14
Aug
151 ரயில்களை தனியார்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதிஅளித்துள்ளது இதில் தமிழகத்தின் பல்வேறு வழித்தடங்களில் 24 ரயில்களை தனியார்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால கட்டணங்கள் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 நவீன ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டத்தில் தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பங்களை ரயில்வே அமைச்சகம் வரவேற்று உள்ளது. 35 கோடி மதிப்புள்ள இத்திட்டம் நிறைவேற்றப்பபட்டு 2023ம் ஆண்டு ஏப்ரலில் நாடு முழுவதும் தனியார் ரயில்கள் ஓடும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது என்றும் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான கட்டணம் விமானம் போக்குவரத்துக்கு இணையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழத்தில் பல்வேறு வழித்தடங்களில் 24 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவற்றின்…