06
Jun
தமிழ்நாட்டில் எப்போதாவது, எங்காவது கிறிஸ்துவர்கள் இலவச பைபிளோ அல்லது துண்டு பிரசுரமோ கொடுக்கும் போது இந்துக்கள் அதை கண்டிக்கும் காணொளியோ, செய்தியோ வருவது வாடிக்கைதான்.. ! இச்சூழலில் இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை விமர்சிக்கும் வகையிலும், மற்ற மதங்களை குறை சொல்லும் விதமாகவும் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து இசக்கி கார்வண்ணன் என்ற டைரக்டர் எந்த மதமாக இருந்தாலும், அனைவரும் ஒன்று என்ற சிந்தனையோடு மனிதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இணைந்து வாழும் இந்து & கிறிஸ்துவர்களிடையே மத மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் வகையில் இப்படத்தை வழங்கியுள்ளார். கதை என்னவென்றால் மதமாற்றம் நிகழும் சம்பவம் அந்த பகுதியில் ஜரூராக நடக்கிறது. இதனால் அடிக்கடி இரு சமூகத்தினருக்கிடையே மோதல் வெடிக்கிறது. இந்த சம்பவத்தால் மர்மான சம்பவம் நடக்கிறது. அதுபற்றி விசாரிக்க அப்பகுதியில் போலீஸ் முகாமிடுகிறது. பலத்த காவல் இருந்தபோதும் மீண்டும் கொலை சம்பவம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த கொலைகள்.இரண்டு…
