06
Aug
படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின் நலனை காப்பதே ஐபி கிளைம்ப் சேவையின் நோக்கம் அதி நவீன தொழில்நுட்பம் மூலம் திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் பெரும் மாற்றத்தையும் வருவாய் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்ட ஃபிப்செயின் டெக்னாலஜி (Fipchain Technology) நிறுவனம், தனது புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com) சேவையின் மூலம் இந்திய திரையுலகில் உள்ளடக்க வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து தனது சேவைகளை விரிவுப்படுத்தும் ஃபிப்செயின் டெக்னாலஜி, ஐபி கிளைம்ப் (IP Climb) எனும் புதிய சேவையை தொடங்கி உள்ளது. படைப்புகள் மற்றும் உள்ளடக்கத்தின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ள இன்றைய காலகட்டத்தில் இதில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் ஐபி கிளைம்ப் தொடங்கப்பட்டுள்ளது. திரைப்பட மற்றும் ஊடக அறிவுசார் சொத்துகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து வகை சட்ட உதவிகளையும் வழங்கும் ஐபி கிளைம்ப், படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும்…
