27
Oct
மத்திய ரயில்வே துறையின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., பொதுமக்களின் வசதிக்காக, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகை காலங்களில் பெருமளவு மக்கள் ரயிலில் பயணிப்பதால், ஜெனரல் கோட்டாவில் டிக்கெட் கிடைக்காமல் பலரும் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், தட்கல் ரயில் முன்பதிவில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி., 1. பொதுவாக தட்கல் ரயிலுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓபன் செய்யப்படும் நிலையில், தற்போது அதற்கான நாட்களை குறைத்து ஒரு நாளுக்கு முன்னர் முன்பதிவுகள் தொடங்கப்படும் என்ற புதிய விதிமுறையை அறிவித்துள்ளது ஐ.ஆர்.சி.டி.சி., 2. ஒரு நாளுக்கு முன்னர் தொடங்கப்படும் தட்கல் ரயிலுக்கான முன்பதிவுகள், ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணி அளவிலும், நான்-ஏசி வகுப்புகளுக்கு காலை 11 மணி அளவிலும் தொடங்கப்படும். 3. தட்கல் ரயில்களில் முன்பதிவு செய்பவர்கள், ஓரோரு வகுப்புகளுக்கும் ஓர்…
