இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மானின்  அறிமுகப்படமான ‘மின்மினி’யில் தனது மாயாஜால இசை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்!

மிகச் சில திரைப்படங்களே சினிமா மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். அது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தில் நடந்துள்ளது.

இசையமைப்பாளர் ரஹ்மானின் இசையில் ‘எந்திரன்’ படத்தில் வெளியான ‘புதிய மனிதா…’ பாடலில் கதிஜா பாடகராக தனது மயக்கும் குரல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இப்போது ஹலிதா ஷமீமின் ‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். 1992 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ரஹ்மான் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். அவரது மகள் கதிஜா ‘மின்மினி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். அவரது அற்புதமான பின்னணி இசை மற்றும் மெலோடி பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான் பேசியிருப்பதாவது, “இதுபோன்ற மனதுக்கு இதமான பாராட்டுக்களைக் கேட்பது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். சரியான வழிகாட்டுதலுடன் எனது பலத்தை வளர்த்த என் குடும்பத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் தான் எல்லாப் புகழும். தமிழ்த் திரையுலகில் எனது இசைப் பயணத்தைத் தொடங்க ‘மின்மினி’ போன்ற ஒரு படம் எனக்குக் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தின் எமோஷன் மற்றும் சூழல் எனக்கு சிறந்த இசை அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இதயத்தைத் தொடும் நல்ல செய்தியுடன் சிறந்த இயக்கமும் ஒளிப்பதிவும் இருப்பது இந்தக் கதையின் பலம். இந்த வாய்ப்பைக் கொடுத்து எனக்கு ஆதரவு கொடுத்து நம்பிக்கையளித்த ஹலிதா ஷமீம் மேம், மனோஜ் பரமஹம்சா சார் மற்றும் முரளி சார் அவர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்” என்றார்.

‘மின்மினி’ திரைப்படம் மூன்று பதின்ம வயதினரை சுற்றி நடக்கும் ஃபீல் குட் திரைப்படமாகும்.  இப்படம்  வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9, 2024) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts:

‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா - வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!*

Samsung ‘Solve for Tomorrow’ Conducts First Ever Design Thinking Workshop to Develop Problem 1

*தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட 'வருணன்- காட் ஆஃப் வாட்டர்'' திரைப்படத்தின் முன்னோட்டம்!

புரொடியூசர் பஜார் தெலங்கானா வி எஃப் எக்ஸ், அனிமேஷன் மற்றும் கேமிங் சங்கத்துடன் (TVAGA) இணைந்து இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தொழில்நுட்பத் துறை நி...

‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங் !

நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா2' திரைப்படம் அதிகம் பார்வையாளர்களைக் கவர்ந்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது!

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்திய பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” அக்டோபர் 20 ஆம் தேதி வெள...

கடன் வாங்கப் போறீங்களா... இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!