செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

வளர்ச்சிப் பாதையில் தமிழக மின் வாரியம்! 3 ஆண்டுகளில் 2,788 மெகாவாட் உற்பத்தி !!

வளர்ச்சிப் பாதையில் தமிழக மின் வாரியம்! 3 ஆண்டுகளில் 2,788 மெகாவாட் உற்பத்தி !!

தமிழக மின்வாரியம் வளர்ச்சிப்பாதையில், பயணித்து வருகிறது. கடந்த முன்று ஆண்டுகளில், பல்வேறு திட்டங்களால், 2,788 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழக மின்வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் என, மறு சீரமைக்கப்பட்டு, நுகர்வோருக்கு மின் சேவை வழங்கி வருகிறது. மாநிலத்தில், மொத்தம், மூன்று கோடியே மூன்று லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர். மாநில மின் தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், 18 ஆயிரத்து 500 மெகாவாட் மின் நிறுவு திறனை பெற்றுள்ளது. இது தவிர, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களான காற்றாலை, சூரிய சக்தி, தாவரக்கழிவு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக, 13 ஆயிரத்து 395 மெகாவாட் மின் நிறுவுத் திறன் பெற்றுள்ளது. இந்த மின் பகிர்மான கட்டமைப்பு, 1,770 துணை மின்நிலையங்கள், 3.23 லட்சம் பகிர்மான மின்மாற்றிகள், 34 ஆயிரத்து…
Read More
உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி ! முடக்கினார் டொனால்ட் டிரம்ப் !

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி ! முடக்கினார் டொனால்ட் டிரம்ப் !

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அடுத்த அதிரடியாக உலக சுகாதார நிறுவனத்துக்கான (WHO) நிதியை முடக்குவதாக அறிவித்துள்ளார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்.சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா வைரஸால் மிக மோசமான அழிவுகளை சந்தித்து உள்ளது அமெரிக்கா.இந்த நிலையில் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு நிறுவனம் மீது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். சீனாவுடன் கை கோர்த்துக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது எனவும் சீறி இருந்தார் டிரம்ப். மேலும் அந்த அமைப்புக்கான நிதியை நிறுத்தப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்திருந்தார். இதற்கும் உலக சுகாதார நிறுவனம் பதிலடி கொடுத்திருந்தது.இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் தனது கடமையை செய்ய தவறிவிட்டது என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா மிக உக்கிரம் - உயிரிழந்தோர்…
Read More
பத்திரிகைகள் குரலை ஒடுக்க முடியாது ! உச்ச நீதிமன்றம் !!

பத்திரிகைகள் குரலை ஒடுக்க முடியாது ! உச்ச நீதிமன்றம் !!

டில்லியில், கடந்த மாதம், தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற பலர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியது குறித்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக, ஜமாத் உலேமா ஹிந்த் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், பத்திரிகைகளில் ஒரு பிரிவினர், கொரோனா பரவலுக்கு, தப்லிக் ஜமாத் கூட்டம் தான் காரணம் என்பது போல, பொய் செய்திகளை வெளியிட்டு, சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றன. இது, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் மீதான குற்றச்சாட்டாக பார்க்கப்படுகிறது. எனவே, இது தொடர்பான செய்திகளை வெளியிட, பத்திரிகைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.,பாப்டே தலைமையிலான அமர்வு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரித்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு: பத்திரிகைகளின் குரலை நாங்கள் ஒடுக்க மாட்டோம். அதனால், இடைக்கால தடை விதிக்க முடியாது. இந்த வழக்கில், இந்திய பிரஸ் கவுன்சிலை சேர்க்குமாறு, மனுதாரர் விண்ணப்பிக்கலாம்.…
Read More
ஜன்தன் வங்கி கணக்கு வங்கிகளில் குவிந்த மக்கள் கூட்டம் !

ஜன்தன் வங்கி கணக்கு வங்கிகளில் குவிந்த மக்கள் கூட்டம் !

நாடு முழுதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அவசிய தேவை இல்லாமல், வாடிக்கையாளர்கள் நேரில் வர வேண்டாம் என, வங்கிகள் அறிவுறுத்தி உள்ளன.இந்த நிலையில், ஜன்தன் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட, மத்திய அரசின் உதவித் தொகையையும், முதியோர் உதவித் தொகையையும் எடுக்க, வங்கிகளில், நேற்று கூட்டம் அலைமோதியது.வங்கி அதிகாரிகள் கூறியதாவது:ஜன்தன் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட, மத்திய அரசின் உதவித் தொகையை பெற, வாடிக்கையாளர்கள், அதிக அளவில் வந்தனர்.இதேபோல, முதியோர் உதவித் தொகை பெற, முதியோர்கள், நேற்று அதிகளவில் வந்தனர். இதுதவிர, தொடர்ந்து, மூன்று நாட்கள் வங்கி விடுமுறை விடப்பட்டதும், வாடிக்கையாளர்கள் கூட்டம், அதிகளவில் வந்ததற்கு, ஒரு காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர். காலாவதியான கணக்குஉயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் துவங்கிய, ஜன்தன் வங்கிக் கணக்குகளை, வாடிக்கையாளர்கள் முறையாக பராமரிக்கவில்லை.இதனால், பெரும்பாலானோர் கணக்குகள், காலாவதியாக விட்டன. அந்த கணக்கை மீண்டும் செயல்படுத்த, கணக்கில் குறைந்த தொகையை செலுத்த வேண்டும். இதற்கு, வாடிக்கையாளர்களின்,…
Read More
தன்னார்வலர்கள் உணவு வழங்க தடையில்லை ! முதல்வர் பல்டி !!

தன்னார்வலர்கள் உணவு வழங்க தடையில்லை ! முதல்வர் பல்டி !!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொது மக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது. அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து பாராட்டியதே தவிர, நிவாரணம் வழங்க எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அப்போதைய சூழ்நிலையில், பொது மக்கள் கூடுவதற்கு எந்த ஒரு தடை உத்தரவும் கிடையாது. ஆனால் தற்போது, இந்த பேரிடர், கொடிய வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவுகளை எல்லோரும் அறிவோம். இந்தத் தொற்று யாரிடம் உள்ளது, அது எப்போது, யாருக்கு யார் மூலம் பரவும் என தெரியாதநிலையில், நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்தில் தான், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், இயல்பான நகர்வுகளுக்கும், தற்போது 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்…
Read More
ஊரடங்கின்போது வழக்கில் சிக்கியவர்கள் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ?

ஊரடங்கின்போது வழக்கில் சிக்கியவர்கள் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ?

ஊரடங்கின்போது வழக்கில் சிக்கியயோர் தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் எதிர்காலத்தை நினைத்து இளைஞர்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கை அமல்படுத்துவதில் மதுரையில் போலீஸார் இரவு, பகல் பாராமல் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சாலைகள் வெறிச்சோடியதால் இளைஞர்கள் பலர் ஜாலியாக சுற்றுகின்றனர். வேறு வழியின்றி அத்தியவாசியப் பொருட் கள் வாங்குவோர் தவிர, தேவையின்றி வாகனங்களில் சுற்றும் இளைஞர்கள் மீது பொது ஊடரங்கை மீறுதல் (சட்டப் பிரிவு 188), கொள்ளை நோயைப் பரப்புதல் வகையில் கவனக்குறைவுடன் நடப்பது (ச-பி 269), நோயைப் பரப்பும் நோக்கில் அலட்சியம் செய்தல் (ச-பி 270) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்நிலையில் தென்மண்டலத்தில் மதுரை புறநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை புறநகர், நாகர்கோவில், தென்காசி மாவட்டங்களில் நேற்று…
Read More
ஊரடங்கு நடவடிக்கை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள ஓராண்டாகும் ?

ஊரடங்கு நடவடிக்கை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள ஓராண்டாகும் ?

கரோனா வைரஸ் : அரச சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்போதைய ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து நிறுவனங்கள் மீள்வதற்கு மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்று சிப்காட், இருங்காட்டுக் கோட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் கே.பாலசுப்ரமணியன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ''எதிர்பாராத வகையில் இந்த ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. இதனால் மார்ச் மாதத்தில் 50 சதவீத அளவுக்குக் கூட வர்த்தகம் நடைபெறவில்லை. இதேபோல ஏப்ரல் 14 வரை கதவடைப்பு நீடித்துள்ளதால் ஏப்ரல் மாத விற்பனை, விநியோகம் எதுவும் நடைபெறாது.விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பை அளிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான். இத்தொழிலில் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலிருந்து பணியில் ஈடுபட்டிருப்போர் அதிகம். குறிப்பாக சென்னையைச் சேர்ந்தவர்கள் 25 சதவீதம் எனில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 25 சதவீதம், அதேசமயம் பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் 50…
Read More
கொரோனா என் உடலைத் தின்கிறது ? கண்ணீரை வரவழைக்கும் ஃபிரான்ஸ் தமிழரின் பதிவு ?

கொரோனா என் உடலைத் தின்கிறது ? கண்ணீரை வரவழைக்கும் ஃபிரான்ஸ் தமிழரின் பதிவு ?

ஃப்ரான்சில் வசிக்கும் இரயாகரன் ஒரு ஈழத் தமிழர். 'புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" எனும் பெயரில் அரசியல் சிந்த்aனைகளைக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரப்பி வருகிறார். அவர் தற்போது கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டு ஃப்ரான்சில் வீட்டிலேயே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவர் மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளார். 2 குழந்தைகளும் பாதிக்கப்ட்டுள்ளனர். யாரேனும் ஒருவர் மரணமடைந்து மருத்துவமனையில் இடம் காலியானால்தான் இன்னொருவர் 'அட்மிட்' ஆகலாம் என்பதுதான் இந்த "வளர்ச்சி" அடைந்த நாடுகளின் இன்றைய நிலையும். இந்த இக்கட்டான நேரத்திலும் அவர் கீழ்கண்டவாறு சமூக உணர்வுடன் பேசுவது நம்மைக் கண்கலங்க வைக்கிறது : "எனது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ இந்த நாட்டில் மருந்தில்லை.என் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல…
Read More
இன்னொரு பயங்கரத்தை நோக்கி அமெரிக்கா ? எகிறும் வேலையிழப்புகள் ?

இன்னொரு பயங்கரத்தை நோக்கி அமெரிக்கா ? எகிறும் வேலையிழப்புகள் ?

ஒரு புறம் அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2, 40,000 வரை இருக்கலாம் என்ற அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் பொருளாதாரம் பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.அமெரிக்க தொழிலாளர் துறை சுமார் 1 கோடியே 30 லட்சம் பேர் இதுவரை வேலையிழந்துள்ளனர், இது பலதுறைகளையும் சேர்த்து என்றும் இப்படியே போனால் 2 மாதங்களில் 4 கோடி பேர் வேலையிழக்கலாம் என்றும் 2009 பொருளாதார நெருக்கடியை விட மோசமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்,வியாழக்கிழமை தரவுகளின் படி பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். பாந்தியன் மேக்ரோ இகனாமிக்ஸ் ஆலோசனை நிறுவனம் கூறும்போது, “இப்படிப்பட்ட பயங்கரத்தைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை” என்று வேதனை தெரிவித்துள்ளது. மேலும் 50 லட்சம் பேர் வேலையின்மையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடுகள் கோரியுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.கடந்த வாரம் வெளியான அறிக்கைகளின்படி 66 லட்சம் பேருக்கு வேலையிழப்பு…
Read More
‘கொரோனா’ பரிசோதனை இலவசம்’ ! உச்ச நீதிமன்றம் உத்தரவு !!

‘கொரோனா’ பரிசோதனை இலவசம்’ ! உச்ச நீதிமன்றம் உத்தரவு !!

'நாட்டில் உள்ள அனைவருக்கும், 'கொரோனா' பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்பட்டு வந்தன. தொற்று அதிகரிக்க துவங்கியதை அடுத்து, தனியார் பரிசோதனை கூடங்களும் பரிசோதனை மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு, 4,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கறிஞர் சஷாங் தியோ சுதி என்பவர், உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விபரம்:கொரோனா பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், தனியார் பரிசோதனை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு, சாமானிய மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.ஆனால், தனியார் பரிசோதனை மையங்களில் வசூலிக்கப்படும், 4,500 ரூபாய் கட்டணத்தை, அனைவராலும் செலுத்த முடியாத நிலை உள்ளது. முழு அடைப்பால், கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள சாமானிய மக்களுக்கு, இத்தொகை கடும் சுமையாக உள்ளது.இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை,…
Read More