செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

மீண்டும் ஒரு இலவசத்தை அறிவித்த ஏர்டெல்.!

மீண்டும் ஒரு இலவசத்தை அறிவித்த ஏர்டெல்.!

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி ஏர்டெல் நிறுவனம் இப்போது தனது டிஜிட்டல் டிவி பயனர்கள் முதல் முறையாக கியூரியாசிட்டி ஸ்ட்ரீமில் இருந்து பிரீமியம் கன்டென்டை பெறுவதாக அறிவித்துள்ளது. கியூரியாசிட்டிஸ்ட்ரீம் அதாவது கியூரியாசிட்டிஸ்ட்ரீம் என்பது ஆவணப்படங்கள் மற்றும் தொடர்கள் நிறைந்த ஒரு தளமாகும். இந்த அறிவிப்பு கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த அறிவிபபு கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய ஏர்டெல் மற்றும் கியூரியாசிட்டிஸ்ட்ரீம் இடையேயான கூட்டாண்மையை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது என்றுதான் கூறவேண்டும். வெளிவந்த தகவலின் அடிப்படையில் கியூரியாசிட்டிஸ்ட்ரீம் டிவி சேனல் ஏர்டெல்லுக்கு பிரத்யேகமாக இருக்கும், குறிப்பாக ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாதாரர்களுக்கு எந்தவிதமான கூடுதல செலவும் இல்லாமல் இலவசமாக கிடைடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கியூரியாசிட்டிஸ்ட்ரீம் பொறுத்தவரை பார்வையாளர்கள் தங்கள் ஆர்வங்களை ஆராய்ந்து, ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொடர், கலை,…
Read More
அமெரிக்காவில் ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்படும் கல்லறைகள் ?

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்படும் கல்லறைகள் ?

வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் அதிகமாகி கொண்டே இருப்பதால், இறுதிச்சடங்கு நடத்தும் கூடங்கள் பிணங்களால் நிரம்பி வழிகின்றன. சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே இருப்பதால் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பலதும் திணறி கொண்டு வருகின்றன. இதில் தற்போதும் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நாடுகளான, இத்தாலி, ஸ்பெயின் நாட்டிற்கு அடுத்து அமெரிக்கா தான் விபரீதத்துக்குள்ளாகியுள்ளது . அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 2 லட்சத்து 45 ஆயிரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 6098 பேர் உயிரிழந்தும் 10,441 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நியூயார்க்கில் மட்டும் 1500 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்குள்ள கல்லறைகள், தகனக்கூடங்கள் ஆகியவை ஒரு வாரம் அல்லது சில நேரங்களில் 2 வாரங்களுக்கு முன்பே கூட முன்பதிவு செய்யப்படுவதாக, ப்ரூக்கிளின் கல்லறை உரிமையாளரான பேட் மோர்மா கூறியுள்ளார் . அதிலும் தற்போது…
Read More
விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் லொள்ளு சபா !

விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் லொள்ளு சபா !

2004ல் விஜய் தொலைகாட்சி ஆரம்பித்த நிகழ்ச்சி தான் லொள்ளு சபா. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு படத்தின் கதையை மையமாக எடுத்து கொண்டு அதில் லொள்ளு சபா செய்யும் காமெடிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் அடிமை . சினிமாவை தொடர்ந்து பார்த்து அலுத்து போன ரசிகர்களுக்கு புதுவித ட்ரீட்மெண்ட் தான் இந்த லொள்ளு சபா. லொள்ளு சபாவை பொருத்த வரையில் வெற்றி படங்களை தான் கலாய்ப்பார்கள் தோல்வி படங்களை கலாய்க்க மாட்டார்கள் என்றெல்லாம் கிடையாது. இவர்கள் எந்த படத்தை எடுத்து கிண்டல் செய்தாலும் ரசிகர்கள் அந்த படத்தை நினைவு கூறி லொள்ளு சபாவின் கிண்டல்களை ரசிப்பதே வழக்கம். கிட்டதட்ட மூன்று வருடங்கள் லொள்ளு சபா ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் என்று சொல்ல கூடிய பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களின் ஓட்டத்தை துவங்கினார்கள். இதில் சந்தானம் ,யோகிபாபு, சுவாமிநாதன், ஜீவா, மனோகர்,…
Read More
கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கு­வது சிறந்­ததா?

கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கு­வது சிறந்­ததா?

சொந்த வீடு வாங்க விரும்­பு­கி­ற­வர்­கள், வீட்­டின் அமை­வி­டம், வீட்­டுக்­க­டன் வசதி உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களை பரி­சீ­லிக்க வேண்­டும். இவற்­றோடு, புதி­தாக கட்­டப்­பட்டு வரும் குடி­யி­ருப்பு திட்­டங்­களை நாடு­வதா அல்­லது உட­ன­டி­யாக பயன்­ப­டுத்­தக்­கூ­டிய, கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை நாடு­வதா எனும் கேள்­வி­யும் முக்­கி­ய­மாக எழ­லாம். தற்­போ­தைய சூழ­லில், கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை நாடு­வ­தில் உள்ள சாத­க­மான அம்­சங்­கள்: கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­களை வாங்­கும் போது, குடி­யி­ருப்பு திட்­டம் தாம­த­மா­கும் அபா­யம் இருப்­ப­தில்லை.திட்­டம் முடி­ய­வும், குடி­யி­ருப்பு வச­தி­கள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வும் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­காது. பல்­வேறு கார­ணங்­க­ளால், ரியல் எஸ்­டேட் திட்­டங்­கள் தாம­த­மாக வாய்ப்­புள்ள சூழ­லில் இதுமுக்­கிய சாத­கம். கட்டி முடிக்­கப்­பட்ட வீடு எனில்,பய­னா­ளிக்கு எல்லா அம்­சங்­களும் தெளி­வாக இருக்­கும். வீடு, அறை­க­ளின் அளவு, பார்­க்கிங், வச­தி­கள் உள்­ளிட்ட அனைத்துஅம்­சங்­க­ளை­யும் முன்­கூட்­டியே அறிந்து கொள்­­லாம்.இது, வாங்­கும் முடிவை எளி­தாக்­கும் என்­ப­தால்எந்த குழப்­ப­மும் இருக்­காது.வீட்­டுக்­க­டன் வசதி பெறும் போது, கட­னுக்­கான மாதத்­ த­வ­ணையை செலுத்த வேண்­டும். கட்­டப்­பட்டு…
Read More
தமிழக  சிறைகளில் 30,000 முகக் கவசங்களை தயாரிக்கும் பணி !

தமிழக சிறைகளில் 30,000 முகக் கவசங்களை தயாரிக்கும் பணி !

தமிழகத்தில் உள்ள சிறைகளில் ஒரே நாளில் 30,000 முகக் கவசங்களை தயாரிக்கும் பணியில் சிறைக் கைதிகள் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக அனைவரும் தற்போது பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் முகக்கவசங்களின் தேவையும், தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தையல் பயிற்சி பெற்ற தமிழக சிறையில் உள்ள சுமார் 200 தண்டனை கைதிகள் மூலம் முகக்கவசங்களை தயாரிக்கும் பணியில் சிறைத்துறையினர் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.ஒரே நாளில் 30,000 முகக்கவசங்களை சிறைக் கைதிகள் மூலம் தயாரிக்கத் தொடங்கி உள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் முகக் கவசங்களைத் தயாரித்து, தமிழக சிறையில் உள்ள காவலர்கள் , தமிழக காவல்துறையில் உள்ள காவலர்கள், சிறை கைதிகள் அனைவரும் சிறையில் தயாரிக்கும் முகக் கவசங்களை பயன்படுத்துகின்றனர்.
Read More
ஊழல் குறித்து புகார் செய்யும் விதம் !

ஊழல் குறித்து புகார் செய்யும் விதம் !

ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் அலுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெள்ளைய ஆங்கில அரசின் இந்திய தண்டனைச் சட்டத்தில் போதிய வழி இல்லாதபடியால், விடுதலை அடைந்த இந்திய அரசு 1947ல் ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றியது. பின் இதே சட்டத்தை பல்வேறு திருத்தங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்டம் 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, கையூட்டு மற்றும் ஊழல் புரிந்த மாநில, மத்திய அமைச்சர்கள், சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள மக்கள்மன்ற பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், அரசிடம் ஊதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள், அரசிடம் நிதிஉதவி பெறும் அரசு சாரா நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலுக்காக இந்திய பொது ஊழியர்கள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களின் படி அபராதம் விதிக்கப்படும்: இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், 1860 வருமான…
Read More
கொரனாவில் அரசியல் வேண்டாம் ?  எதிர்கட்சிகளுக்கு பத்திரிக்கையாளர் வாராகி அறிக்கை ?

கொரனாவில் அரசியல் வேண்டாம் ? எதிர்கட்சிகளுக்கு பத்திரிக்கையாளர் வாராகி அறிக்கை ?

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்து வருகிறது . 8.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பாதிப்பும், உயிர்பலியும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் இந்நிலையில் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியில் தப்லிக் ஜமாத் சார்பில் மத வழிபாடு மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மதகுருக்கள்…
Read More
கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.80 லட்சம் வழங்கிய ரோகித் சர்மா !

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.80 லட்சம் வழங்கிய ரோகித் சர்மா !

கொரோனா வைரஸ் வேகமாக பரவி கடும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கலாம் எனவும், அதை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதேபோல் மாநில அரசுகள், அந்தந்த மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோகித் சர்மா, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு 45 லட்சம் ரூபாயும், மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், Feeding India மற்றும் Welfare Of Stray Dogs ஆகிய அமைப்புகளுக்கு தலா ரூ.5 லட்சமும் வழங்கியிருப்பதாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
Read More
கொரோனா விவகாரத்தில் சீனா – அமெரிக்கா இடையே முற்றுகிறது மோதல் ?

கொரோனா விவகாரத்தில் சீனா – அமெரிக்கா இடையே முற்றுகிறது மோதல் ?

கொரோனா வைரஸ் தொற்று, சீனா - அமெரிக்கா இடையேயான மோதலை, முற்றச் செய்துள்ளது. 'கடந்த ஆண்டு அக்.,ல் வூஹானில் நடந்த சர்வதேச ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த, அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், சீனாவில் கொரோனா வைரசை பரப்பினர்' என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தெரிவித்தார். சீனாவின் இந்தக் குற்றச்சாடால் உலக அளவில் பெரும் சர்ச்சை வெடித்தது. சீனாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனா வைரசை, 'சீன வைரஸ்' எனக் குறிப்பிட்டார். அதன்பின், அமெரிக்காவில் பணியாற்றி வந்த, சீனப் பத்திரிகையாளர்கள், 60 பேரை அங்கிருந்து வெளியேற்றியது ட்ரம்ப் அரசு. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்கப் பத்திரிகைகளான, 'நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட்' ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த, சீனாவில் பணியாற்றும், 13 செய்தியாளர்கள், சீனாவிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்க…
Read More
மோடிக்கு உலக நாடுகள் பாராட்டு

மோடிக்கு உலக நாடுகள் பாராட்டு

'கொரோனா' தொற்றால், உலகமே கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்த நோயை கட்டுப்படுத்துவதில், இந்தியா திறமையாக செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் ஹீரோவாகியிருக்கும் பிரதமர் மோடியை, உலக நாடுகள் பாராட்டுகின்றன. இந்நிலையில், 'சார்க்' எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகளை ஒருங்கிணைத்து, கொரோனாவுக்கு எதிராக போராடும் முயற்சியில், இந்தியா ஈடுபட்டுள்ளது. சீனாவில் பிறந்த கொரோனா வைரஸ், இப்போது, உலகின் அனைத்து நாடுகளிலும், தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தினமும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும், இந்த நோய் பரவியுள்ளது. இதுவரை, 730க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, இந்தியாவில், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கொரோனாவால், ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானதில் இருந்தே, அதன் பரவலை தடுக்க, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கொரோனாவின், பிறப்பிடமான சீனாவின் வூஹான் நகரிலிருந்து, இந்தியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தியர்களை மீட்பதற்காக…
Read More