செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு  அபராத வரி வசூலிக்க மத்திய அரசு திட்டம்..!

ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அபராத வரி வசூலிக்க மத்திய அரசு திட்டம்..!

கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்நிலையில், கறுப்புப் பணத்தைத் தடுப்பதற்கான மற்றொரு கட்டமாக, மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தங்கத்திற்கான பொது மன்னிப்பு திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தங்கத்திற்கான பொது மன்னிப்பு திட்டம் 2016 ஆம் ஆண்டில் பணமாக்குதலுக்குப் பிறகு கறுப்புப் பணத்தைத் தடுப்பதில் பிரதமர் மோடி எடுத்த இரண்டாவது பெரிய நடவடிக்கையாகும். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி, ரசீது இல்லாமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க மத்திய…
Read More
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சாஹி நியமனம் !

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதியாக சாஹி நியமனம் !

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அமரேஷ்வர் பிரதாப் சாஹி (Amreshwar Pratap Sahi) என்பவர் பாட்னாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, அமரேஷ்வர் பிரதாப் சாஹி, நவம்பர் 13-ஆம் தேதிக்குள் பதவியேற்க குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
Read More
ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சரத்குமார் பரிசுகள் வழங்கினார்.

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சரத்குமார் பரிசுகள் வழங்கினார்.

பால்சன் பியூட்டி அண்ட் ஃபேஷன் (பி) லிமிடெட்டின் ஸ்லாம் லைஃப்ஸ்டைல் அண்ட் ஃபிட்னஸ் ஸ்டுடியோ கடந்த 26ந் தேதி ஸ்லாம் கிளாசிக் 1.0 என்கிற ஆணழகன் போட்டியை நடத்தியது. சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் ஓட்டலில் Dr ஜமுனாபாயி. ஸ்கின் லேப்இந்த போட்டியை நடத்தியது. இந்த ஆணழகன் போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 80 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த குமார் மானவா, மும்பையைச் சேர்ந்த தேஜல்கடம், சென்னையைச் சேர்ந்த திமோதி செல்வோரும் நடுவர்களாக பங்கேற்று வீர்களைத் தேர்வு செய்தனர். இந்நிகழ்ச்சி குறித்து பால்சன் குரூப் இயக்குனர் Dr.எஸ்ஆர் சாம் பால், பேசும்போது:இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். ஸ்லாம் கிளாசிக் என்ற நிகழ்ச்சி மூலம் ஆணழகன்களைத் தேர்ந்தெடுத்திருப்பது எங்களுக்குப் பெருமையே! இந்த ஆணழகன் போட்டி எங்களின் முதல் நிகழ்ச்சியாகும். இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்கள் தேசிய அளவில் வெற்றி பெற வேண்டுமென்பதே எங்கள் நோக்கமாகும்…
Read More
டிஜிட்டலுக்கு தனிநிறுவனம்! ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ திட்டம் !!

டிஜிட்டலுக்கு தனிநிறுவனம்! ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ திட்டம் !!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், டிஜிட்டல் பிரிவில் எடுக்கப்படும் முன் முயற்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், அதற்கென தனியாக ஒரு துணை நிறுவனத்தை அமைக்க இருக்கிறது. செயலிகள் உட்பட அனைத்து விதமான டிஜிட்டல் முன் முயற்சிகளுக்கான, தனியான ஒரு துணை நிறுவனமாக இது செயல்படும்.இந்நிறுவனம், 1.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கொண்ட நிறுவனமாக இருக்கும் வகையில், இதில் ரிலையன்ஸ் முதலீட்டை மேற்கொள்கிறது.இது குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இந்த புதிய நிறுவனத்தின் கட்டமைப்பு, உலகளவில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டதை போன்றதாக இருக்கும். இது, இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் சேவைகளுக்கான இயங்குதள நிறுவனத்தை உருவாக்கும்.இந்த புதிய நிறுவனம், உடல்நலம் மற்றும் கல்வி போன்ற துறைகளுக்கான தொழில்நுட்பம் குறித்த பணிகளை மேற்கொள்ள உள்ளது. அத்துடன் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் மெய்நிகர் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப பிரிவுகளிலும் ஈடுபடும்.மேலும், ‘மை ஜியோ, ஜியோ டிவி, ஜியோ சினிமா,…
Read More
தமிழக நீர் நிலைகள் இன்றைக்கு 39,202 ஆக குறைந்து விட்டது. !

தமிழக நீர் நிலைகள் இன்றைக்கு 39,202 ஆக குறைந்து விட்டது. !

நதிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், சிறு ஊரணிகள், குட்டைகள் என பல வகையான நீர் நிலைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, அவை கவனமாக மேலாண்மை செய்து பாதுகாக்கப்பட்டது. சோழர்கள் கட்டிய வீர நாராயணன் ஏரி, கல்லணை என்பவற்றையெல்லாம் அக்காலத்தில் எப்படி அமைத்தார்கள் என்று நமக்கு தெரியவில்லை. மதுரையிலுள்ள வண்டியூர் தெப்பக்குளம், மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள பொற்றாமரை குளம் என தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் குளங்கள், தெப்பங்கள் போன்றவை எப்பொழுதும் நீர் நிறைந்து இருப்பது, அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்தை கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழினம் அறிந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. இலட்சத்திற்கும் மேலாக இருந்த ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் இன்றைக்கு 39,202ஆக குறைந்து விட்டது. ஏரி மாவட்டமான ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் பழவேற்காடு, பொன்னேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஏரி, செலவப்பன் ஏரி போன்ற பல ஏரிகள் தனது இயற்கை தன்மைகளை இழந்துவிட்டன. இந்தியாவிலேயே குளங்கள், ஏரிப் பாசனம்…
Read More
பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனத் தொழிலதிபர்களுக்கு விசா தேவையில்லை !

பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனத் தொழிலதிபர்களுக்கு விசா தேவையில்லை !

பிரேசிலில் ஜனாதிபதியாக இந்த ஆண்டு பதவியேற்றவர் ஜாய்ர் போல்சோனாரா. இவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே விசா நடைமுறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து உள்ளார். அதாவது வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா நடைமுறை எளிதாக்கி உள்ளார். அதன்படி அமெரிக்கா , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை சார்ந்த தொழில் அதிபர்கள் , சுற்றுலா பயணிகளுக்கு பிரேசில் வர விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனா தொழிலதிபர்களுக்கும் , சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவை இல்லை என அறிவித்தார். பல்வேறு நாடுகளுக்கு விசா சலுகை அழிப்பதன் மூலம் தங்கள் நாட்டின் சுற்றுலாத் துறை மேம்படும் முடியும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.கடந்த ஆண்டு 6 மில்லியன் சுற்றுலா பயணிகள் பிரேசிலுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
Read More
தாய் நாட்டின் விடுதலைக்காக மருது பாண்டியர்களின் வீர மரணம் !

தாய் நாட்டின் விடுதலைக்காக மருது பாண்டியர்களின் வீர மரணம் !

இந்தப் படத்தை பத்தோடு பதினொன்றாவது மருது பாண்டியர்கள் படமாக பார்க்காமல் கூர்ந்து கவனித்து பாருங்கள். மாமன்னர் மருது பாண்டியர்கள் அவர்கள் வாழ்வில் அனுபவித்த பல துயரங்களும், அவர்களுக்கு நடந்த துரோகங்களும் முடிந்த வரை இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது..! படத்தில் ஒரு மாமன்னர்கள் குற்றவாளி போல சங்கிலி பூட்டி நிற்கிறார்களே... இவர்கள் நினைத்து இருந்தால், இவர்களை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை வெள்ளையனிடம் காட்டி கொடுத்துவிட்டு தனது நாட்டை பாதுகாத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து இருக்க முடியும்.ஆனால், அவர்கள் தன்னை நம்பி வந்த நண்பனுக்காக தனது ஒட்டு மொத்த வம்சத்தையுமே இழந்தனர்..! தாய் நாட்டின் விடுதலைக்காக இங்கு பலர் உயிர் நீத்து இருந்தாலும் மருது பாண்டியர்களின் வீர மரணம் மிகவும் மாறுபட்டது. உலகில் வேறு எந்த மன்னருக்கும் நடக்காத கொடூரம் மருது பாண்டியர்களுக்கு நடந்தது அவர்கள் வெள்ளையனை எதிர்த்தனர். ஆனால், வெள்ளையன் சிறிதும் மனசாட்சியின்றி மருது பாண்டியர்கள் குடும்பத்தில் உள்ள சிறு…
Read More
மூன்று மாதங்களில் இந்தியாவில் 4.9 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை !

மூன்று மாதங்களில் இந்தியாவில் 4.9 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை !

க்ஷியோமி நிறுவனத்தின் சந்தைப் பங்கு 26 சதவீதமாக உயர்ந்துள்ளது.பீச்சர் போன்களின் விற்பனை 37 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாத ஆளே இல்லை என்ற அளவுக்கு நம் மக்களிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு சிறப்புச் சலுகைகளுடன் குறைந்த விலைக்கு விற்பனை செய்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது விற்பனையை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இந்தியாவில் மிக வேகமாக வளரும் ஸ்மார்ட்போன் சந்தையில் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பல தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. இதனால் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த விவரங்களை கவுண்ட்டர் பாயிண்ட் ஆய்வு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 4.9 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில்…
Read More
சுஜித்தை மீட்க மணிகண்டன் குழு நடத்திய முயற்சியில் பின்னடைவு..?

சுஜித்தை மீட்க மணிகண்டன் குழு நடத்திய முயற்சியில் பின்னடைவு..?

அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே என்ற தாய்.. உம் என்று சொன்ன சுஜித்.. மீட்பு குழு உற்சாகம். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்திடம் அவரது தாய் மேரி பேசினார். அதற்கு சிறுவனும் பதில் சொல்லியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் உள்ள சுமார் 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில், சுஜித் என்ற 2 வயது சிறுவன் இன்று மாலை 5.40 மணி அளவில் எதிர்பாராதவிதமாக விழுந்துவிட்டார்.இதையடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரவு 12.50 மணியளவில் கிடைத்த தகவல்படி, குழந்தை 7 மணி நேரத்துக்கும் மேலாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருப்பதால் சோர்வடைந்து இருக்கிறது என்று தெரியவந்தது. எனவே சுஜித்திற்கு உற்சாகமூட்டும் வகையில், சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோரை வைத்து பேச வைத்துக் கொண்டிருக்கின்றனர் அதிகாரிகள். சுஜித் தாய் மேரி, "அம்மா இருக்கிறேன் கவலைப்படாதே" என்று கூறியதற்கு "உம்"…
Read More
`ஃபேஸ் ஆப் சென்னை 2019′ ! நிஃப்ட் (NIFT) கல்லூரி மாணவி நிர்ஜா முதலிடம் !!

`ஃபேஸ் ஆப் சென்னை 2019′ ! நிஃப்ட் (NIFT) கல்லூரி மாணவி நிர்ஜா முதலிடம் !!

நேச்சுரல்ஸ் - ஐரிஸ் கிளாம் இணைந்து நடத்திய `ஃபேஸ் ஆப் சென்னை 2019' இறுதிச்சுற்றில் பெண்களுக்கான பிரிவில் நிஃப்ட் (NIFT) கல்லூரியைச் சேர்ந்த மாணவி நிர்ஜா முதலிடம் பிடித்தார். ஆண்களுக்கான பிரிவில் தொழிலதிபர் முகமது யிஹியா, முதலிடம் பிடித்தார். `ஃபேஸ் ஆப் சென்னை 2019' நிகழ்ச்சி சென்னை ஜிஆர்டி கிராண்ட் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நந்திதா பாண்டே, வைஷாலி கோலா, ஹரித் தாரங் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏஆர்கே இந்தியா சேவை சங்கம் ஆதரவு அளித்தது. நேச்சுரல்ஸ் - ஐரிஸ் கிளாம் இணைந்து `ஃபேஸ் ஆப் சென்னை 2019' நிகழ்ச்சியை 8வது ஆண்டாக நடத்தின. இதன் மூலம் `போட்டோஜெனிக்' முகத்திற்கான தேடல் முடிவுக்கு வந்தது. இதன் இறுதிச்சுற்று பிரமாண்டமாக நடைபெற்றது. `ஃபேஸ் ஆப் சென்னை 2019' என்பது இளைஞர்கள், இளம் பெண்களின் முழுமையான அழகு, ஆளுமை மற்றும் நேர்மறையான அணுகு முறையை அடையாளம் காணும் `திறமை வேட்டை' என்னும் நிகழ்ச்சியாகும்.…
Read More