செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

நீரை மிச்சமாக்கும், ‘ஷவர்’!

நீரை மிச்சமாக்கும், ‘ஷவர்’!

இனி வரும் ஆண்டுகளில் உலகெங்கும் தண்ணீருக்கு தட்டுப்பாடு வரப் போகிறது. இருந்தாலும், குளியல் அறையில், 'ஷவர்' பொருத்துவது தொடர்கிறது. ஷவர்களில் தண்ணீர் கூடுதலாக வீணாகும் என்பதால், அதில், 75 சதவீத நீரை மிச்சப்படுத்தவும், முழுமையான ஷவர் குளியல் அனுபவத்தைத் தரவும், சுவீடனைச் சேர்ந்த 'ஆல்ட்டர்ட்' ஆராய்ச்சி செய்துள்ளது. இது உருவாக்கியுள்ள ஷவரின் அமைப்பில், நீர்த் திவலைகள் உடல் முழுவதையும் நனைக்கத் தேவையான அகலத்தில், குளிக்கும் அனுபவத்தைத் தரும் அழுத்தத்தில் நீரைத் தெளிக்கிறது. நீரை சூடேற்றும் வசதியும் இதனுள் இருப்பதால், குறைந்த மின் செலவில் அதிக நீர்த் திவலைகள் வந்து விழும். வரும் ஜூன் மாதம் அறிமுகமாகவிருக்கும் ஆல்ட்டர்ட் ஷவர் கருவியை, எந்த குளியலறை ஷவர் குழாயிலும் இணைக்க முடியும் என்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டை அது பெற்றுள்ளது.
Read More
“Interactive Session” with H.E. RAMON S. BAGATSING Jr., Ambassador of Philippines to India.

“Interactive Session” with H.E. RAMON S. BAGATSING Jr., Ambassador of Philippines to India.

H.E. RAMON S. BAGATSING Jr., Ambassador of Philippines to India today addressed members of the Southern India Chamber of Commerce and Industry(SICCI) and interacted with them. He answered questions about the economic scene in Philippines and invited by Indian companies to set up industries in Philippines. Mr. R. Ganapathy, President, SICCI presided over the meeting .
Read More
திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் துணை மின் நிலையம் ! அமைச்சர் தங்கமணி உறுதி !!

திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் துணை மின் நிலையம் ! அமைச்சர் தங்கமணி உறுதி !!

திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் மின்சார வாரியத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் கேள்வி நேரத்தின்போது திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் ,விவசாயிகள் நிறைந்த பூனி மாங்காடு கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் அப்பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்துப் பேசிய , அமைச்சர் தங்கமணி குறைந்த மின் அழுத்தத்தை போக்க மின் மாற்றி அமைக்கப்படும் என்றும் மின்சார வாரியத்திற்கு இடத்தை தேர்வு செய்தால் துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் வேளச்சேரி மடிப்பாக்கம் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் பாலவாக்கத்தில் துணை மின்நிலையம் இடம் தேர்வு…
Read More
குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசாட்டு ?

குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றசாட்டு ?

திருத்தப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இரட்டை நிலை எடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது. குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்புமில்லை.இந்தியாவின் வளர்ச்சி,மேம்பாட்டிற்கு தேசிய குடியுரிமைப் பதிவேடு முக்கியமானது.தேசிய கணக்கெடுப்புப் பதிவேடு என்பது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கீடு ஆகும் இதன் மூலம் மக்களுக்கு தேவையான திட்டங்களை மத்திய மாநில அரசுகள் சிறந்த முறையில் உருவாக்க உதவும் என தெரிவித்தவர் 2010ஆம் ஆண்டு பா.சிதம்பரத்தை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை இப்பொழுது அவர் எதிர்ப்பது மிக தவறானது காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களிடையே தவறான செய்திகளை பரப்பி பதட்டத்தை உருவாக்கி வருகிறார்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறினார் மேலும் தேசிய குடியுரிமை பதிவேட்டை மன்மோகன்சிங் ஆட்சியில்…
Read More
Home sales in Chennai see a 6% YoY growth in 2019: Launches rises by 11%: Knight Frank India

Home sales in Chennai see a 6% YoY growth in 2019: Launches rises by 11%: Knight Frank India

Knight Frank India launched the 12th edition of its flagship half-yearly report – India Real Estate: H2 2019- which presents a comprehensive analysis of the residential and office market performance across eight major citiesfor the July-December 2019 (H2 2019)period. The report establishes 2019 to be a year of much-awaited stability and recovery for Chennai’s residential real estate, with sales rising by 6% YoY to 16,959 units in 2019 and launches rising by 11% YoY to 11,542 units. Office transactions in Chennai were at an all-time high of 0.5 mnsq m (5.2 million square feet (mnsqft)) in 2019, registering a 50%…
Read More
சிங்கப்பூர் பயணத்துறை வாரியம்  தனது பயணவர்த்தக செயல்பாடுகளை சென்னையில் தொடங்கியுள்ளது.!

சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் தனது பயணவர்த்தக செயல்பாடுகளை சென்னையில் தொடங்கியுள்ளது.!

சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் (சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்-எஸ்.டி.பி) இந்த ஆண்டுக்கான தனது பயண வர்த்தகத்தை சென்னையில் தொடங்கியுள்ளது. “வளர்ந்து வரும் இணைப்புகள், ஒன்றிணைந்து இலக்கை அடைதல்” (Growing Connections, Achieving Together) என்ற கருப்பொருளின் அடிப்படையில், வர்த்தக செயல்பாட்டு விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்ச்சி (ரோட்ஷோ – road show) சென்னையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் (எஸ்.டி.பி.)மற்றும் அதன் சுற்றுலா கூட்டு பங்குதாரர்களின் தற்போதைய கூட்டு செயல்பாடுகளை ஆழமாக்குவதையும், உள்ளூரில் செயல்படும் பயண வர்த்தக நிறுவனங்களுடன் மேலும் நல்லிணக்கத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. சிங்கப்பூரை இந்திய பயணிகள் மிகவும் விரும்பித் தேர்வு செய்யும் சுற்றுலாத் தலமாக்குவதற்கான எஸ்.டி.பி.யின் முயற்சிகள் குறித்து பேசிய ஜி.பி.ஸ்ரீதர், சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் சிங்கப்பூர் சுற்றுலாச் சந்தையில் மூன்றாவது மிக முக்கிய நாடாக இந்தியா உள்ளது, மேலும் பயண வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள், ஊடக கூட்டாண்மை மற்றும் பல்வேறு சந்தைப்படுத்தல் முயற்சிகள்…
Read More
சென்னையின் நிலத்தடி நீர் குறையத் தொடங்கியது.! 2020-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?

சென்னையின் நிலத்தடி நீர் குறையத் தொடங்கியது.! 2020-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?

வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில் சென்னையின் பல இடங்களில் கடந்த நவம்பர் மாதத்தை விட டிசம்பர் மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது மெட்ரோ குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் சென்னை சந்தித்த தண்ணீர் பஞ்சத்திற்கு பிறகு, மழைநீர் சேமிப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுத்தது அரசு. இதன் விளைவாக கடந்த சில மாதங்களாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது, ஒருபுறம் மகிழ்ச்சி அளித்த நிலையில், தற்போது சென்னையின் பல முக்கிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெட்ரோ குடிநீர் வாரியம் இம்மாதம் நடத்திய ஆய்வில், திருவெற்றியூர், மாதவரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், சோழிங்கநல்லூர், அடையாறு, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் 1 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.வடகிழக்கு பருவமழை…
Read More
சோலார் மின்உற்பத்தி ! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு !!

சோலார் மின்உற்பத்தி ! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு !!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், பணிமனைகள், அலுவலக இடங்கள் என வாய்ப்புள்ள இடங்களில் சோலார் தகடுகள் அமைத்து மின்உற்பத்தி செய்தல் உள்ளிட்ட புதிய திட்டங்களையும் படிப்படியாக மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை மொத்தம் 5.2 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இதற்கிடையே, அசோக்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கூரையில் 260 கிலோவாட், மண்ணடி மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் 20 கிலோவாட் திறனுக்கு சோலார் கருவிகள் நிறுவி மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை மொத்தம் 5.5 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்உற்பத்தி திறன் செய்துள்ளது. இதற்கிடையே, அடுத்த ஆண்டில் 8 மெகாவாட் அளவுக்கு சோலார் மின்உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.2.54 கோடி சேமிக்க முடியும் என திட்டமிட்டுள்ளோம். மேலும், கரியமில வாயுவின் வெளியீடு அளவு ஆண்டுக்கு 11,587 டன் ஆக குறையும் என…
Read More
பிளாஸ்டிக் குப்பையிலிருந்து எரிபொருள்!

பிளாஸ்டிக் குப்பையிலிருந்து எரிபொருள்!

சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வீணாகும் பிளாஸ்டிக் கழிவிலிருந்து, எரிபொருளை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.நுகர்வோர் பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் குப்பையிலிருந்து, ஒரு வேதியியல் கரைசலை உருவாக்கி, அந்தக் கரைசலை, சூரிய ஒளியை படச் செய்வதன் மூலம், ஹைட்ரஜன் எரிபொருள் செல்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களை பிரித்தெடுத்து உள்ளனர், விஞ்ஞானிகள். பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் விலையின்றி கிடைப்பவை. இவற்றை மின்சாரம் தயாரிக்க உதவும் ஹைட்ரஜன் செல்லுக்குத் தேவையான வேதிப் பொருளை உருவாக்குவது, மிகவும் அருமையான யோசனை. இருந்தாலும், அதை தயாரிக்கும் வேதிவினைக்கு, சூரிய ஒளியையே பயன்படுத்த முடியும் என்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இரட்டை போனஸ் கிடைத்தது போல என்கிறது, 'சயின்ஸ் அட்வான்சஸ்' என்ற ஆராய்ச்சி இதழ்.
Read More