன் காரணமாத்தான், தலைவான்னு பெயரிடப்பட்ட அவரது திரைப்படம் வெளியாகும் போது சிக்கல்கள் ஏற்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இப்போ திரையுலகத்தில் விஜய் உச்சத்தில் இருக்கிறார். அந்த கிராஃப் குறையும்போது அரசியலுக்கு வருவதை அவர் விரும்புவார்னு சொல்றாங்க. அதற்கு முன்னோட்டமாத்தான் விஜயகாந்த் பாணியில் முதலில் உள்ளாட்சி தேர்தலில் தனது மக்கள் இயக்கத்தை களமிறக்கி விட்டு ஆழம் பார்க்க விரும்புகிறார்னு அரசியல் பார்வையாளர்கள் கருத்து சொல்றாங்க . எழுத்தாளர் ராம்கி ஒரு பேட்டியில் இதே கருத்தை தெரிவிச்சிருந்தாரு.

ரசிகர் மன்றம் அல்லது மக்கள் மன்றம் போன்ற அமைப்புகளில் நிறைய பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்களது குடும்பத்தினர் ஓட்டுக்களும் ஒட்டுமொத்தமாக கிடைக்கும் என்பதால் அதிகப்படியான ரசிகர் மன்றம் அல்லது மக்கள் மன்றம் வைத்திருக்கக்கூடிய நடிகர்களுக்கு இயல்பாகவே அரசியலில் இறங்க வேண்டும் என்ற ஆசை வருவது வாடிக்கையாக இருக்கிறது. அதிலும் தமிழக அரசியல் சூழ்நிலையில் முன்னணி நடிகர்கள் அனைவருமே அரசியல் ஆசைக்கு உட்பட்டவர்கள்தான்.

விஜயகாந்த் அரசியலில் எழுச்சி பெற்று இப்போது ஓய்வில் இருக்காரு. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன்னாரு.ஆனா வரல. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துட்டாரு. இளம் நடிகராக இருந்தாலும் விஷால் கூட அரசியல் ஆசை உள்ளவர்தான். இதில் விஜய் மட்டும் விதிவிலக்கு கெடையாது. இப்போதுள்ள சூழ்நிலையில், அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில், அரசியல் ஆசை இல்லாமல் நடிப்பை மட்டுமே கவனித்துவருபவர் நடிகர் அஜித் மட்டும்தான் என்கிறார்கள் திரையுலக வட்டாரத்தில்

கடந்த தேர்தலின் போது, நடிகர் விஜய் வாக்களிக்க வந்த போது சைக்கிளில் ஓட்டுச்சாவடிக்கு வந்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாக கண்டிப்பதற்காக அவர் இவ்வாறு வந்தாருன்னு சொல்லப்ப்பட்டது. திரைப்படங்கள் மட்டுமல்லாது நிஜத்திலும் இதுபோன்ற அரசியல் விவகாரங்களில் அவர் முன்னே நிற்கிறார். நீட் நுழைவுத்தேர்வு விவகாரத்தால் மாணவி அனிதா தற்கொலை செஞ்சப்போ அவரது குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னாரு. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தை யாருக்கும் தெரியாமப் போய் சந்திச்சு ஆறுதல் சொன்னாரு.அதனால உள்ளாட்சி தேர்தல், நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு அச்சாரம்ன்னு அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு, நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்குது. விஜயகாந்த் பாணியில் நடிகர் விஜய், அரசியலில் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளதன் முன்னோட்டம்தான் இந்த நடவடிக்கைன்னு சொல்லப்படுது.

தமிழகத்தில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்குது.

விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை, சென்னை பனையூர் அலுவலகத்தில் சந்தித்து சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருக்காரு.. அப்போ அரசியல் பிரவேசம் குறித்து விரிவா விவாதிச்சிருக்காங்களாம்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பினா சுயேச்சையாக போட்டியிடலாம்ன்னு அப்போ நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் பச்சைக் கொடி காட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டு ஜெயிச்சிருக்காங்க. இது ஒன்னும் புதுசு கெடையாது.

ஏற்கனவே சில தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் போட்டியிட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும், இப்போது விஜய் புகைப்படம் அப்புறம் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி இவற்றையெல்லாம் தேர்தல்ல பயன்படுத்திக்கொள்ள நடிகர் விஜய் அனுமதி அளிச்சிருக்கிறதா தகவல்கள் கசிநஞ்சிருக்குது.. இதுதான் இப்போ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுது.

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து குறுகிய காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானவர் விஜயகாந்த். தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை அவர் உருவாக்குவதற்கு முன்பாக தனது ரசிகர் மன்றத்தின் சார்பாக அந்த மன்ற நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் நின்னாங்க. இதன் மூலம் மக்கள் மனதில் மறைமுகமாக விஜயகாந்துக்கு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கிய பிறகு சட்டசபை தேர்தல்லயும் விஜயகாந்த் போட்டியிட்டாருங்கிறதுவரலாறு.

நடிகர் விஜய் சமீபகாலமாக தனது திரைப்படங்களில் சமூக கருத்துக்கள் மற்றும் அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு விருப்பம் கொண்டிருக்கிறார் என்று நீண்டகாலமாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இதன் காரணமாகத்தான், தலைவா என்று பெயரிடப்பட்ட அவரது திரைப்படம் வெளியாகும் போது சிக்கல்கள் ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

கடந்த தேர்தலின் போது, நடிகர் விஜய் வாக்களிக்க வந்த போது சைக்கிளில் ஓட்டுச்சாவடிக்கு வந்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாக கண்டிப்பதற்காக அவர் இவ்வாறு வந்தார் என்று கூறப்பட்டது. திரைப்படங்கள் மட்டுமல்லாது நிஜத்திலும் இதுபோன்ற அரசியல் விவகாரங்களில் அவர் முன்னே நிற்கிறார். நீட் நுழைவுத்தேர்வு விவகாரத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்த போது அவரது குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தை யாருக்கும் தெரியாமல் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். எனவே உள்ளாட்சி தேர்தல், நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு அச்சாரம் என்று அடித்துக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.