செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

ஊரடங்கு உத்தரவுக்கும் 144 தடை உத்தரவுக்கும் என்ன வேறுபாடு?

ஊரடங்கு உத்தரவுக்கும் 144 தடை உத்தரவுக்கும் என்ன வேறுபாடு?

சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டும் காலங்களில் தேவைக்கு ஏற்ப ஊரடங்கு உத்தரவை இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி அரசு காவல்துறை மூலம் அமல்படுத்தும். 144 தடை உத்தரவின் நீடித்த நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை குறிப்பிடலாம். இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்றாலும், சூழ்நிலை, நேரம், காலத்துக்கு தக்கவாறு நடவடிக்கையின் தன்மை அமையும். ஊரடங்கு உத்தரவு என்றால் என்ன? இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144-இன் விரிவாக்கம் அல்லது விரிவான நடவடிக்கையே ஊரடங்கு உத்தரவாகும்.அசாதாரணமான சூழ்நிலைகளில் பதற்றத்தை தணிக்க முடியாத நிலை எழும்போது, மாநில அரசு அல்லது மத்திய அரசு ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதி அல்லது மாவட்டம் அல்லது மாநிலங்கள் அல்லது நாடு முழுவதும் என்ற அளவில் மக்களின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.இனம் அல்லது சமுதாயம், ஜாதி கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, நோய் பரவல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான தேவையின்போது…
Read More
தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டி வசூலிக்க அரசு தடை ?

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டி வசூலிக்க அரசு தடை ?

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டி வசூலை நிறுத்த தமிழக அரசு தடைவிதித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் உத்தரவும் இதர உத்தரவும் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் ஏற்படக் கூடிய இடையூறுகளை தவிர்க்கவும், மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தலைமையில் இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். குற்றவியல் நடவடிக்கைகள் பல கிராமங்களிலும் நகரங்களிலும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரி, வாராந்திர, மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில் இது போன்ற பண வசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.…
Read More
பிணையம் இல்லாமல்  சிறுதொழில் தொடங்க கடன் !

பிணையம் இல்லாமல் சிறுதொழில் தொடங்க கடன் !

தொழில் தொடங்க தேவையான நிதி திரட்டுவதில் உள்ள சிரமம்தான் சிறு தொழில் முனைவோருக்கான முதல் சவால். அதில் ஜெயிப்பவர்கள் அடுத்து சந்திக்கும் சவால், தொழில் நடத்த தேவையான நடைமுறை மூலதனம் (Working capital).ஏற்கனவே பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. தற்போது ெகாரோனா வைரஸ் பாதிப்பு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் உறுதிபடக் கூற முடியாது. இந்த சூழ்நிலையில் சிறு தொழில் முனைவோர்கள் தங்களது நடைமுறை மூலதனத்தை சரியாக கையாள்வதில் கவனம் அதிகம் வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க திட்டம் 'முத்ரா' கடன் திட்டம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக, சிறுதொழிலை மேம்படுத்த, விரிவுபடுத்தி கொள்ள மத்திய அரசால் உருவாக்கப்பட்டதுதான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இந்த திட்டம் குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம்…
Read More
உலகில் அதிக சொத்து உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடம் !

உலகில் அதிக சொத்து உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடம் !

உலகில், அதிக சொத்து உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஏழாவது இடத்தில் உள்ளதாக, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறுவனமான, 'கிரெடிட் சுவிஸ்' ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பணக்கார நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், அந்நாட்டின் தனி நபர் வருவாய், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் உள்ளிட்ட ஒரு சில நாடுகளை விட குறைவாக உள்ளது. அரசு, தனி நபர், குடும்பம், தொழில்கள் ஆகியவற்றின் சொத்து மதிப்பில், கடன் போக, எஞ்சிஉள்ளது, ஒரு நாட்டின் மொத்த சொத்து மதிப்பாக கணக்கிடப்படுகிறது. இந்த வகையில், 2019ல், உலகின் மொத்த சொத்து மதிப்பு, 25 ஆயிரத்து, 560 லட்சம் கோடி ரூபாய்; இது, 2018ல் இருந்ததை விட, 639 லட்சம் கோடி ரூபாய் அதிகம்.வரும், 2024ல், உலகின் சொத்து மதிப்பு 32 ஆயிரத்து, 589 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. உலகில், கோடிக்கணக்கான மக்கள், வறுமையால் இறக்கின்றனர். இருந்தபோதிலும்,…
Read More
மாணவர்களுக்கு காலை உணவு தரும் அக்ஷயா பாத்ரா திட்டம் ! ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார் !!

மாணவர்களுக்கு காலை உணவு தரும் அக்ஷயா பாத்ரா திட்டம் ! ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார் !!

மாணவர்களுக்கு காலை உணவு தரும் அக்ஷயா பாத்ரா திட்டம் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் ஆன்மிகக் கருத்துகளை காட்டி பாராட்டி பேசினார். இதோ அவரது பேச்சில் இருந்து சில தகவல்கள். சாதி மத வேறுபாடு இன்றி, மனித இன மேம்பாடு ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு, ஏழை எளிய மக்கள் பசியாற, அன்னம் அளிக்கும் அருஞ் சேவை ஆற்றிவரும், அட்சய பாத்ரா அறக் கட்டளையின் சார்பில், சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவச் செல்வங்களுக்கு, காலை உணவை வழங்கிடும் உன்னத நோக்கத்தை நிறை வேற்றிட, சிறந்த நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் பங்கேற்கின்ற நல்வாய்ப்பை எனக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தானத்தில், அன்னதானம், வித்யா தானம், தண்ணீர் தானம், பொருள் தானம், பண தானம், கண் தானம், ரத்த தானம், உடலுறுப்பு தானம்…
Read More
“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு  – ஹைலைட்ஸ்!

“ஓ மை கடவுளே” பத்திரிகையாளர் சந்திப்பு – ஹைலைட்ஸ்!

வரும் பிப்ரவரி 14ல் திரைக்கு வர இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். அசோக் செல்வன்–ரித்திகா சிங் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்து உள்ளனர். ஜி.டில்லிபாபு தயாரிக்க அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி டில்லி பாபு “காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்துக் கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. ‘ஓ மை கடவுளே’ படம் இன்றைய நாகரிக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இதில் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ் கர், வாணி போஜன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது.. சிம்பிளாக சொல்வதானால் எல்லோருடமும் இளமை மாறாத ஒரே…
Read More
தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் !

தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் !

தமிழர் பண்பாட்டு அசைவுகளைத் தனது கதைகளோடு தாங்கி, தமிழரின் திணையொழுக்கமாகிய குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய கூறுகளில் வாழ்ந்த தமிழர் நிலம் முழுமையும் விரவியிருக்கும் இறைவனாக முப்பாட்டன் முருகன் திகழ்கிறார். ஐவகை நிலங்களில் தலைநிலமான குறிஞ்சி நிலத்தின் மலைகளில் இருந்துதான் உலகின் முதல் உயிரினம் தோன்றியது என்பதும், அந்த முதல் உயிரியின் பரிணாம வளர்ச்சியில் தோன்றிய மனித இனத்தில் முதல் இனம் தமிழினம் என்பதும் உயிர்களின் பரிணம அறிவியலில் இருந்து அறிகிறோம். இத்தகையச் சிறப்புடைய நிலமாகி குறிஞ்சி நில முதல்வனாக முருகக்கடவுள் தமிழர்களால் வழிபடப்படுகிறார். பத்தாம் நூற்றாண்டு வாக்கில் படையெடுத்த ஆரியர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஏற்கனவே இங்குள்ள முருகனை ஆரியமயப்படுத்தினாலும் முருகவழிபாட்டை தமிழ்நாட்டை விட்டு நகர்த்தவில்லை. இருப்பினும், எங்கெல்லாம் தமிழர்கள் குவிந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களால் முருகன் கோயில் நிறுவப்பட்டு வழிபடப்பட்டு வருகிறார். சிங்கப்பூர், மலேசியா, ஈழம், கனடா, லண்டன், சுவிஸ், பிரான்ஸ், மொருசியசு என எல்லா…
Read More
மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் நடிகர் ராதாரவி!

மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் நடிகர் ராதாரவி!

சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது ராதாரவி - சின்மயி மோதலுக்கு வழி வகுத்தது.இதனால் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் சின்மயி. இதையடுத்து டப்பிங் சங்கத்தின் தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி போட்டியிட அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சின்மயி போட்டியிடுவதாக அறிவித்து சமீபத்தில் சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் பாடகி சின்மயி தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. சங்கத்தின் விதிமுறைக்குட்பட்டு வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் ராதாரவி டப்பிங் யூனியன் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More
நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி !

நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ – கவிதைத் தொகுதி !

தர்பார், சர்க்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி சன் சீட்ஸ்(சூரிய விதைகள்) என்ற பெயரில் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவும் அவரது மனைவி பொன்மணி வைரமுத்து மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து என்ற கவிதைக் குடும்பத்தில் இப்போது அவரது மருமகள் மற்றும் மதன் கார்க்கியின் மனைவி நந்தினி கார்க்கி ஒரு ஆங்கிலக் கவிஞராய் உதயமாகியுள்ளார். இருட்டில் இருந்து விடியலுக்கு என்ற இரு வழிப் பயணத்தை மேற்கொள்கிறது இந்த நூல். இயற்கையின் அழகை, மாற்றங்களை ஒரு வழியில் கண்டு களித்து மனதின் மேடு பள்ளங்களில் இன்னொரு வழியில் பயணம் செய்கின்றன நந்தினி கார்க்கியின் கவிதைகள்.அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணி புரிந்து, ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்த தன் அனுபவங்களின் சாறு இந்த நூல் என்று நூற்குறிப்பில் நந்தினி கார்க்கி எழுதியுள்ளார். இவர் கடந்த…
Read More
சென்னை எல்.ஐ.சி யின் பங்குகளில் ஒரு பகுதி விற்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு !

சென்னை எல்.ஐ.சி யின் பங்குகளில் ஒரு பகுதி விற்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு !

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி யின் பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பொது துறை நிறுவனங்களில் 'பொன் முட்டையிடும் வாத்தாக' திகழ்கிறது எல்.ஐ.சி நிறுவனம். இக்கட்டான தருணங்களில் அரசின் நிதி தேவைகளை பூர்த்தி செய்து, மிக சிறந்த நிறுவனமாகவும் எல்.ஐ.சி திகழ்ந்து வருகிறது. பி.எஸ்.என்.எல், ஏர் இந்தியா போன்ற அரசின் நிர்வாகத்தில் உள்ள பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தத்தளித்து கொண்டிருக்க, இதற்கு விதிவிலக்காக தனியார்த்துறை போட்டியை முறியடித்து தலைநிமிர்ந்து நிற்கிறது எல்.ஐ.சி.நிறுவனம். இந்நிலையில் எல்.ஐ.சி யின் பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு, அதன் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை, நிறுவன பணியாளர்கள் மற்றும் பாலிசிதாரர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழலில் கோடிக்கணக்கான பாலிசிதாரர்களின் நம்பிக்கையை அரசு காப்பாற்ற வேண்டுமெனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசு தீட்டும் பல்வேறு திட்டங்களுக்கு எல்.ஐ.சி நிறுவனம்…
Read More