16
May
குவஹாத்தியில் புதிய வணிக வாகன உதிரி பாகங்கள் கிடங்கை டாடா மோட்டார்ஸ் திறந்து வைத்துள்ளது இதுபோன்ற வகைகளில் முதன்முறையாக 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த கிடங்கு, வடகிழக்கில் டாடா அசல் உதிரி பாகங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், குவஹாத்தியில் புதிய வணிக வாகன உதிரி பாகங்கள் கிடங்கின் துவக்கத்தை இன்று அறிவித்தது. இந்த அதிநவீன வசதி முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு 1 லட்சம் சதுர அடியில் பரவி, முழு வணிக வாகன போர்ட்ஃபோலியோவுக்கான உதிரி பாகங்களை சேமிக்கிறது. இப்புதிய அமைவிடத்தின் சேர்ப்பானது, நிறுவனம் விரைவாகச் செயலாறற்வும் மற்றும் வடகிழக்கில் உள்ள டாடா அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களில் உதிரிபாகங்கள் எளிதாகக் கிடைக்கவும் உதவும். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிடங்கு செயல்முறைகள் மூலம் அதிக வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவைத் கிடைக்கும். டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய முழுமையான…
