சவுதி அரேபியாவுக்கும் சுற்றுலா செல்லலாம்! முதலில் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா!

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வரும் சவுதி அரேபியா நாடு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் இருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. காரணம் சுற்றுலா துறை மூலமும் வருமானம் ஈட்டவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது.நாளை முதல் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா வழங்க உள்ளது. மேலும், இதுபற்றி கூறுகையில் சவுதியில் 5 உலக பாரம்பரிய இடங்கள் உள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மேலும் இங்கு சுற்றி பார்க்க அதிக இடம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அந்நாட்டு பெண்கள் எப்போதும் போல் உடல் முழுவதும் மூடியபடி பாரம்பரிய உடை அணிந்து வருவர். ஆனால், சுற்றுலா வரும் பெண்களுக்கு அந்த உடை கட்டுப்பாடு கிடையாது. ஆனால் ஆடைஅணியும் முறையில் நாகரிகம் தேவை எனவும் குறிப்பிடபட்டுள்ளது.சுற்றுலா பயணிகளை கவருவதற்காக புதிய திரையரங்குகள், ஆண் பெண் என இருபாலரும் சேர்ந்து கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகள் என பல திட்டங்களை இளவரசர் முகமது பின் சல்மான் நடைமுறைப்படுத்த உள்ளார்.

சென்ற ஆண்டு விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை காண சுற்றுலா விசா வழங்கப்பட்டது. ஆனால், அங்கு ஆல்கஹால் தடை விதிக்கப்பட்டிருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் சவுதிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts:

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி ! முடக்கினார் டொனால்ட் டிரம்ப் !

நீர் நிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்? மத்திய அரசுஅதிரடி !

தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல் !

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி ?

சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் சட்டம் !

இரு சக்கர வாகன காப்பீடு ! அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!

சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் தனது பயணவர்த்தக செயல்பாடுகளை சென்னையில் தொடங்கியுள்ளது.!

வசதியற்ற 1,00,000 மூத்த குடிமக்களுக்கு ஆதரவுகரம் ! ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷனின் நிதி திரட்டல் நிகழ்ச்சி !