விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், ‘கொரோனா’ முகாம்களாக மாற்றம்?

விற்பனையாகாத தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளை கொரோனா தனிமை முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார துறை துவங்கி உள்ளது.

தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 92 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். சுகாதாரத் துறைஇவர்களில், தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களை, தனிமை முகாம்களில் வைக்க வேண்டியது அவசியம். அடுத்து வரும் வாரங்களில், தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகள் தேவை அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை, அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, கட்டி முடிக்கப்பட்ட, அரசு கட்டிடங்களை, சுகாதார துறை ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு, விற்கப்படாமல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை, தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகளாக மாற்றுவது குறித்து, அரசு ஆராய்ந்து வருகிறது. இதற்காக, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம், இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘கிரெடாய்’ உடன், சுகாதார துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதில், 100 சதவீத வீடுகளும் விற்காமல் அல்லது ஒப்படைக்கப்படாமல் இருக்கும் வளாகங்களை மட்டுமே, கொரோனா முகாம்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால், இது தொடர்பான பேச்சு நடந்து வருவதாக, அதிகாரிகள் கூறினர்.

Related posts:

ஊடரங்கிற்கு பிறகு தொழில் நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை: நிதின் கட்கரி உறுதி

ஆபரண கைவினைத்திறனுக்காக வெண்கலப்பதக்கம் வென்ற சஞ்சய் பிராமானிக் - ஐ கௌரவித்த உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் !

மிஸ் டிபேட்டர் எனப் பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு கம்ப்யூட்டர் !

கும்பல் படுகொலைக்கு எதிராக பேசியவர்கள் மீது FIR ! பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம் !

தமிழக நீர் நிலைகள் இன்றைக்கு 39,202 ஆக குறைந்து விட்டது. !

மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் நடிகர் ராதாரவி!

ஆதார் பதிவு மையங்களில் ஏடிஎம் அட்டை வடிவில் பிளாஸ்டிக் ஆதார்அட்டை!

மேகேதாட்டு அணை; மத்திய அரசு அனுமதி கூடாது! வைகோ வலியுறுத்தல்