சினிமா

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில்.. இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியதாவது.. இந்த திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம். பல வருடக் கனவு இது. இப்படத்தின் அனைத்து கலைஞர்களும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்து உழைத்தார்கள், அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களுக்கும் நன்றி. விநியோகஸ்தர் காசிநாதன் மற்றும் கண்ணன் சார் படம் பார்க்காமலே விநியோகிக்க ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி. இப்படம் முடிவதற்கு பணம் தந்தவர்கள் சடையாண்டி கஜேந்திரன், விஸ்வை கருப்பசாமி இருவர் தான். அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது.…
Read More
தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்கக் கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த சந்தானம், ஒருகட்டத்தில் காமெடியன் ரோல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு, ஏ1 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றாலும், கடந்த சில ஆண்டுகளாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. கடந்த ஆண்டு டிடி ரிட்டன்ஸ் படம் மூலம் மீண்டும் கதாநாயகன் அவதாரம் எடுத்த சந்தானத்திற்கு, இந்த ஆண்டு சக்சஸ்புல் ஆண்டாகவே அமைந்துள்ளது. அவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் ‘இங்க நான் தான் கிங்கு’. ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரயாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால…
Read More
பான் இந்தியன் படமான ’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின்மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

பான் இந்தியன் படமான ’டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின்மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

நடிகர்கள் உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத் நடிப்பில் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் சீக்குவலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக நடிகர் உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தை விட டபுள் மடங்கு ட்ரீட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நடிகர் ராமின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தன்னைச் சுற்றியுள்ள சில விஞ்ஞானிகளுடன் இருக்கும் கதாநாயகனின் கதாபாத்திரத்தை விவரிக்க சில மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும் வாய்ஸ் ஓவருடன் டீசர் தொடங்குகிறது. பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் உஸ்தாத் ஐஸ்மார்ட் ஷங்கர் என்ற டபுள் ஐஸ்மார்ட்டாக ராம் மீண்டும் வந்துள்ளார். இதில் காவ்யா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகை…
Read More
நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் ‘ஹரா’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !

நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் ‘ஹரா’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !

நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும் தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவருமான நடிகர் மோகனின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரா' படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாகக் நடைபெற்றது. ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்டு நடிகர் மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் மோகன் தனது கையால் பல ஏழை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கு தேவையான பை, நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் பல ஏழைப் பெண்களுக்குத்…
Read More
ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் !

ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் !

ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் பொருத்தமான குரல்கள், பிரத்யேக இசை மற்றும் சிறப்பு சப்தங்கள் உடன் சிலிர்க்க வைக்கும் கேட்கும் அனுபவத்தை ரேடியோ ரூம் வழங்கும் ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் (Regional Story Tellers) குழுமத்தின் தலைவர் AL. வெங்கடாசலம் எனும் வெங்கிக்கு ஊடக வட்டாரங்களில் அறிமுகம் தேவையில்லை. விஜய் தொலைக்காட்சி மற்றும் புது யுகம் தொலைக்காட்சிகளில் தலைவராக இருந்த இவர், சுயாதீன தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தரமான பல நிகழ்ச்சிகளை உருவாக்கியவர் ஆவார். வெங்கியின் பரந்த அனுபவத்தினாலும் சீரிய திறமையினாலும் ரேடியோ ரூம் என்ற புதிய முன்முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. ரீஜனல் ஸ்டோரி டெல்லர்ஸ் குழுமத்தின் புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம் செயலி சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இயக்குநர் சசி, இயக்குநர் ஸ்டான்லி, இயக்குநர் கௌதம் வாசுதேவ்…
Read More
தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘குற்றம் கடிதல் 2’ திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்

தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘குற்றம் கடிதல் 2’ திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்

60 வயது ஆசிரியரை சுற்றி நடக்கும் கதையின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிற‌து விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான‌ ஜே எஸ் கே, தற்போது 'குற்றம் கடிதல் 2' படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார். 2015ம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெரும் வரவேற்பையும் பெற்ற ஜே எஸ் கே தயாரிப்பில் உருவான‌ 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ் கே ஜீவா எழுதி இயக்குகிறார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது. ஆர் பார்த்திபன் நடித்த 'புதுமை பித்தன்', கார்த்திக் நடித்த 'லவ்லி' படங்களை இயக்கிய ஜீவா, 'அழகிய தமிழ் மகன்', சமீபத்தில் வெளியான 'அநீதி', ஜே எஸ் கே இயக்கத்தில் உருவாகி வரும் 'ஃபயர்' உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆவார். 'அழகிய தமிழ் மகன்' திரைப்படத்தின் கதையும்…
Read More
‘லெவன்’ படத்திற்காக டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ !

‘லெவன்’ படத்திற்காக டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ !

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்' பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையிலும் இதுவரை இணைந்து பணிபுரியாத இசையமைப்பாளர் டி இமானும் பிரபல பாடகர் மனோவும் முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள 'லெவன்' திரைப்படத்திற்காக இமான் இசையில் மனோ பாடியுள்ளார். உணர்ச்சிப் பூர்வமான இந்த பாடல் குறித்து பேசிய மனோ, "இமான் இசையை தொடர்ந்து ரசித்து வருகிறேன். அவர் இசையமைத்துள்ள பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக பாடுவது மிக்க மகிழ்ச்சி. உயிரோட்டமிக்க இந்த பாடல் பெரிதும் வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்," என்றார். இது குறித்து பேசிய இசையமைப்பாளர் டி இமான், "மனோ அவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை என்ற ஏக்கம் பல காலமாக இருந்தது, இன்று அது பூர்த்தியாகி உள்ளது அவரது குரலுக்கு…
Read More
சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’ !

சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’ !

புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்த இயக்குநர் சீனுராமசாமி தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றது. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன. இதற்கு ஒரு தீர்வாக வந்தவைதான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் தற்போது முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் துவங்கியுள்ளது. இதற்கு ஒரு புதிய தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘ஓடிடி பிளஸ்’ என்கிற புதிய ஓடிடி தளம். அதே சமயம் இதன் பெயருக்கு ஏற்றபடி…
Read More
இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது !

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது !

2024 மார்ச் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஆண்டுக்கான நிதிசார் முடிவுகள் வங்கியின் உலகளாவிய வணிகம், முந்தைய ஆண்டைவிட 12% உயர்ந்து ₹12.22 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது நிகர இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹1447 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹2247 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 55% வளர்ச்சி கண்டிருக்கிறது.வரிக்கு முந்தைய இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹1452 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹3057 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 111% உயர்ந்திருக்கிறது.செயல்பாட்டு இலாபம், மார்ச்’23-ல் பதிவான ₹4016 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹4305 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 7% உயர்ந்திருக்கிறது நிகர வட்டி வருவாய், மார்ச்’23-ல் பதிவான ₹5508 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹6015 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 9% உயர்ந்திருக்கிறது கட்டணம் சார்ந்த வருவாய், மார்ச்’23-ல் பதிவான ₹914 கோடி என்பதிலிருந்து மார்ச்’24-ல் ₹970 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 6% உயர்ந்திருக்கிறது சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA),…
Read More
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’13’ படத்திற்கு  டப்பிங் பேசி தொடங்கிவைத்தார்!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’13’ படத்திற்கு டப்பிங் பேசி தொடங்கிவைத்தார்!

இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ். மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியது. இன்று (4.5.2024) 13:13 மணியளவில் ஜிவி பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார். படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது, "'ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை…
Read More