ஆரோக்யம்

இஞ்சி–இய‌ற்கை வைத்தியம்!

இஞ்சி–இய‌ற்கை வைத்தியம்!

உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி பல் ரோகப்பொடி சுக்கு, காசிக்கட்டி, கடுக்காய்த் தோல், இந்துப்பு இவைகளைச் சமமாக எடுத்துலர்த்தி இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு சதா பல்லில் எகிறுகளில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டு இருக்கும் அன்பர்கள், சிரித்தால் அழுதால் பல்லில் இரத்தம் வருபவர்கள், தினம் இரண்டும் முறையும் பல்துலக்கி வர இவையாவும் ஒழிந்து போகும்.* உணவு செரிக்க எளிய வழி!செரிமானக் கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்டதும் பறித்த (உலராத) ஒரு இஞ்சித் துண்டை வாயில் போட்டு மெல்ல வேண்டும். கடும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி முதலியவற்றால் அவதிப்படுகிறவர்களும் இதே போல் ஒரு சிறு துண்டை மென்று தின்றால் போதும். இது வயிற்றையும், குடல் பகுதிகளையும் நன்கு பாதுகாக்கிறது. இந்தப் பகுதிகளில் வலி இருந்தாலும் உடனே குணமாகி விடுகிறது. சாப்பிட்ட உணவும் செரிமானம் ஆகிறது. வாந்தி ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. இப்படிச் சாப்பிடப்படும் சிறு துண்டு உடனே நன்கு உமிழ்…
Read More
உங்க டூத் பேஸ்ட்டில் ஆரோக்கியம் இருக்கா?

உங்க டூத் பேஸ்ட்டில் ஆரோக்கியம் இருக்கா?

அந்தக் காலத்தில் திருமணத்துக்கு முன்பாக பெண் பார்க்கச் செல்லும்போது பெண்ணைப் பாடச் சொல்வார்கள். வாய் திறந்து பாடும்போது பெண்ணுக்கு எல்லாப் பற்களும் நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனிப்பார்கள். பற்களுக்கு நம் முன்னோர்கள் கொடுத்த முக்கியத்துவம் அப்படிப்பட்டது. ''பற்கள் சரியில்லை என்றால், உண்ணுகின்ற உணவில் இருக்கும் ஊட்டச் சத்து முழுமையாக நமது உடலுக்குக் கிடைக்காது. பற்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்'' என்கிறார் பல் மருத்துவர் ஜானகிராமன். ''எந்த ஒரு நல்ல பழக்கத்தையும் இளம் வயதிலேயே துவங்குவதுதான் நல்லது. அதனால்தான், முன்னேற்றம் அடைந்த பல நாடுகளிலும் பற்கள் பராமரிப்பு பற்றி பள்ளி, வீடு எனப் பல இடங்களிலும் சொல்லித்தருகிறார்கள். பற்கள் முளைக்க ஆரம்பித்ததில் இருந்து, சுமார் ஆறேழு வருடங்கள் வரை பிள்ளைகளுக்குப் பெற்றோர் பிரஷ் செய்துவிட வேண்டும். சிறுவயது முதலே பற்களைச் சரிவரக் கவனிக்காமல் விட்டுவிட்டால், சொத்தைப் பல், ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் கூச்சம் போன்ற பிரச்னைகள் வரும். அதனால்,…
Read More
சென்னை வாசிகள்  சராசரி இந்தியர்களை விட அதிக அளவில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் !!

சென்னை வாசிகள் சராசரி இந்தியர்களை விட அதிக அளவில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் !!

மகிந்திரா குழுமத்தின் முதலாவது “மாற்று முறை” (ALTERNATIVISM) (1) ஆய்வில் சென்னையை அடிப்படையாகக் கொண்ட 90 சதவீத மக்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் ஆபத்துக் குறித்துத் தங்களுக்குத் தெரியும் என்று பதில் அளித்தனர். தேசிய அளவில் இவ்வாறு பதில் அளித்தவர்களின் சராசரி 75 சதவீதமாக உள்ளது. நீர் சேமிப்பு மற்றும் அது தொடர்பான சுற்றுச் சூழல் விவரங்கள் குறித்து தங்களுக்கு விழிப்புணர்வு உள்ளது என்றும் அது தொடர்பான தகவல்கள் தெரியும் என்றும் சென்னையைச் சேர்ந்த 69 சதவீதம் பேர் கூறினர். தேசிய அளவில் இவ்வாறு கூறியவர்களின் சராசரி 70 சதவீதம். சென்னையில் நான்கில் மூன்று பேர், இந்தியா உட்பட பல நாடுகளில் எதிர்காலத்தில் மிகப் பெரிய தண்ணீர் பிரச்சினை ஏற்படக் கூடும் என்று கவலை தெரிவித்தனர். தேசிய அளவில் இவ்வாறு தெரிவித்தவர்களின் சராசரி 68 சதவீதம். இந்த கவலைகளை எல்லாம் தீர்க்கும் வகையில் நடைமுறை…
Read More
நிமோனியா யாரைத்தாக்கும்? ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்!

நிமோனியா யாரைத்தாக்கும்? ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்!

காற்றின் மூலமாக நுரையீரலில் சில கிருமிகள் பரவுவதால் ஏற்படும் நிமோனியா தாக்குகிறது. இந்தக் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவி விடும் ஆபத்து இருக்கிறது. இதனால், அதிகக் காய்ச்சல் ஏற்படும். ஆரம்பத்தில் சாதாரண சளித் தொந்தரவு போலத் தோன்றினாலும், தொடர்ந்து காய்ச்சல், இருமல், நெஞ்சு வலி, மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை ஏற்பட்டு, கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் போய்,பாதிப்புக்குள்ளானவர்களைக் கவலைக்கிடமாக்கிவிடும். நிமோனியா காய்ச்சலின் பாதிப்புகளையும் அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளையும் நமக்கு நினைவூட்டும் விதமாக நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. சளி என்றாலே பலருக்கும் அழற்சி, அருவருப்பு ஏற்படுவது இயல்பு. சாதாரணமானவர்களுக்கே இப்படியென்றால், சைனஸ், தூசி மற்றும் நுரையீரல் அழற்சி உள்ளவர்களின் நிலையைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. குறிப்பாக சைனஸ், நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு கோடை, குளிர், மழைக்காலம் என எந்தப் பருவகாலமும் விதிவிலக்கு இல்லை. நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை…
Read More
உடல் எடையை  அதிகரிப்பது எப்படி ?

உடல் எடையை அதிகரிப்பது எப்படி ?

ஒவ்வொருவருக்கும் தன் உடல் சம்பந்தமாக ஒவ்வொரு பிரச்சனை சிலருக்கு குண்டாக இருப்பது பிரச்சனை, சிலருக்கு ஒல்லியாக இருப்பது பிரச்சனை என கருதுகிறார்கள். இதுவரை எப்படி உடல் எடையை குறைப்பது என பார்த்தோம். இன்று உடல் எடையை எப்படி அதிகரிப்பது என பார்க்கலாம். அதோடு சேர்த்து நம் உடலுக்கு தேவையான சத்துக்களையும் சேர்த்து பெறலாம். முதலில் வேர்க்கடலை. இதனை தினமும் அரை கப் வறுத்து. அல்லது அவித்து சாப்பிட்டு வந்தால் போதும். அதில் உள்ள புரத சத்து நம் உடல் எடையை அதிகரிக்கவும், நமக்கு நல்ல சத்துக்களையும் கொடுக்க வல்லது. வேர்க்கடலையை மிட்டாயாகவும் சாப்பிடலாம். அடுத்து, எள். இளச்சவனுக்கு எள் கொடு என அற்புத பழமொழியே உள்ளது. காரணம் இதில் உள்ள நல்ல கொழுப்புகள் எளிதில் நம் உடல் எடையை அதிகரிக்கவல்லது. இந்த எள்ளையும் மிட்டாய் போல செய்து சாப்பிடலாம். மூன்றாவது உலர் திராட்சை. ஒரு கைப்பிடி உலர் திராட்சை சாப்பிட்டால் போதும்.…
Read More
டெட்டாலை தோலில் தடவி  எரிச்சல் ஏற்பட்டால், ‘கெமிக்கல் லூக்கோடெர்மா’ என்ற நோய் ஏற்படும்.?

டெட்டாலை தோலில் தடவி எரிச்சல் ஏற்பட்டால், ‘கெமிக்கல் லூக்கோடெர்மா’ என்ற நோய் ஏற்படும்.?

​​​​​நம் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி எடுத்துக் கொள்வது அவசியம்.அதிலும் கிருமி நாசினியை பயன்படுத்தாவிட்டால் காயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு,அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.அதே சமயம் அந்த கிருமி நாசினியை எப்படி பயன்படுத்த வேண்டும், இல்லையேல் என்ன பாதிப்பு ஏற்படும் என்று பலருக்கும் தெரிவதில்லை. பொதுவாகவே முதலுதவிப் பெட்டிகளில் கிருமி நாசினியான Dettol இருப்பதை பலரும் பார்த்திருக்கலாம்.இதனை காயத்தில் கிருமித்தொற்று ஏற்படாமலிருக்க நாம் பயன்படுத்தி வருகிறோம்.ஆனால் இந்த டெட்டாலை நாம் நேரடியாக நம் தோலில் தடவினால்,கடும் எரிச்சல் ஏற்படுவதோடு அது நம் தோலை முற்றிலுமாக பாதித்துவிட வாய்ப்பு இ்ருக்கிறது.அதிக அளவில் டெட்டாலை தோலில் தடவி நீண்ட நேரம் எரிச்சல் ஏற்பட்டால், அது 'கெமிக்கல் லூக்கோடெர்மா' என்ற நோயையும் ஏற்படுத்தக்கூடும். எனவே,1 லிட்டர் தண்ணீரில் 10ml டெட்டாலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.எவரேனும் தவறாகப் பயன்படுத்தி கடும் எரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது.அனைத்து மருந்துப்பொருட்களிலும் பின்பக்கம் பயன்படுத்தும் விதிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.அதனை…
Read More
முழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ‘ ரோபோசெஃப் ‘ ( ROBOCHEF ) !

முழுவதும் தானியங்கி முறையில் சமையல் செய்யும் ‘ ரோபோசெஃப் ‘ ( ROBOCHEF ) !

ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கும் . அந்த அறை , பெண்களின் உழைப்பை அதிகம் கேட்கக்கூடிய இடமாக இருக்கிறது . பெண்களின் சிந்தனையை அதிகளவில் ஆக்கிரமித்திருக்கும் அறையாகவும் திகழும் . இந்த சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலையளிக்கவேண்டும் என்று உணவுத்துறை விஞ்ஞானிகள் , ஏனைய தொழில்நுட்ப துறையினருடன் இணைந்து இன்றளவிலும் போராடி வருகிறார்கள் . அவர்கள் மிக்சி , கிரைண்டர் , ஜுஸ் மேக்கர் , காபி மேக்கர் , காய்கறிகளை வெட்டும் கருவி , இன்டக்ஷன் ஸ்டவ் என தனித்தனியாக கருவிகளைக் கண்டுபிடித்து பெண்களுக்கு உதவி செய்தாலும் , அவர்கள் சமையலறையில் செலவிடும் நேரத்தைக் குறைக்க முடிவதில்லை . வீட்டுச் சாப்பிட்டிற்காக ஏங்குபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது . பிடித்த உணவுகளை சாப்பிடுவதற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிட்டாலும் அதில் கிடைக்கும் சுவை , நாம் எதிர்பார்ப்பதைவிட குறைவாகத்தான் இருக்கிறது என்றும்…
Read More
உணவை குறைத்து விட்டு நொறுக்குத் தீனிகளை எடுத்து கொள்வது சர்க்கரை நோயை அதிகரிக்கவே செய்யும். !

உணவை குறைத்து விட்டு நொறுக்குத் தீனிகளை எடுத்து கொள்வது சர்க்கரை நோயை அதிகரிக்கவே செய்யும். !

உணவை குறைத்து சாப்பிட்டு நொறுக்குத்தீனிகளை எடுத்துகொள்வது சர்க்கரை நோயை அதிகரிக்கவே செய்யும்.மைதா நீரிழிவை அதிகப்படுத்தும். போதாக்குறைக்கு மலச்சிக்கல், உடல்பருமன், செரிமானக் கோளாறும் உண்டாக்கும். நீரிழிவு இருப்பவர்களைக் கண்டாலே ஆச்சரியமாக பார்ப்பதும், அது வெறும் பணக்காரர்களுக்கு மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டிருப்பது அரத பழசான விஷயம். இன்று உலகளவில் அதிகப்படியான மக்கள் நீரிழிவு நோயைக் கொண் டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்கிறது ஆய்வுகளும். இன்றைய நிலையில் நீரிழிவு இருக்கு என்பவர்களை விட எனக்கு நீரிழிவு இல்லை என்று சொல்பவர்களைத்தான் ஆச்சரியமாக பார்க்கிறோம்.குணப்படுத்த முடியாத நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே அதைக் கட்டுப்படுத்தவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கட்டுப்படுத்தப்பட்டாலும் அதை நிரந்தரமாக கட்டுக்குள் வைக்கவும் ஒரு தனிப்போராட்டம் தேவையாக இருக்கிறது.இந்நிலை இப்படியே தொடர்ந்தால் நீரிழிவு கட்டுக்குள் வைப்பவரையும், கட்டுப்படுத்த முடியாதவர்களையும் தனியாக பிரிக்கும் நிலை உருவாகும் காலம் வெகு விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்றும் நம்மில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்…
Read More
சர்க்கரை நோய்க்கு சுரைக்காயை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு குறையும்..!

சர்க்கரை நோய்க்கு சுரைக்காயை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு குறையும்..!

சர்க்கரை நோய் குணப்படுத்த முடியாத ஒரு கோளாறு. இப்பிரச்சனையை நம்மால் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியுமே தவிர, முற்றிலும் குணப்படுத்த முடியாது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது சற்று கடினம் தான். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ அறிவியலில், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் அளவை மேம்படுத்தவும் உதவும் சில வழிகள் உள்ளன. அதில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பான நன்மை அளிக்கும் ஒரு காய் தான் சுரைக்காய். சர்க்கரை நோய் இருப்பவர்கள் சுரைக்காயை சாப்பிட்டால் அல்லது சுரைக்காய் ஜூஸ் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். சுரைக்காயில் 92 சதவீதம் நீர்ச்சத்து மற்றும் 8 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறியாக கருதப்படுகிறது. சுரைக்காய் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின்…
Read More
நவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பாதிப்பு ? விஞ்ஞானிகள் அதிர்ச்சி !

நவீன தொழிநுட்பங்களால் கண்களுக்கு பாதிப்பு ? விஞ்ஞானிகள் அதிர்ச்சி !

நவீனத் தொழில்நுட்ப உலகில் அனைவரும் இயற்கை, சுற்றுச் சூழலைக் காட்டிலும் செல்போனுடன் தான் அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே ஸ்மார்ட் போன்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் பல.செல்போன்களால் இளைஞர்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், வெளியுலகு தொடர்பு இல்லாமல் கணினி, செல்போன் உள்ளிட்ட தொழில் நுட்பங்களை அதிகளவு பயன்படுத்துவதன் மூலம் உலகில் 220 கோடி பேருக்குப் பார்வை திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மருத்துவரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்காஸ் சீசா, உலகெங்கிலும் உள்ள 220 கோடி மக்கள் ஒருவித கண் பிரச்சனையால் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.பல நாடுகளில் வயதான மக்கள்தொகை மற்றும் கண் மருத்துவத்திற்கான போதிய அணுகல், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், இந்த எண்ணிக்கை அதிகளவு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உட்கார்ந்த தன்மை போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்நிலை…
Read More