ஆரோக்யம்

யோகாசனம் # கழுத்து வலி # மூட்டு வலி # தீர்வு # வாயு முத்திரை #

யோகாசனம் # கழுத்து வலி # மூட்டு வலி # தீர்வு # வாயு முத்திரை #

https://youtu.be/J6DMHlHC5Fs உலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களும் உடல் ஆரோக்கியமாக , உள் மனம் அமைதியாக வாழ விரும்புகின்றனர் , உடலையும் , மனதையும் நல்வழிப்படுத்தும் கலை தான் பதஞ்சலி மஹரிஷி அருளிய யோகக் கலையாகும் . யோகக்கலையில் யோகாசனம் , பிராணாயாமம் போன்றவைகளை அனைத்து வயதினரும் பயில முடியாது . இதில் முத்திரைகள் என்ற ஒரு யோகக்கலை உள்ளது . இது அனைத்து வயதினரும் பயிற்சி செய்யலாம் . அனைத்து வித நோய்களுக்கும் நிரந்தர தீர்வு உண்டு , இந்த முத்திரை பயிற்சியை மன ஒருமைப்பாட்டுடன் தினமும் இரண்டு நிமிடங்கள் மூன்று தடவை பயிற்சி செய்தால் நல்ல பலன் உண்டு . இதில் ஒவ்வொரு முத்திரையும் , அதனால் ஏற்படும் பலன்களையும் , நேரில் வந்து கற்றுக் கொள்ளலாம். இதனை உங்கள் உடல் பிணிக்கேற்ப உரிய முத்திரையை தினமும் பயிற்சி செய்து வளமாக , நலமாக வாழுங்கள் . யோகக் கலைமாமணி…
Read More
திருச்சியில் முதல் முறையாக ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை  செய்யப்பட்டது. !

திருச்சியில் முதல் முறையாக ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. !

முதன்மை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், மேக்ஸ் கேர் மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் முகேஷ் ஜி மோகன், திருச்சியில் முதல் வெற்றிகரமான ரோபாட்டிக்ஸ் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை இன்று 62 வயதான நோயாளிக்கு நேவியோ ரோபாட்டிக்ஸ் அறுவை சிகிச்சை முறையைப் பயன்படுத்தி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ரோபாட்டிக்ஸ் உதவி அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலான நடைமுறைகளின் போது கூட அறுவை சிகிச்சை நிபுணருக்கு மேம்பட்ட துல்லியம், திறமை மற்றும் கட்டுப்பாட்டுடன் செயல்பட உதவுகிறது மற்றும் குறைந்த எலும்பு அகற்றப்படுவதை உறுதி செய்கிறது, இயற்கை உடற்கூறியலைப் பாதுகாக்கிறது மற்றும் நோயாளிக்கு சிறந்த அறுவை சிகிச்சைக்கு பிந்தைய விளைவுகளை எளிதாக்குகிறது (சிறந்த வலி இல்லாத இயக்கங்கள் உட்பட) இயல்பான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு திரும்பவும்விரைவான மறுவாழ்வுக்கும் உதவுகிறது. டாக்டர் முகேஷ் மோகன் கூறுகையில், “ரோபோடிக் அறுவை சிகிச்சை மேம்பட்ட கணினி தொழில்நுட்பத்தை திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்களின் அனுபவத்துடன்…
Read More
பிளாஸ்டிக் இல்லாத பேஸ்ட்!

பிளாஸ்டிக் இல்லாத பேஸ்ட்!

பல் துலக்க உதவும் பற்பசை மற்றும் பிரஷ் ஆகியவை இரண்டும் பிளாஸ்டிக் இல்லாமல் தயாரிக்க முடியுமா? கனடாவை சேர்ந்த சேன்ஜ் டூத்பேஸ்ட், அதை சாதித்திருக்கிறது. வீடுதோறும் இருக்கும் பற்பசை குழாய்களை அகற்றுவதுதான் அதன் நோக்கம். இதற்கென பல வடிவங்களில் பரிசோதித்து, கடைசியில் மாத்திரை வடிவில் பற்பசையை தயாரித்துள்ளது சேன்ஜ். இதில் ஒரு மாதிரியை எடுத்து வாயில் போட்டு, சற்றே தண்ணீரை வாயில் தேக்கிக் கடித்து, பிரஷ் செய்தால் உடனே பற்பசை போல நுரை வாயில் கொப்பளிக்கும். இந்த மாத்திரையில் செயற்கை வேதிப் பொருள் எதுவும் இல்லை என இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பல் துலக்கும் பிளாஸ்டிக் பிரஷ்ஷுக்கு மாற்றாக மூங்கில் நார்களையும் மூங்கில் கைப்பிடியும் கொண்ட இயற்கை பிரஷ்ஷையும் சேன்ஜ் உருவாக்கியிருக்கிறது. டன் கணக்கில் குப்பையில் சேரும் பிளாஸ்டிக் பேஸ்ட் குழாய்களையும், பிஷ்களையும் இனி நிச்சயம் தவிர்க்க முடியும்.
Read More
கீரை உப்புமா செய்வது எப்படி?

கீரை உப்புமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : கீரை – 1 கட்டு இட்லி அரிசி – 2 கப் துவரம் பருப்பு – அரை கப் தேங்காய் துருவல் – கால் கப் காய்ந்த மிளகாய் – 5 சீரகம் – கால் ஸ்பூன் கடுகு, உளுந்தம்பருப்பு – சிறிதளவு மோர் மிளகாய் – 5 கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: கீரையை சுத்தம் செய்து சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.இட்லி அரிசி, துவரம்பருப்பை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.பின்பு இட்லி அரிசி, துவரம் பருப்பு, மிளகாய், தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவுடன் நறுக்கிய கீரை, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும். இட்லி ஆறியதும் உதிர்த்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, மோர் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து…
Read More
இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும். மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணத்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும். எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது. குத்தலா? எரிச்சலா? மனம்…
Read More
கடலைமாவின் மருத்துவ குணங்கள் !

கடலைமாவின் மருத்துவ குணங்கள் !

அழகை பேணி காப்பதில் கடலை மாவிற்கு முக்கிய பங்கு உள்ளது. பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு. தினமும் முக அழகிற்கு, கடலை மாவு பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து பாதிப்பு உள்ள சரும பகுதிகளில் நன்கு பூசவும். பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். சருமம் வழுவழுப்புடன் திகழும். கடலை மாவில் சிறிது நீரை கலந்து, முகத்தில் பூசி கொள்ளுங்கள். நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு செய்து வருவதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.குளிக்கும் போது சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தி வந்தால்,சருமம் வளுவளுப்பாக இருக்கும்.கடலை மாவுடன், மஞ்சள் மற்றும் 1 ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி கொள்ளுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து, முகத்தை கழுவினால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.கடலை மாவுடன் பாதாம்…
Read More
குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா  வேண்டாமா?

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா வேண்டாமா?

குளிர்ச்சியில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்.குளிர்காலம் வந்துவிட்டது. இந்த பருவம் உணவு ஆர்வலர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒருபுறம், இந்த பருவத்தில் பல சுவையான பழங்கள் மற்றும் காய்கறிகள் வரும் போது, ​​மறுபுறம் இது போன்றவற்றை சாப்பிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அத்தகைய ஒரு விஷயம் தயிர். நீங்கள் குளிர் காலத்தில் தயிர் சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்று கவலைப் படுகிறீர்களா? தயிர் ஊட்டச் சத்துக்கள்! தயிர் கால்சியத்தின் நல்ல மூலமாகும். இதில் நன்மை செய்யும் பாக்டீரியா மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. தயிர் வைட்டமின்கள், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றிலும் நிறைந்துள்ளது. புரதம், கால்சியம் தவிர, தயிரில் ரைபோஃப்ளேவின் உள்ளது. உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி 12 போன்ற சத்துக்களும் தயிரில் காணப்படுகின்றன. ஆயுர்வேதம் என்ன சொல்கிறது! ஆயுர்வேத நிபுணர் அசுதோஷ் கவுதம் கூறுகையில், "குளிர்காலத்தில்…
Read More