25
Dec
சூரியனை எப்படிச் நிலவு மறைக்கும்? ஏன் 28 நாட்களுக்கு ஒருமுறை சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை? சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல் விளையாட்டுதான் கிரகணங்கள். சூரிய, சந்திர கிரகணங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.ஆனால், டிசம்பர் 26 அன்று நிகழ இருப்பது வளைய சூரிய கிரகணம். (Annular Eclipse) இதுபோல் இன்னொரு வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்க வேண்டும் என்றால் இன்னும் 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதால், இந்த கிரகணம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த அரிய நிழல் விளையாட்டைக் கண்டுகளிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. கிரகணம் என்றால் என்ன? சூரியனைப் பூமி சுற்றி வருகிறது. பூமியை நிலவு சுற்றி வருகிறது. அப்படிச் சுற்றி வரும்போது சில நேரத்தில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்போது சூரியனின் ஒளித்தட்டைச் நிலவு மறைத்துவிடுகிறது. இதனைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம்.சூரியனை…
