செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

வங்கிகளில் ரூ.2,000 கோடி கடன் வாங்க மின்வாரியம் முடிவு ?

வங்கிகளில் ரூ.2,000 கோடி கடன் வாங்க மின்வாரியம் முடிவு ?

மின் கட்டணம் வசூலிக்காததால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, மின் வாரியம், மத்திய அரசின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து, 2,000 கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம் வாயிலாக, மாதம் 3,000 கோடி ரூபாய்க்கு வருவாய் கிடைக்கிறது. மின் கொள்முதல், ஊழியர்கள் சம்பளம், மின் நிலையங்களுக்கான எரிபொருள், பழுது மற்றும் பராமரிப்பு பணி போன்றவற்றுக்காக செலவு செய்யப்படுகிறது. வரவை விட, செலவு அதிகமாக இருப்பதால், மத்திய அரசின், 'ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' ஆகிய நிதி நிறுவனங்களிடம் இருந்தும், பொது மற்றும் தனியார் துறை வங்கிகளிடம் இருந்தும், மின் வாரியம் கடன் வாங்குகிறது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மார்ச், 24 நள்ளிரவு முதல், ஏப். 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல், வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து, மார்ச், 25…
Read More
இந்தியாவில் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்? ஐ.நா எச்சரிக்கை ?

இந்தியாவில் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள் வறுமையில் மூழ்கும் அபாயம்? ஐ.நா எச்சரிக்கை ?

உலகை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் கரோனா வைரஸால் இந்தியாவில் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளது. அமைப்பு சாரா தொழிலில் உள்ள 40 கோடி தொழிலாளர்கள் மேலும் மோசமான வறுமையில் வீழ்வார்கள் என்று ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) கவலை தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடப்பு ஆண்டின் 2-வது காலாண்டில் 19.50 கோடி பேரின் முழுநேர வேலையை கரோனா வைரஸ் பறிக்கும் என எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.’சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2-வது கட்டக் கண்காணிப்பு: கரோனாவும் உலக வேலைவாய்ப்பும்’ என்ற தலைப்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் கெய் ரைடர்: இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குநர் கெய் ரைடர் நிருபர்களிடம் கூறியதாவது: 'கரோனா வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தி வரும் மனிதப் பேரிழப்பும், பொருளதாரச் சீரழிவும் 2-ம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகள் எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சினையாகும்.வளர்ந்த நாடுகள், வளர்ந்து…
Read More
விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், ‘கொரோனா’ முகாம்களாக மாற்றம்?

விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், ‘கொரோனா’ முகாம்களாக மாற்றம்?

விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளை கொரோனா தனிமை முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார துறை துவங்கி உள்ளது. தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 92 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். சுகாதாரத் துறைஇவர்களில், தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களை, தனிமை முகாம்களில் வைக்க வேண்டியது அவசியம். அடுத்து வரும் வாரங்களில், தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகள் தேவை அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை, அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, கட்டி முடிக்கப்பட்ட, அரசு கட்டிடங்களை, சுகாதார துறை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு, விற்கப்படாமல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை, தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகளாக மாற்றுவது குறித்து, அரசு ஆராய்ந்து வருகிறது. இதற்காக, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' உடன், சுகாதார துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர். இதில், 100 சதவீத வீடுகளும் விற்காமல்…
Read More
கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் ? அபிக்யா ஆனந்த் கணிப்பு.!

கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் ? அபிக்யா ஆனந்த் கணிப்பு.!

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான்.இந்தியாவை சேர்ந்த, 14 வயது சிறுவன், அபிக்யா ஆனந்த். சிறு வயதிலேயே ஜோதிடத்தில், வானவியல் சாஸ்திரத்தில், நிபுணத்துவம் பெற்றான். தன் ஜோதிட அறிவுக்காக, பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளான். கடந்த, 2019 ஆகஸ்ட் மாதம், ஒரு வீடியோவை வெளியிட்டான். அதில், 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை, உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை, கணித்து கூறினான்.'மிகவும் அரிதாக, செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை, சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில், ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இம்மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இவை இணைவதால், அதிகமான கதிர்வீச்சு, பூமியை தாக்கும். அதே நேரம் சந்திரனும், ராகுவும் இணைவதும், சக்தி வாய்ந்ததாகும். ராகு, உலகில் நோய்களை பரப்பும்' என, ஆனந்த்…
Read More
இத்தாலியிடம் ஈவு இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட சீனா.? வெளியான ரகசியம்!

இத்தாலியிடம் ஈவு இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட சீனா.? வெளியான ரகசியம்!

கொரோனா வைரஸால் சீனா முதன்முதலில் பாதிக்கப்பட்டது. அப்போது சீனா மீது உலக நாடுகள் இரக்கப்பட்டன. உதவி செய்வது போல நாடகம்... பல நாடுகள் சீனாவுக்கு உதவி செய்தன. இத்தாலி மருத்துவ பாதுகாப்பு கவசங்களை டன் கணக்கில் இலவசமாக கொடுத்து உதவியது. இத்தாலியிடம் இலவசமாக பெற்ற அதே பாதுகாப்பு கவசங்களை இப்போது பணம் பெற்றுக் கொண்டு அதே இத்தாலிக்கு அனுப்பி உள்ளது சீனா. ஆனால், வெளி உலகுக்கு தாங்கள் இலவசமாக அளித்து உதவி செய்வது போல நாடகம் போட்டுள்ளது. இந்த ரகசியம் இப்போது அம்பலம் ஆகி உள்ளது. சீனாவில் பரவிய வைரஸ் 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது. ஆனால், அந்த தகவலை நீண்ட நாட்கள் மூடி மறைத்தது சீனா, அதற்குள் அந்த வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் வெகுவாக பரவியது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவத் துவங்கியது. உலக நாடுகள் இரக்கம் இந்த தகவல் வெளியான சில நாட்களில் சீனாவில்…
Read More
பி.எஃப்-இல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும்!

பி.எஃப்-இல் பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும்!

பி.எப் உறுப்பினர்களின் பிறந்த தேதி ஆவணங்களில் தவறாக இருந்தால்,அதை சரிசெய்ய, ஆதார் அட்டை போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகளை கள அலுவலகங்களுக்கு பிஎப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பிஎப் ஆவணத்தில் பிறந்த தேதியை மாற்றம் செய்வதற்கு செல்லத் தகுந்த ஆவணமாக ஆதார் ஏற்றுக் கொள்ளப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆதார் மற்றும் பிஎப் ஆவணங்களில்உள்ள பிறந்த தேதிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம் 3 ஆண்டுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்றும், திருத்தம் செய்ய பிஎப் சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி விண்ணப்பிக்கப்பட்டால் உடனே பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என கள அலுவலகங்களுக்கு பிஎப் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், பிஎப் நிதியில் இருந்து 75 சதவீத தொகையை சந்தாதாரர்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், பிஎப் சந்தாதாரர்கள் விண்ணப்பிக்க வசதியாக இணையத்தில் புதிய வழிகாட்டி குறிப்பு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More
மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் ?

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் ?

மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களை, ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என, இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து, இந்த சங்கத்தின் தலைவர், பங்கஜ் மொகிந்ரூ கூறியதாவது:நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர்’ ஆகியவற்றை, ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்யவும், பழுது நீக்கி தரவும் அரசு அனுமதிக்க வேண்டும். வீட்டிலிருந்து பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது உள்ளிட்டவற்றுக்கு, இவற்றின் தேவை மிகவும் அத்தியாவசியமாகும். நாடு முடக்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சில்லரை விற்பனை ஸ்டோர்களை திறக்க விரும்பவில்லை.ஆனால், ஆன்லைன் மூலமாக, போன்களை விற்பனை செய்ய அனுமதிக்க கோருகிறோம். தொற்று நோய்க்கு ஆளானவர்களை, மொபைல் போன் மூலமாக அரசு கண்காணித்து வருகிறது. இந்நிலையில், அவர்கள் போனில் பழுது ஏற்பட்டால், புதிய போனை வாங்கவோ அல்லது பழுதை நீக்கவோ தேவையான வாய்ப்புகளை வழங்க வேண்டும். எனவே, ஆன்லைன் மூலம், மொபைல் போன்…
Read More
“உலக மரணத்திற்கு நானே காரணம் “? கொரோனா கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம் ?

“உலக மரணத்திற்கு நானே காரணம் “? கொரோனா கண்டுபிடித்த சீன டாக்டர் மாயம் ?

வூஹான்: இது கொரோனா தான் என கண்டுபிடித்த சீன டாக்டர் ஏய் பென் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை.சீனாவில் தான் கொரோனா பரவியது என கூறப்படுவது தற்போது முழு அளவில் நிரூபணமாகி இருக்கிறது.சீனாவின் வூஹான் மருத்துவமனையில் ஒரு நோயாளி இருமல் காய்ச்சலுடன் டிசம்பர் மாதம் 30 ம் தேதி வருகிறார். இவருக்கு இந்த மருத்துவமனையின் தலைமை பெண் மருத்துவர் ஏய் பென் இந்த நோயாளிக்கு ரத்த பரிசோதனை முடிவை பார்க்கிறார். முதலில் சார்ஸ் , புளூ காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இந்த டாக்டர் தனது மருத்துவ குழுவினருக்கு இந்த ரத்த பரிசோதனையை அனுப்பி வைக்கிறார். இது ஒரு புதிய வைரஸ் எனவே மேல் தரப்பு உத்தரவு இல்லாமல் வெளியே கூற முடியாது என சக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனை ஏய்பென் வெளியே தெரிவிக்க விரும்பி உள்ளார். ஆனால் மருத்துவ…
Read More
30 – 45 வயதுடையோருக்கு சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எது..!

30 – 45 வயதுடையோருக்கு சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எது..!

இன்றைய காலகட்டத்தில் இன்சூரன்ஸ் என்பது மிக அவசியமாகி விட்டது. ஏனெனில் எந்த சமயத்தில் என்ன நடக்குமோ? என்ற நிலையில் அனைவரும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது மிக நல்ல விஷயமே. அதிலும் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது அவசர காலங்களில், பாலிசிதாரர்களுக்கு ஏற்படும் பல விதமான மருத்துவ செலவுகளுக்கும் பணத்தை, திரும்ப செலுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது. குறிப்பாக எதிர்பாராத, அதிக மருத்துவச் செலவுகளிலிருந்து உங்களை பாதுகாப்பதன் மூலம் உங்களுடைய உடல்நலம், நோய் மற்றும் விபத்து செலவுகளுக்கும் இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் உதவுகிறது. க்ளைம் எப்படி? நீங்கள் ஒரு மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசியினை எடுக்கும் போது, பிரீமியத்தின் வருடாந்திர பண செலுத்தலின் போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள உறுதி செய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப, உங்களது மருத்துவ செலவில் ஏற்படக் கூடிய உங்கள் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள், மற்றும் பாதிப்புக்கு ஏற்ப உங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தால் க்ளைம் செய்யப்படும். வரி விலக்கும் உண்டு நீங்கள்…
Read More
இரு சக்கர வாகன காப்பீடு ! அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!

இரு சக்கர வாகன காப்பீடு ! அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!

இரு சக்கர வாகனங்களில் பாலிசி எடுப்பவர்களில் பலரும் அதனை தொடர்ந்து புதுப்பிப்பதே கிடையாதாம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் 75% பேர் இருசக்கர வாகனத்திற்கு பாலிசி இல்லாமல் தான் உள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இதில் குறிப்பாக நகர்ப்புறங்களை விட மக்கள், கிராமப்புறங்களில் இதனை பற்றிய விழிப்புணர்வு என்பது இல்லாமல் தான் இருக்கிறார்களாம். இவர்கள் இதற்கு கூறும் முக்கிய காரணமே இதனை பற்றி விழிப்புணர்வு இல்லாமை மற்றும் நேரமின்மை என்பது தான். பொதுவாக இரு சக்கர வாகன பாலிசியில் இரு வகை உள்ளது. ஓன் டேமேஜ் பாலிசி (Own Damage policy) மூன்றாம் நபர் பாலிசி (Third party insurance) ஓன் டேமேஜ் பாலிசி இந்த ஓன் டேமேஜ் பாலிசியில் விபத்து என்று மட்டுமில்லாமல் மழை - வெள்ளம், தீ, திருட்டு என்று எந்த வடிவத்தில் வாகனத்துக்குச் சேதம் நிகழ்ந்தாலும், அந்தப் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்க வழி செய்வதுதான்…
Read More