செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

வோடபோன் ஐடியா சேவைகளுக்கான கட்டணங்கள் டிசம்பர் முதல்  உயர்வு ?

வோடபோன் ஐடியா சேவைகளுக்கான கட்டணங்கள் டிசம்பர் முதல் உயர்வு ?

கடனில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம், நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், அதன் மொபைல் சேவைகளுக்கான கட்டணங்களை, டிசம்பர் முதல் தேதியிலிருந்து அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவங்களை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக, சேவைகளுக்கான கட்டணங்கள், டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது.இவ்வாறு அதன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தெந்த சேவைகளுக்கு, எவ்வளவு கட்டண உயர்வு என்பது குறித்த எந்த விபரங்களையும் வோடபோன் ஐடியா வெளியிடவில்லை. செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், வோடபோன் ஐடியா நிறுவனம், இதுவரை இந்திய சரித்திரத்தில் எந்த நிறுவனமும் கண்டிராத அளவுக்கு, 50 ஆயிரத்து, 921 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்தித்துள்ளது. சரிசெய்த மொத்த வருமானம் குறித்த வழக்கில், கடந்த மாதம், உச்ச நீதிமன்றம், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக, வழக்கு தொடர்ந்த மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.இதன் காரணமாக, பாக்கி…
Read More

22 கிராமங்களில் 20 லட்சம் மரங்களை நட்ட பெண்மணியை கௌரவித்த யுனெஸ்கோ!

22 கிராமங்களில் 20 லட்சம் மரங்களை நட்டு பராமரித்து வரும் தெலங்கானா பெண்மணியை யுனெஸ்கோ கௌரவித்துள்ளது. ஒருபுறம், பூகோள வெப்பமயமாதலால் முழு நாடும், உலகமும் கலக்கமடைந்து தொடர்ந்து கூட்டங்களை நடத்துகின்றன, மறுபுறம் இந்தியாவின் தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பாஸ்தாபூர் கிராமத்தில் வசிக்கும் சில்கப்பள்ளி அனுசயம்மா 22 கிராமங்களில் 20 லட்சம் மரங்களை நட்டு நல்வழி காண்பித்துள்ளார். அவற்றை நடவு செய்வதோடு, அதை பராமரித்து வருவதையும் தனது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அவரது இந்த பணிக்காக யுனெஸ்கோ அவரை கௌரவித்துள்ளது. தனது வாழ்க்கையை கவனித்துக்கொள்வது மட்டுமல்லாமல், நிலத்தின் ஆரோக்கியத்தைப் பற்றியும் கவலைப்பட்ட ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட அங்கிகாரமாக இது பார்க்கப்படுகிறது. மேலும் அவரது கதை மிகவும் போராட்டம் மற்றும் ஊக்கமளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்., "இது எனக்கு ஒரு கற்பனை போன்று உள்ளது. இந்த மதிப்புமிக்க விருதை என்னால் பெற முடியும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை" என…
Read More
கோனே நிறுவனம் 450 கோடி முதலீட்டில் சென்னையில் தனது மின்தூக்கி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது!

கோனே நிறுவனம் 450 கோடி முதலீட்டில் சென்னையில் தனது மின்தூக்கி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது!

மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் தயாரிப்பில் உலகில் முன்னணியில் உள்ள, கோனே கார்பரேஷனின் முழு உரிமம் உள்ள துணை நிறுவனமான, ’கோனே எலிவேட்டர் இந்தியா நிறுவனம்’ தனது உலகத் தரத்திலான மின்தூக்கிகளுக்கான தொழிற்சாலையை சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் கட்டமைத்து, அதைத் திறந்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலையை மேதகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெச்.இ.பெக்காஹாவிஸ்டா, தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கோனே நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்டிஹெர்லின்,கோனே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹென்ரிக்எர்னூர்த்,கோனே கார்பொரேஷன் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மற்றும் ஆஸ்திரேலியா செயல் துணைத்தலைவர் ஆக்செல்பெர்க்லிங், கோனே இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமித்கோஸ்ஸெயின் உள்ளிட்ட பலர் இந்தநிகழ்ச்சியில் பங்கேற்று முன்னிலை வகித்தனர். தேவைக்கு ஏற்ற அளவிலான உற்பத்தித்திறனுடன், 450 கோடி ரூபாய் முதலீட்டில்…
Read More
இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மத்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.!

இந்தியர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மத்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.!

இந்தியாவை டிஜிட்டல் ஆக்குவதற்கும், இந்திய அரசின் முன்முயற்சியான 'டிஜிட்டல் இந்தியா'வின் பார்வைக்கு ஏற்பவும், இந்திய குடிமக்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்காக இந்திய அரசு ஒவ்வொரு முறையும் பல்வேறு மொபைல் ஆப் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இந்திய அரசு அறிமுகப்படுத்திய மிகவும் பயனுள்ள 7 மொபைல் ஆப் பயன்பாடுகளைப் பார்ப்போம். BHIM-பிஎச்ஐஎம் : மொபைல் போன் வழியாக வேகமாக, பாதுகாப்பான, நம்பகமான, பணமில்லா பரிவர்த்தனை செய்ய பாரத் இண்டர்ஃபேஸ் பார் மணி(BHIM) உதவுகின்றது. யூபிஐ போன்ற ஒரு செயலியே பிஎச்ஐஎம். பிஎச்ஐஎம் செயலி இந்திய தேசிய கொடுப்பனவு கார்ப்பரேஷன் (NPCI) உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த செயலி இந்திய மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் என்றே கூரலாம். பண பரிமாற்றத்திற்கான முகவரி அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்களது நண்பர்கள், குடும்பம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை அனுப்பலாம் பெறலாம். யூபிஐ சேவையை ஏற்காத வங்கிகளுக்கும் ஐஎப்எஸ்சி(IFSC) மற்றும் எம்எம்ஐடி(MMID) பயன்படுத்து பணத்தை…
Read More
தமிழக மின்வாரியத்தில் 7,000 கோடி ரூபாய் நஷ்டம்?: மின் கட்டணம் உயருமா?

தமிழக மின்வாரியத்தில் 7,000 கோடி ரூபாய் நஷ்டம்?: மின் கட்டணம் உயருமா?

தமிழக மின்சாரவாரியத்தில் ரூ7 ஆயிரம் கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், காரணங்களைக்காட்டித்தான் புதிய இணைப்புக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல வகைகளில் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளன.தமிழகத்தில் 2 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. மேலும், கடைகள்(வணிகம்)-35 லட்சம், தொழிற்சாலைகள் 7 லட்சம்; விவசாயம் 21 லட்சம், குடிசைகள்-11 லட்சம் என 2.90 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள்ளன. இவ்வாறு மின்சாரத்தை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் செலுத்தும் கட்டணம், மானியம் போன்றவற்றின் வாயிலாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல், வாரியத்திற்கு ஆண்டுதோறும் வருவாய் கிடைக்கிறது.மற்றொருபுறம் ஊழியர்களுக்கு சம்பளம், எரிபொருள், கடனுக்கான வட்டி உள்ளிட்டவைக்கு செலவு செய்யப்படுகிறது. அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களிடமிருந்து சந்தையை விட அதிக விலைக்கு மின்சாரம்…
Read More
வாராக் கடன் சிக்கலில் வங்கிகள்..? கடனை கட்ட முடியாமல் தவிக்கும் மின்சார நிறுவனங்கள்?

வாராக் கடன் சிக்கலில் வங்கிகள்..? கடனை கட்ட முடியாமல் தவிக்கும் மின்சார நிறுவனங்கள்?

இந்தியாவில் ஆற்றல் சாரா மின்சார நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய கடன் தொகையினை ஒழுங்காக கொடுக்காததால், மீண்டும் இந்திய வங்கிகளில், வாராக் கடன் பிரச்னை தலை எடுக்கத் தொடங்கி இருக்கிறது.கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஆற்றல் சாரா மின்சார தயாரிப்பு நிறுவனத் துறைக்கு 3.22 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடுகளாக வந்திருக்கிறது. அதோடு வங்கிக் கடன்கள் மூலம், உள்நாட்டு முதலீடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமாராக 40 ஜிகா வாட் மின்சாரத்தை தயாரிக்கக் கூடிய ஆற்றல் சாரா மின்சார தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் 70% கடன் மூலமே தொடங்கப்பட்டு இருக்கின்றன. அதாவது 100 கோடி ரூபாய் முதல் போட்டு தொடங்க வேண்டிய தொழிலில் 70 கோடி ரூபாயை கடன் வாங்கி முதலீடு செய்து இருக்கிறார்கள். சரி இவ்வளவு கடன் வாங்கி தொடங்கிய கம்பெனி நன்றாக இயங்குகிறதா..? என்றால் பதில் நோ என்று தான் வருகிறது.…
Read More
ஆன்லைன் மளிகை வியாபாரம் ரூ.74,000 கோடிக்கு அதிகரிக்கும்.

ஆன்லைன் மளிகை வியாபாரம் ரூ.74,000 கோடிக்கு அதிகரிக்கும்.

ஆன்லைன் மளிகை வியாபாரம் வரும் 2023ம் ஆண்டில் 55 சதவிகிதம் அதிகரித்து 74,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று ஆய்வு நிறுவனமான ரெட்சீர் அறிக்கையில் கூறியுள்ளது.சர்வதேச அளவில் சில்லறை விற்பனை 10 சதவிகிதம் என்றும், இதில் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை 3.5 சதவிகிதம் ஆகும். இதே ஆன்லைன் மளிகை 0.2 சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது.எவ்வாறயினும் அனைத்து கண்களும் தற்போது ஆன்லைன் விற்பனையின் பக்கம் திரும்பியுள்ளது உண்மையே. இந்த நிலையில் இது குறித்து ரெட் சீர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2023ம் ஆண்டில் ஒட்டுமொத்த சந்தையில் 1.2 சதவிகிதத்தை எட்டும் என்றும், இது 55 சதவிகித வளர்ச்சி கண்டு, 74,000 கோடி ரூபாயாக பெருகும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் விற்பனையை ஊக்கப்படுத்தவும், தங்களது விற்பனையை மேம்படுத்தவும் அமேசான், பிளிப்கார்ட், க்ரோஃபர்ஸ் மற்றும் பிக்பாஸ்கெட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது திட்டங்களை வெளீயிட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் திட்டத்தில் பிக் பாஸ்கெட்…
Read More
குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு திட்டம்!சென்னையில் நடைபெற்றது!

குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு திட்டம்!சென்னையில் நடைபெற்றது!

குழந்தை தத்தெடுப்பு விழிப்புணர்வு திட்டம் நகரத்தில் நடைபெறுகிறது மெட்ராஸின் இன்னர் வீல் கிளப் மற்றும் சென்னை கேலக்ஸியின் இன்னர் வீல் கிளப் மற்றும் சமூக பாதுகாப்பு இயக்குநரகம்,தமிழ்நாடு அரசு.'இந்தியாவில் குழந்தை தத்தெடுப்பு எப்படி, என்ற விழிப்புணர்வு திட்டத்தை கூட்டாக ஏற்பாடு செய்து வருகிறது. தத்தெடுப்பு மக்களுக்கு ஒரு குழந்தையை குடும்பத்தில் சேர்ப்பதில் மகிழ்ச்சியை அளிக்கிறது, ஆனால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் உள்ளன பயணத்தைத் தொடங்க விரும்புவோர். தத்தெடுப்பு செயல்முறையின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போடுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பின்வரும் புகழ்பெற்ற நபர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்கள்.சமூக பாதுகாப்பு இயக்குநரகம் ஆணையர் ஸ்ரீ லால்வேனா ஐ.ஏ.எஸ்., அரசு. இந்திய குழந்தைகள் நல கவுன்சில் (ஐ.சி.சி.டபிள்யூ) தலைவர் மற்றும் மத்திய தத்தெடுப்பு வள முகமை (காரா) முன்னாள் தலைவர் - ஐ.சி.சி.டபிள்யூ துணைத் தலைவரும், "இந்தியாவில் குழந்தை தத்தெடுப்பு பற்றிய கையேடு" ஆசிரியருமான சந்திரதேவி தனிகாச்சலம், செல்வி.நள்ளினி ஒலிவண்ணன், மாவட்டத்…
Read More
கூடுதல் லாபத்தை பெற 18000 பேரின் வேலையை காலி செய்யப் போகும் கார்ப்பரேட் !

கூடுதல் லாபத்தை பெற 18000 பேரின் வேலையை காலி செய்யப் போகும் கார்ப்பரேட் !

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டாட காக்னிசன்ட் என்ற நிறுவனம் தனது ஊழியர்கள் 18000 பேரை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் வேலை செய்கின்றனர் இதில் 70% பேர் இந்தியர்கள். இதற்கு காரணமாய் பார்க்கப்படுவது காக்னிசன்ட் நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் கீத் உட்லி (42) என்ற ஊழியர் மன அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்தார். இதனால் பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் அவர்களுடான ஒப்பந்தத்தை ரத்து செய்தது . இதனை கருத்தில் கொண்டு 18,000 பேரை வேலையிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளது .இதற்கு மற்றொரு முக்கிய காரணம் அந்த நிறுவனம் அடுத்த நிதியாண்டில் கூடுதல் லாபத்தை பெற வேண்டும் என்பதற்காக பார்க்கப்படுகிறது .இது குறித்து அந்த நிறுவனம் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.என்னதான் காக்னிசன்ட் பெரிய நிறுவனமாக இருந்தாலும் தனது லாபம் தான் முக்கியம் ஊழியர்கள் குடும்பம் அவர்களின் உழைப்பு முக்கியம் என்று நினைக்காத எந்த நிறுவனமும் இறுதியில் தொழிலாளர்கள் போராட்டத்தை…
Read More
பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும்..! மத்திய அரசின் அதிரடி முடிவு !!

பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும்..! மத்திய அரசின் அதிரடி முடிவு !!

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும், முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும் மத்திய அரசு கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இனி எரிபொருள் சந்தையில் ஆயில் நிறுவனங்கள் தவிர புதியவர்களும் ஈடுபட இந்த அறிக்கை வழி வகுக்கும் என்றும், பெட்ரோல், டீசல் துறையில் வர்த்தகத்தில் ஈடுபட ஒரு நிறுவனம் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய ஒரு விதியை ரத்து செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதன் மூலம் இனி எரிபொருள் சந்தையில் சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இனி ரூ.250 கோடி போதும் இனி புதிதாக அங்கீகாரம் பெற விரும்பும் நிறுவனங்கள் 250 கோடி ரூபாய் வைத்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் படி இனி அதானி, சவுதி அராம்கோ மற்றும் சூப்பர் மார்கெட்களில் கூட ஆட்டோமொபைல் எரிபொருள் விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையங்களைத் திறக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில்லறை…
Read More