கூடுதல் லாபத்தை பெற 18000 பேரின் வேலையை காலி செய்யப் போகும் கார்ப்பரேட் !

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டாட காக்னிசன்ட் என்ற நிறுவனம் தனது ஊழியர்கள் 18000 பேரை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் வேலை செய்கின்றனர் இதில் 70% பேர் இந்தியர்கள்.

இதற்கு காரணமாய் பார்க்கப்படுவது காக்னிசன்ட் நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் கீத் உட்லி (42) என்ற ஊழியர் மன அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்தார். இதனால் பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் அவர்களுடான ஒப்பந்தத்தை ரத்து செய்தது .

இதனை கருத்தில் கொண்டு 18,000 பேரை வேலையிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளது .இதற்கு மற்றொரு முக்கிய காரணம் அந்த நிறுவனம் அடுத்த நிதியாண்டில் கூடுதல் லாபத்தை பெற வேண்டும் என்பதற்காக பார்க்கப்படுகிறது .இது குறித்து அந்த நிறுவனம் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.என்னதான் காக்னிசன்ட் பெரிய நிறுவனமாக இருந்தாலும் தனது லாபம் தான் முக்கியம் ஊழியர்கள் குடும்பம் அவர்களின் உழைப்பு முக்கியம் என்று நினைக்காத எந்த நிறுவனமும் இறுதியில் தொழிலாளர்கள் போராட்டத்தை சந்திக்க நேரிடும் .