செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

யோகாவில் உலக சாதனை படைத்த விருதுநகர் சிறுமி !

யோகாவில் உலக சாதனை படைத்த விருதுநகர் சிறுமி !

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி முஜிதா, கண்டபேருண்ட ஆசனத்தைச் செய்து யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார்.விருதுநகர் சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ்-பார்வதி தம்பதியின் 9 வயது மகள் முஜிதா. செவல்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வருகிறார்.சிறு வயது முதல் யோகா கற்று வரும் மாணவி முஜிதா, அதைச் சிறப்பாகச் செய்து பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பாராட்டு பெற்றுள்ளார். இந்தநிலையில் 'நோபல் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெரும் வகையில் யோகா செய்து, அசத்தியிருக்கிறார் முஜிதா. பள்ளி வளாகத்தில் நடந்த இந்நிகழ்வில் ஒரு அடி அகலமும், 21 இன்ச் அளவுள்ள சிறிய மீன் தொட்டியில் கண்டபேருண்ட ஆசனத்தை 8 நிமிடம் செய்து உலக சாதனை படைத்தார். மிகவும் கஷ்டமான இந்த ஆசனத்தை அநாயசமாகச் செய்து சாதனை படைத்த முஜிதாவை அனைவரும் பாராட்டினார்கள். இதற்கு முன் 2012-ல் வெளிநாட்டில் ஒருவர் 3 நிமிடம் இதுபோன்ற யோகா செய்ததே சாதனையாகவே இருந்தது. அந்தச் சாதனையை…
Read More
தங்க நகைகளுக்கு2021-ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் ?

தங்க நகைகளுக்கு2021-ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் ?

தங்க நகைகளுக்கு வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது!! தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்படும் கலைப்பொருள்களுக்கு வரும் 2021 ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஹால்மாா்க் முத்திரை பெறுவது கட்டாயம் என்று மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளாா். இது தொடா்பான முறைப்படியான அறிவிக்கை வரும் 2020 ஜனவரி 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அவா் தெரிவித்தாா். தங்கத்தின் தரத்தை உறுதி செய்து ஹால்மாா்க் முத்திரை அளிக்கப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் தரச்சான்று அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இப்போது புழக்கத்தில் உள்ள தங்க நகைகளில் 40 சதவீதம் ஹால்மாா்க் தரச்சான்று முத்திரை கொண்டதாகும். இப்போது 14 கேரட், 18 கேரட், 22 கேரட் என மூன்று பிரிவுகளில் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க்…
Read More
ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார்அட்டை!

ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார்அட்டை!

தமிழகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதி, 308 அரசு இ-சேவை மையங்கள், 1,400 வங்கிக் கிளைகள், 1,500 அஞ்சலகங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும் பிஎஸ்என்எல் சேவை மையங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளும் வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன. சமூகநலத் துறையின் குழந்தைகள் நல மையங்கள் மூலமாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கான ஆதார் பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் அழுக்காகியும், சேதமடைந்தும் உள்ளன. பலர் அட்டையை தொலைத்தும் விடுகின்றனர். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை தொடங்கப்பட்டது.அதில் பெறப்படும் அட்டையில் உள்ள கியூஆர் கோடுகளை, குடும்ப அட்டை பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றால் படிக்க முடியவில்லை. அதனால் அந்த அட்டையை முழுமையாக பயன் படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், பிளாஸ்டிக் அட்டை வடிவில்…
Read More
வாரா கடன் பிரச்னையால் தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ?

வாரா கடன் பிரச்னையால் தவிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் ?

இந்திய வங்கி துறை சார்ந்த கவலைகளும், சந்தேகங்களும் தொடர்ந்து பங்கு சந்தையில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பொதுத் துறை வங்கிகள் சார்ந்த கவலைகள், சந்தையை கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் பாதித்ததை பார்த்தோம்.ஆனால், 2019ம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் நிலைமை ஒரளவு சரியாகி, அவர்களின் கவலைகள் ஒவ்வொன்றாக நீங்க ஆரம்பித்து விட்டன.மாறாக, பல முன்னணி தனியார் வங்கிகள் தங்கள் நிதி நிலையில் பெரும் சரிவையும், வாரா கடன் பெருக்கத்தையும் சந்தித்தன.ஆட்டம் கண்டுவிட்டன இதே காலகட்டத்தில், தனியார் நிதி நிறுவனங்களும் பல சவால்களுக்கு ஆளாகி, நலிந்த நிலைக்கு தள்ளப்பட்டன. பல தனியார் வீட்டு கடன் நிறுவனங்களும் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, பெரிதும் ஆட்டம் கண்டுவிட்டன. அவர்கள் தொடர்ந்து இயங்குவதே கேள்விக்குறி ஆகியிருப்பதை நாம் கண்டோம்.பங்கு சந்தையில் பல தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு கடன் நிறுவன பங்குகள் பெரும் சரிவைக்…
Read More
திருநங்கைகள் என்ற பெயர் மாற்றம் ? கொதித்தெழுந்துள்ள மூன்றாம் பாலினத்தவர்!!

திருநங்கைகள் என்ற பெயர் மாற்றம் ? கொதித்தெழுந்துள்ள மூன்றாம் பாலினத்தவர்!!

அரசு ஆவணங்களில் இருந்து 'திருநங்கை' என்ற வார்த்தை நீக்கம்?தமிழக அரசின் ஆவணங்களிலிருந்து "திருநங்கை" என்ற வார்த்தை நீக்கப்பட்டதாக கூறும் மூன்றாம் பாலினத்தவர்கள், அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.அரசு ஆவணங்களிலிருந்து திருநங்கை என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள மூன்றாம் பாலினத்தவர், அரசின் இந்த நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில். அடுத்த ஆண்டு ஏப்ரல் 15 -ஆம் தேதி (15-04-2020) திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சமூக நலத் துறை அண்மையில் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அரசாணையில், "திருநங்கைகள் தினத்தையொட்டி, அன்றைய நாளில் நடைபெறும் விழாவில் சிறந்த திருநங்கைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணையை மேற்கோள்காட்டி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், "தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் விழாவில், விருதுகளை பெற மாவட்ட அளவில் தகுதியான நபர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை, வரும் டிசம்பர் 31- ஆம் தேதிக்குள்…
Read More
தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம்? பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி வேதனை !

தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம்? பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி வேதனை !

பாபநாசம் தலையணை, தாமிரபரணி படித்துறை பகுதிகளை பார்வையிட்ட பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி, எண்ணிலடங்கா மாசுகளால் தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம் நிலவுவதாக வேதனையுடன் தெரிவித்தார். நெல்லை மாவட்டம், பாபநாசம் தலையணை, பாபநாசம் தாமிரபரணி படித்துறை பகுதிகளை பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஜோதிமதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், '' தாமிரபரணி நதியில் குளிக்க வருகைதரும் மக்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வற்ற நடவடிக்கைகளால் நதி மாசுபட்டு வருகிறது. குறிப்பாக சோப்பு போட்டு குளித்தல், துவைத்தல், பரிகாரம் முடித்த பிறகு துணிகளை ஆற்றிலேயே விட்டுச்செல்லுதல் போன்ற எண்ணிலடங்கா மாசுகளால் தாமிரபரணி தண்ணீர் விஷமாக மாறும் அபாயம் நிலவுகிறது. மேலும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி துவங்கும் இடத்திலேயே காணப்படும் இது போன்ற மாசுகளால் 1600 இக்கோலிய பாக்டீரியக்கள் உருவாகியுள்ளன. இதனால் மாசுபட்ட இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களுக்கு, இந்த பாக்டீரியாக்கள் தான் தண்ணீர் விஷமாக…
Read More
இந்தியாவில் மீண்டும் சாம்சாங் டிவி !.

இந்தியாவில் மீண்டும் சாம்சாங் டிவி !.

சாம்சங் இந்தியா ஒரு வருடத்திற்குப் பிறகு தொலைக்காட்சி உற்பத்தியை இந்தியாவில் மீண்டும் ஆரம்பிக்கிறது. எல்இடி டிவிக்களை தயாரிக்கும் செல் பேனல் மீதான இறக்குமதி வரியை ரத்து இந்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதன் காரணமாக மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்க சாம்சாங் இந்தியா திட்டமிட்டிருப்பதாக அந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சாங் இந்தியா, உள்நாட்டு டிவி தயாரிப்பு ஒப்பந்த உற்பத்தியாளரான டிக்சன் டெக்னாலஜிஸுடன் 55 அங்குலங்கள் வரை திரை அளவுகளில் தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.இவை இந்திய சந்தையில் 85% க்கும் அதிகமானவையாகும். இந்தியாவில் உள்ளூர் தொலைக்காட்சி உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்காக மற்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களுடள் ஒப்பந்தங்கள் செய்ய அந்த நிறுவனம் மதிப்பீடு செய்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி பிராண்டான சாம்சங், தொலைக்காட்சி தயாரிப்பதற்கான செல் பேனல்களுக்கு அரசாங்கம் வரிவிதித்தன் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை ஆலையை மூடியிருந்தது. இப்போது…
Read More
பொருளாதார மந்த நிலை காரணமாக, தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் ?

பொருளாதார மந்த நிலை காரணமாக, தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் ?

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பி.சி.எல்.,), இந்திய கப்பல் போக்குவரத்து (எஸ்.சி.ஐ.,) மற்றும் இந்திய சரக்கு பெட்டக கழகம் (கான்கார்) உள்ளிட்ட 5 நிறுவனத்தில், அரசின் வசமுள்ள பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டில்லியில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பி.பி.சி.எல்., எஸ்.சி.ஐ., மற்றும் கான்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள பங்குளை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருவாய் குறைந்துள்ளதால், வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன்படி, நாட்டின் இரண்டாவது பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில், மத்திய அரசின் வசமுள்ள 53.29 சதவீத பங்குகளை விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.பி.சி.எல்., முற்றிலும் தனியார் மயமாகும். மேலும் எஸ்.சி.ஐ.,…
Read More
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க தென்னகரயில்வே குழுக்கள் !

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க தென்னகரயில்வே குழுக்கள் !

நவம்பர் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தையடுத்து, தமிழக காவல்துறையின் முயற்சியுடன் ,தென்னக ரயில்வேயுடன் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, தென்னக ரயில்வேயின் ஜோனல் அளவிலும் , சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்ட அளவிலும் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை விவாதிக்க ,முதுநிலை(SAG - Senior Administrative Grade)மற்றும் இளநிலை(JAG- Junior Administrative Grade) மேலாளர்கள் அளவிலான பல்வேறு குழுக்களை உருவாக்க தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் திரு ஜான் தாமஸ் அவர்கள் முறைப்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் இது டிசம்பர் 3 இயக்கத்தின் மாவட்ட ,மாநில தலைவர்கள் மற்றும் தமிழக காவல்துறை மற்றும் பத்திரிக்கையாளர்களின் பெரிய வெற்றி. இந்தியாவிலேயே, மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படுவது இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
“தமிழகத்தில் சொத்து வரி உயர்வு ரத்து ! உள்ளாட்சி தேர்தல் பயமா?

“தமிழகத்தில் சொத்து வரி உயர்வு ரத்து ! உள்ளாட்சி தேர்தல் பயமா?

"தமிழகத்தில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், உரிமையாளர்கள் பழைய வரியை செலுத்தினால் போதும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் சொத்து வரி கடந்த வருடம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள சொத்துக்களின் வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. சொத்து வரி உயர்த்தப்பட்டதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையிலான இந்த குழுவில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேருராட்சி இயக்குநர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்கும்…
Read More