தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.!

முதலீடு நோக்கில் தங்கம் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தங்க முதலீட்டிற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கும்,அரசு வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வரிச்சலுகைகள்:தங்க சேமிப்பு பத்திரம், 8 ஆண்டு காலம் முதிர்வு கொண்டது. முதிர்வு காலம் வரை வைத்து இருந்தால், மூலதன ஆதாய வரி கிடையாது. முதிர்வு தொகைக்கு வரி கிடையாது.தங்க சேமிப்பு பத்திரங்கள் மீது கிடைக்கும் வருமான வரிச்சலுகை, தங்க ஈ.டி.எப்., மற்றும் தங்க மியூச்சுவல் பண்ட்களில் கிடையாது.தங்க நகைகள் மீது, 3 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.

தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. மேலும் செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகளும் இல்லை.தங்க சேமிப்பு பத்திர முதலீட்டிற்கு ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. இதற்கு டி.டீ.எஸ்., பிடித்தம் செய்யப்படுவதில்லை. வட்டி வருமானம், ஒருவரது வருமானத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். வேறு தங்க முதலீடுகள் எதுவும் வருமானம் அளிப்பதில்லை.

தங்க சேமிப்பு பத்திரங்களில் இருந்து, 5 ஆண்டுக்கு பின் வெளியேறலாம். இவை பங்குச் சந்தையிலும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. இம்மாதம், 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை இவை மீண்டும் வெளியிடப்படுகின்றன.

Related posts:

தொழில் சிறப்பான உயர்வை அடைய செய்யும் கன்டெனட் விளம்பரம்!

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் ?

உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைந்திட, IFQM-இன் முதலாவது MSME கருத்தரங்கம் ஒரு “தேசிய தர விரைவு முன்னெடுப்பிற்கு” (National Quality Sprint) ...

சென்னை வர்த்தக மையத்தில் தேசிய அளவிலான சோப் மற்றும் டிடர்ஜெண்ட் தொழில் கண்காட்சி !

கோனே நிறுவனம் 450 கோடி முதலீட்டில் சென்னையில் தனது மின்தூக்கி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது!

உலக சுற்றுலா தினத்தன்று, பிஸ்லேரி இன்டர்நேஷனல் ஊட்டியில் ‘மாற்றத்திற்கான பாட்டில்கள்’ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது!

Nestlé India Brings Warmth and Togetherness to Maha Kumbh 2025 Through Unique Experiences!